‘அமரம்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி, சுரேஷ் மேனன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- திருஅருள் கிருஷ்ணா.
ஒளிப்பதிவாளர் :- பரத் குமார்.
படத்தொகுப்பாளர் :- ஆர்.ஸ்ரீராமர்.
இசையமைப்பாளர் :- மிக்கி ஜெ .மேயர்.
தயாரிப்பு நிறுவனம் :- திவ்ய சேத்ரா பிலிம்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- நிர்மலா ராஜன், , C.R. ராஜன்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் குமார் (S2 மிடியா), புவன் செல்வராஜ்,
வெளியீட்டு தேதி :-ஆகஸ்ட் 28, 2026.
ரேட்டிங் :- 3.25/5.
மலை அடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகன் ராஜன் தேஜஸ்வர் தன்னுடைய வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் பணத்திற்காக மட்டுமே கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, பணத்திற்காக கூலிப்படையாக செயல்பட்டு எம் எல் ஏ நாகிநீடு, நண்பர் கதாநாயகி ஐரா அகர்வால், தந்தை சுரேஷ் மேனனை கதாநாயகன் ராஜன் தேஜஸ்வர் மற்றும் நன்பர்கள் இனைத்து கொலை செய்து விடுகிறார்கள்.
தனது தந்தையை கொலை செய்த கதாநாயகன் ராஜன் தேஜஸ்வரை பழிவாங்குவதற்காக கதாநாயகி ஐரா அகர்வால். தேடிச் செல்கிறார்.
எனது தந்தையை கொலை செய்த கதாநாயகன் ராஜன் தேஜஸ்வரை பழி தீர்த்து கொள்வதற்காக சென்ற இடத்தில் கதாநாயகி ஐரா அகர்வால். எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆபத்தையும் சந்திக்கிறார்.
கதாநாயகன் ராஜன் தேஜஸ்வரை பழி தீர்த்து கொள்வதற்காக சென்ற இடத்தில் கதாநாயகி ஐரா அகர்வால். அவர் சந்தித்த அதிர்ச்சியும் ஆபத்தும் என்ன?
கதாநாயகன் ராஜன் தேஜஸ்வரை கதாநாயகி ஐரா அகர்வால். பழி தீர்த்துக் கொண்டாரா? தீர்த்துக் கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த ‘அமரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘அமரம்’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக கதாநாயகன் ராஜன் தேஜஸ்வர் நடித்திருக்கிறார்.
அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜன் தேஜஸ்வர் நீண்ட தலைமுடி தாடி, என முரட்டுத் தோற்றம், அதிகம் பேசாத உடல்மொழி என கதாபாத்திரத்திற்கு எற்ற நடிப்பை மிகவும் கம்பீரமாக கொடுத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவரது கதாபாத்திரம் கதாநாயகனுக்கு ஏற்ற காட்சிகள் அனைத்தும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி திரைப்படத்தின் வேகத்தை கூட்டுகிறது.
இந்த ‘அமரம்’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஐரா அகர்வால் தனது தந்தையை கொன்றவனை பழிவாங்கும் பெண்ணாக தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
மரியம் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி, சுரேஷ் மேனன், ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பரத் குமாரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்
இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி கொண்டு அவர்களை பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையாக மாற்றும் முதலாளிகளின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் அருள் கிருஷ்ணா.
மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான சமூக அக்கறை திரைப்பட ரசிகர்கள் கவனத்தை கண்டிப்பாக ஈர்க்கும் .













