’வெள்ளகுதிர’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ், ரெஜின் ரோஸ், மெலடி, உத்திரி விஜயகுமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சரண் ராஜ் செந்தில் குமார்.

ஒளிப்பதிவாளர் :- ராம் தேவ்.

படத்தொகுப்பாளர் :- பிரதீப் – சரண் ராஜ் செந்தில் குமார்.

இசையமைப்பாளர் :- பரத் ஆசிகவன்.

தயாரிப்பு நிறுவனம் :- நிஜம் சினிமா.

தயாரிப்பாளர் :- ஹரிஷ் ஓரி.

ரேட்டிங் :- 3.5./5.

கதாநாயகன் ஹரிஷ் ஓரி இருந்த ஊரில்  கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாத சூழ்நிலையில் அனைவரிடமும் அசிங்கப்பட்டு  அவமானப்பட்டு தன் மனைவி அபிராமி போஸ்,  மற்றும் மகனுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, சாலை வசதியே இல்லாத தனது தாத்தா வாழ்ந்த மலை கிராமத்திற்கு குடும்பத்துடன் செல்கிறார்.

அங்கிருக்கும் அவருடைய உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு மலை போல் இருந்தது பொருட்களை மலைக்கு கிழே கொண்டு வருவது என்னும் சுமை தூக்கும் வேலையை செய்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் ஹரிஷ் ஓரி திருவிழா மற்றும் விஷேசங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படும், அங்கு மலை பகுதியில் மட்டுமே கிடைக்கும் ஒருவிதமான அதிகளவில்  போதை கொடுக்க கூடிய சாராயத்தை வியாபாரமாக்கி அதிகளவில் பணம்  சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்.

 இதற்கிடையே, அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி,   அனைவரின நிலத்தையும் அபகரித்து, அந்த மக்களை அங்கிருந்து அந்த மலை கிராமத்தில் இருந்து வெளியேற்றி, அப்பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஊர் தலைவரின் திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க முயற்சிக்கிறார் கதாநாயகன் ஹரிஷ் ஓரியின் மனைவி கதாநாயகி அபிராமி போஸ் இருவரது முயற்சியால் அந்த கிராமத்திற்கு என்ன  பாதிப்புகள் ஏற்பட்டது என்ன நல்லது நடந்தது.

இதனால் அந்த மலை கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது.

கதாநாயகன் குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழும் பின்னணி என்ன ? என்பதுதான் இந்த ‘வெள்ளகுதிர’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘வெள்ளகுதிர’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் ஓரி, நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

கதிர் கதாபாத்திரத்தில் தனது உள்ளத்தில் மறைந்திருக்கும் தீய சிந்தனைகளை அவ்வபோது வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு, தனது மனைவியை  பிரச்சனைகளில் சிக்க வைக்கும் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

கதாநாயகன் ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாகவும், அளவான நடிப்பாலும் கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

முன்னாள் ஊர் தலைவர், மலை கிராம மக்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் சிலர் பரிட்சயம்  இல்லாத முகமாகவும்,  இருக்கிறார்கள்.

ஆனால், அனைவரும் அந்த மலை கிராம மக்களாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் விதத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராம் தேவ், ஒளிப்பதிவு மூலம்  ஒளிப்பதிவு காட்சிகளை அனைத்தும் மிகவும் தரமாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பாடல்கள் இல்லை என்றாலும் தனது எளிமையான பின்னணி இசை மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசாமல், அந்த நிலப்பரப்பில் தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு, ஒரு சஸ்பென்ஸ் கமர்ஷியல் திரைப்படமாகவும் இயக்கிருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார்.

மொத்தத்தில் ‘வெள்ளகுதிர’ திரைப்படம் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

error: Content is protected !!