‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- சித்து சித், தர்ஷிகா, ரித்விகா, வேலராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் ஜனகிராமன், சாப்ளின் பாபு, மனோஜ், டேனி தயாள், அலெக்ஸ், சோனி, ஆர்த்தி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாலாஜி.
ஒளிப்பதிவாளர் :- மணிகண்டன் பி.கே.
படத்தொகுப்பாளர் :- ராஜா ஆறுமுகம்.
இசையமைப்பாளர் :- சக்தி பாலாஜி.
தயாரிப்பு நிறுவனம் :- கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி.
தயாரிப்பாளர் :-
மக்கள் தொடர்பு :-
ரேட்டிங் :- 4./5.
தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் இருக்கும் மலை கிராமம் பகுதியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, வருடத்தின் ஏழாவது மாதத்தில், அதிகளவில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
காட்டுப் பகுதியில் உள்ள வனதேவதையின் சாபத்தால் தான் இப்படிப்பட்ட அதிக அளவில் ஆண்கள் இறந்து கொண்டிருப்பதாக நம்பும் கிராம மக்கள் வனதேவதைக்காக பல பூஜைகளை செய்து வருகிறார்கள்.
அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் அச்சப்படும், ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஏழாவது மாதத்தின் முதல் தேதியில், அந்த கிராம கிராமத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு புதிய காவல்துறை ஆய்வாளராக கதாநாயகன் சித்து தனது மனைவி கதாநாயகி தர்ஷிகா மற்றும் கைக்குழந்தையுடன் அந்த கிராமத்திற்கு வந்து பதவி ஏற்கிறார்.
ஆனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் சொல்லும் பழைய கதைகளை கதாநாயகன் சித்து நம்ப மறுக்கிறார்.
இதற்கிடையே, அந்த கிராமத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் மாயமாகி விடுகிறார்.
அந்த இளம் பெண் ஒருவர் மாயமான வழக்கை குறித்து கதாநாயகன் சித்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த பெண் ஒரு இளைஞரை தேடி சென்றதாக தகவல் தெரிய வருகிறது.
அந்த மாயமான இளம் பெண் தேடி சென்ற இளைஞரை காவல்துறையினர் தேடி சென்றால் அந்த இளைஞரும் மாயமாகியிருப்பது காவல்துறையினருக்கு தெரிய வருகிறது.
இந்த நிலையில் மாயமான இளம் பெண்ணின் தோழியும் மாயமாகி விட, மாயமான இந்த மூவரும் ஒரு இடத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்படுகிறார்கள்.
கொல்லப்பட்டு சடலமாக கிடக்கும் சடலங்களில் எந்தவிதமான தடயங்களும் இல்லாமல், மூன்று கொலை வழக்கையும் கதாநாயகன் சித்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அவரது மனைவியும், ஒரு ஆணும் கதாநாயகன் சித்து விட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.
கேரளா சிறையில் இருந்து தப்பித்த சைக்கோ கொலையாளி தான் இந்த தொடர் கொலைகளை செய்திருப்பதாக சொல்லி காவல்துறையினர் இந்த கொலை வழக்கை முடித்து வைக்கிறது.
இந்த நிலையில், கேரளா சிறையில் இருந்து தப்பித்த சைக்கோ கொலையாளி தான் இந்த தொடர் கொலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதை கதாநாயகன் சித்து, இதை நம்ப மறுக்கிறார்.
இந்த இந்த தொடர் கொலைகளில் உள்ள பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க கதாநாயகன் சித்து களத்தில் இறங்கிறார்.
அந்த கொலையாளி யார் ?,
இந்த தொடர் கொலைகளில் செய்து கொண்டிருக்கும் சைக்கோ கொலையாளியை கதாநாயகன் சித்து கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக சித்து நடித்திருக்கிறார்.
அறிமுக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சித்து, முதல் திரைப்படத்திலேயே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார்
அனைத்து காட்சிகளிலும் அதிகப்படியாக பேசாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பயணிக்க கூடிய காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை கதாநாயகன் சித்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் சித்து மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தர்ஷிகா, மலை கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்விகா, காவல்துறை காவலர் நடித்திருக்கும் பிரதீப், ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிழல்கல் ரவி, காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், சர்ச் பாதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள் டி.சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருந்தாலும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி.கே, ஒளிப்பதிவு மூலம் ஒரே லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகளை திரைப்படமாக்கியிருந்தாலும், பதட்டப்பட வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பதட்டத்தை மூலம் திரைப்படம் பார்ப்பவர்களை பீதியடைய வைத்திருக்கிறார்.
ஒரு புத்தகம், அதை தொடர்ந்து அந்த கிராமத்தில் நடக்கும் மர்மம் மற்றும் தொடர் கொலைகள் சைக்கோ கொலையாளி என திரைப்படத்தில் மூன்று கதைகள் மிகவும் அருமையான திரைக்கதையும் மூன்று கதைகளுக்கும் தொடர்பு இருந்தாலும், அந்த தொடர்புகளை தாண்டி, தொடர் கொலைகள் மற்றும் அதன் விசாரணையை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் செம கிரைம் திரில்லராக இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி.
மொத்தத்தில், ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் மர்மம், தொடர் கொலைகள், சைக்கோ த்ரில்லர் அம்சங்கள் என அனைத்தையும் சரியான விறுவிறுப்புடன் கலந்து, பார்வையாளர்களை இறுதிவரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஒரு சுவாரஸ்யமான படைப்பாக அமைந்துள்ளது.











