டார்க்’ (Dark) திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ருன், நட்டி நட்ராஜ், கே.பாக்யராஜ் VTV கணேஷ், இந்துமதி மணிகண்டன்,சிபி சக்ரவர்த்தி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கல்யாண் கே ஜெகன்.
ஒளிப்பதிவாளர் :- ரவி சக்தி டி.எஃப்.டி.
படத்தொகுப்பாளர் :- கதிரேஷ் அழகேசன்.
இசையமைப்பாளர் :- மனு ரமேசன்.
தயாரிப்பு நிறுவனம் :- எம்ஜி ஸ்டுடியோஸ், 5 ஸ்டார் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ஏ.பி.வி மாறன், கணேஷ் கே பாபு.
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
ரேட்டிங் :- 3.5./5.
சென்னையில் வேலை தேடி கொண்டு இருக்கும் கதாநாயகன் அஜய் கார்த்தி, மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கும் கே.பாக்யராஜ் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியேறுகிறார்.
கொஞ்ச நாளைக்கு முன்பு அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த மூன்று நபர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் எரித்துக் கொண்டும் இறந்த நிலையில், வீட்டுக்குள் அமானுஷ்ய நிகழ்வுகள்! சில கோர உருவங்களை கதாநாயகன் அஜய் கார்த்தி, உயிர் பயம் வருகிறது.
கதாநாயகன் அஜய் கார்த்தி, மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் அந்த வீட்டின் உரிமையாளரான கே. பாக்யராஜ் கடன் சுமையால் தவிப்பதை அறிந்த கதாநாயகன் அஜய் கார்த்தி, கே. பாக்யராஜ் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அங்கேயே அந்த லிட்டில் தங்குகிறார்.
ஆனால் தினமும் இரவு நேரங்களில் தொடங்கும் அமானுஷ்ய சம்பவங்கள், கதாநாயகன் அஜய் கார்த்தி, வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விடுகின்றன.
கதாநாயகன் அஜய் கார்த்தி, குடியிருக்கும் அந்த வீட்டில் உண்மையில் என்ன நடந்தது? அங்கு சுற்றித் திரியும் அமானுஷ்யத்தின் நோக்கம் என்ன? அந்த லிட்டில் குடியிருக்கும் கதாநாயகன் அஜய் உயிருடன் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாரா?, வெளியேறவில்லையா?, என்பதுதான் இந்த ‘டார்க்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘டார்க்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அஜய் கார்த்தி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்தி தனது கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருப்பது திரையில் தெரிகிறது.
ஆரம்பத்தில் காட்சிகளில் தைரியமாக இருக்கும் இளைஞனாகவும், அதன் பின்னர் அமானுஷ்ய அனுபவங்களால் மனதளவில் உடைந்து போகும் மனிதராகவும் இயல்பான மாற்றத்தை தன்னுடைய நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
கே. பாக்யராஜின் கடைசி திரைப்படம் என்பதால், அவரது ஒவ்வொரு காட்சியும் அவரது இயல்பான நடிப்பு திரைப்படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், குறைந்த காட்சிகளில் வந்தாலும் திகில் தருணங்களில் அவரது
சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகி அஞ்சனா நேத்ரன், சஸ்பென்ஸ் நிறைந்த கதாபாத்திரத்தில் வந்து கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாகிறார்.
மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுக்கான பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தியின் ஒளிப்பதிவு, மூலம் இருள் சூழ்ந்த வீட்டின் மர்மத்தை ஒவ்வொரு ஃப்ரேமும் ஹாரர் உணர்வை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அதிகரிக்க வைத்துள்ளார்.
இசையமைப்பாளர் மனோ ரமேஷனின் பின்னணி இசை, திரைப்படத்தின் மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
வழக்கமான பேய் கதையை வெறும் ஜம்ப் ஸ்கேர்களாக மட்டும் இல்லாமல், மர்மம் மற்றும் உணர்ச்சிகளுடன் இணைத்து சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் கல்யாண் கே. ஜெகன்.
டார்க்’ ஒரு சாதாரண பேய் திரைப்படம் இல்லை, திகில், மர்மம், உணர்ச்சி ஆகிய மூன்றையும் சமநிலையுடன் கலந்து, ரசிகர்களை இறுதிவரை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கே. ஜெகன்.
மொத்தத்தில், டார்க் திரைப்படம் ஹாரர் திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு சிறந்த ஹாரர் திரைப்படமாக அமைந்துள்ளது











