‘சாத்தான் தீ டார்க்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- மோன பத்ரே, சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, எஃப்ஜெ, ஐரா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மணிகண்டன் ராமலிங்கம்.

ஒளிப்பதிவாளர் :- பாலா G ராமசாமி.

படத்தொகுப்பாளர் :- ராஜ்குமார், கோவை அபிஷேக்.

இசையமைப்பாளர் :- அஷ்வின் கிருஷ்னா.

தயாரிப்பு நிறுவனம் :- பாப்பின்ஸ் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர் :- எட்வர்ட்.

மக்கள் தொடர்பு :- ஸ்ரீ வெங்கடேஷ்.

ரேட்டிங் :-  2.5./5.

கடவுள் நம்பிக்கை இல்லாத மக்கள் அனைவரும் சாத்தான் வழிபாட்டின் மீது நம்பிக்கை வைப்பதோடு, சாத்தானுக்கு நரபலி கொடுத்தால்தான் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளை தாண்டி மனிதர்களையும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் பலி கொடுக்கிறார்கள்.

சாத்தானுக்கு நரபலி கொடுத்துக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த கிராமத்தில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அசம்பாவிதங்கள் நடக்கிறது.

அந்த கிராமத்தில் பலர் மர்மமான முறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்கும் காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் மற்றும் உண்மைகள் தெரிய வருகிறது. 

இந்த நிலையில், கதாநாயகி ஐராவின் தாய் மோன பத்ரே, விசித்திரமாக முறையில் நடந்துக் கொள்வதோடு, தன்னை யாரோ ஒருவர் இயக்கிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்.

திடீரென்று தனது உடலை காயப்படுத்திக் கொள்பவர், அந்த காயங்கள் ஆறுவதற்குள் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களில் ஈடுபடுகிறார்.

கதாநாயகி ஐராவிற்கு ஏதோ பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ளும் கதாநாயகன் எஃப்.ஜெ, எப்படியாவது கதாநாயகி ஐராவை காப்பாற்றுவதற்காக அவரது வீட்டுக்கு செல்லும் போது, அங்கு கொடூரமான உருவம் ஒன்றை காண்கிறார்.

கதாநாயகி ஐராவின் வீட்டுக்குள் சென்ற கதாநாயகன் எஃப்.ஜெ, அந்த உருவத்தை பார்த்த பிறகு அவரிடத்திலும் பல்வேறு விசித்திரமான உணர்வுகள் ஏற்பட, இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அந்த கிராமத்தில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மர்ம மரணங்களின் பின்னணியை தெரிந்துக் கொள்ளும் காவல்துறை அதிகாரி மற்றும், கதாநாயகன் எஃப்.ஜெ, மர்ம மரணங்களை தடுத்து நிறுத்துவதற்கான வழி என்னவென்று தெரிந்துக் கொள்கிறார்கள்.

மர்ம மரணங்களை தடுத்து நிறுத்துவதற்கான வழி என்னவென்று தெரிந்துக் கொள்வதற்கான இந்த வழி. என்ன ?, அதை  காவல்துறை அதிகாரி மற்றும், கதாநாயகன் எஃப்.ஜெ, செய்து முடித்தார்களா? செய்து முடிக்கவில்லையா ?, கதாநாயகி ஐராவின் வீட்டில் இருக்கும் அந்த மிகக்கொடூரமான உருவம் யார்?, அந்தக் கொடூரமான உருவத்திற்கும் மர்ம மரணங்களுக்கும் என்ன தொடர்பு ? என்பதுதான் இந்த ‘சாத்தான் தீ டார்க்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சாத்தான் தீ டார்க்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக எஃப்.ஜெ, நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் எஃப்.ஜெ, பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் தனது வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார். 

இந்த ‘சாத்தான் தீ டார்க்’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஐரா, நடித்துள்ளார்.

 கதாநாயகியாக நடித்திருக்கும் ஐரா, பள்ளி மாணவி கதாபாத்திரத்திலும் ஆபத்தான தன் தாயிடம்  சிக்கிக்கொண்டு பறிதவிக்கும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பதற வைத்து விடுகிறார்.

ஐராவின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், மோன பத்ரே, கதையில் உள்ள முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோன பத்ரே, அதிரடியான நடிப்பின் மூலம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அலாரம் வைத்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் நெருங்கும் போது வந்தாலும், கதையின் மையப்புள்ளி உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், மற்றும் ஊர் மக்கள் என பலர் புதுமுகங்களாக இருந்தாலும்  அனைவருமே மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி, ஒளிப்பதிவு மூலம் ஒரு சிறிய வீட்டை  வைத்தே ரசிகர்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி உள்ளார்.

இசையமைப்பாளர் அஷ்வின் கிருஷ்ணாவின் இசையில்   உயிரூட்டியிருக்கும் பின்னணி இசை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் நெஞ்சங்களை படபடக்க வைத்திருக்கிறார்.

தான் சொல்ல வந்ததை பார்வையாளர்கள் மனதில் பயம் ஏற்படும் வகையில் சொல்லியிருந்தாலும், தெளிவாக சொல்ல தடுமாற்றத்துடன் இயக்கியிருக்கிறார்  இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம்.

மொத்தத்தில்,  இந்த ‘சாத்தான்’ தீ டார்க்’ திரைப்படத்தை மிகவும் தெளிவாக கொடுத்திருந்தால் இந்த திரைப்படம் ஹாரர்  திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

error: Content is protected !!