’அறிவான்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- அனந்த் நாக், ஜனனி குணசீலன், பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், குருமூர்த்தி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எஸ். அருண் பிரசாத்.

ஒளிப்பதிவாளர் :- யஸ்வந்த் பாலாஜி.

படத்தொகுப்பாளர் :- சத்யமூர்த்தி ஆர்.

இசையமைப்பாளர் :- கார்த்திக் எரா.

தயாரிப்பு நிறுவனம் :- எம்டி பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- துரை மகாதேவன்.

மக்கள் தொடர்பு :- ஏ ராஜா.

ரேட்டிங் :-  3./5.

மிகவும் நேர்மையான காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ஆனந்த் நாக், அவருடைய வேலையில் கண்ணியமாக இருக்கும் காரணத்தால் அடிக்கடி ஒவ்வொரு ஊருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு  நெய்வேலியில் உள்ள காவல் நிலையத்தில் புதிதாக காவல்துறை ஆய்வாளராக  பொறுப்பேற்றார்.
 
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என மிகவும் நேர்மையான காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ஆனந்த் நாக், பொறுப்பேற்ற ஓரிரு நாட்களில் அதே பகுதியில் சந்தேகப்படும் படியான மரணம் ஒன்று நடக்கிறது.

புதியதாக பொறுப்பேற்ற  காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ஆனந்த் நாக், இந்த மரணம் விபத்தா இருக்குமா இல்லை கொலையாக இருக்குமா என சந்தேகப்படும் நிலையில் விசாரணையை தொடங்குகிறார்.

முதல் கொலையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த நாள் அதே காட்டு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இரண்டு கொலை சம்பவங்களிலும் ஒரு கார் மட்டும் நடந்த இரண்டு கொலைக்கும் தொடர்புடையதாக இருப்பதால், இரண்டுமே கொலை தான் என்ற முடிவுக்கு காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ஆனந்த் நாக், வருகிறார்.

இந்த இரண்டு கொலைகளைப் பற்றிய  விசாரணையை தீவிரப்படுத்தும் போது, இந்த இரண்டு கொலை  சம்பவங்களில்  ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவர் மட்டும் தொடர்பு இருப்பதை காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ஆனந்த் நாக்கண்டுபிடிக்கிறார்.

அந்த கொலையில் சம்பந்தப்பட்ட பாலியல் பெண் தொழிலாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ஆனந்த் நாக், விசாரணையை நடத்துகிறார்.

பாலியல் தொழில் செய்யும் அந்த பெண் கொலை கொலையாளியை பற்றிய தகவலை காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ஆனந்த் நாக்,சொல்ல முயற்சிக்கும் போது, காவல் நிலையத்துக்குள் வைத்தே அந்த பாலியல் தொழில் செய்யும் அந்த பெண்ணை கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்து விடுகிறார்கள்.

காவல் நிலையத்தில் வைத்து அந்த கொலை நடந்ததால் கதாநாயகன் ஆனந்த் நாக்கிற்கு மேல் அதிகாரியிடம் இருந்து அழுத்தம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், அதே பகுதியில் மூன்றவதாக ஒரு கொலை நடக்கிறது.

ஏற்கனவே நடந்த இரண்டு கொலைகளை கிடைத்த சாட்சியத்தை கோட்டை விட்ட  நிலையில், நிருபரான கதாநாயகி ஜனனி உதவியுடன் தனது விசாரணையை கதாநாயகன் ஆனந்த் நாக் மீண்டும்  தொடங்குகிறார்

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கொலையை பற்றியும் கொலையாளி பற்றியும் அதன் பின்னணியையும் காவல்துறை ஆய்வாளரான கதாநாயகன் ஆனந்த் நாக், கண்டுபிடித்தாரா?,  கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘அறிவான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த அறியான் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆனந்த் நாக் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் நாக் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் மிகவும் கச்சிதமாக இருந்தாலும், காவல்துறை அதிகாரிக்கான கம்பீரமான நடிப்பை மட்டும் கொடுக்கப்படவில்லை.

இந்த அறியான் திரைப்படத்தில் கதாநாயகியாக ஜனனி குணசீலன், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஜனனி குணசீலனின் குற்றவியல் நிருபர் கதாபாத்திரம் திரைக்கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் பங்கு  வகித்திருக்கிறார்.

பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி என மற்ற கதாபத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜியின் ஒளிப்பதிவு மூலம், அனைத்து காட்சிகளிலும் தரம் நிறைந்திருக்கிறது. 

இசையமைப்பாளர் கார்த்திக். ஈ.ஆர்.ஏ இசையில் பாடல்கள் மற்றும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் வைத்துக் கொண்டு, எப்படி ?, எதற்காக ? யார் ?, ஆகிய மூன்று கேள்விகளை கதையின் மையமாக புள்ளியாக கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதையை எழுதி மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.அருண் பிரசாத்,

மொத்தத்தில், ‘அறிவான்’ பார்க்கலாம்.

error: Content is protected !!