டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- கலையரசன், கயல் ஆனந்தி,ஸ காளி வெங்கட், அஷ்னா சவேரி, ராகவ் விஜய், ‘ஜாங்கிரி’ மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எம். ஜனகிராமன்.
ஒளிப்பதிவாளர் :- பல்லு.
படத்தொகுப்பாளர் :- ராதாகிருஷ்ணன் தனபால், ‘இக்னேஷியஸ்’ அஸ்வின்.
இசையமைப்பாளர் :- நிவாஸ் கே. பிரசன்னா.
தயாரிப்பு நிறுவனம் :- திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் – சி.வி. குமார். –
மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.
வெளியீட்டு தேதி :- 13 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 3./5.
சில பயணங்கள் இலக்கைச் சென்றடைவதற்காக மட்டுமல்ல… வழியில் சந்திக்கும் மனிதர்களையும், அவர்கள் பகிரும் கதைகளையும் ரசிப்பதற்காகவும் அமைகின்றன! அப்படியொரு கலகலப்பான காதல் பயணமாக வந்திருக்கிறது ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’’.
சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு, காதல், பிரிவு, திருமணம், தவறான புரிதல்கள், எதிர்பாராத சந்திப்புகள் எனப் பல சுவாரசியமான அம்சங்களை ஒன்றிணைத்து நகர்கிறது திரைக்கதை. மணமகனாகப் பயணிக்கும் ராகவ் விஜய், காதல் தோல்வியின் நினைவுகளைச் சுமக்கும் கலையரசன், காதலைப் பற்றிய வித்தியாசமான பார்வையைக் கொண்ட காளி வெங்கட் எனப் பல கதாபாத்திரங்களின் சந்திப்புகள் கதைக்கு நகைச்சுவையையும் எதிர்பாராத திருப்பங்களையும் சேர்க்கின்றன.
தன்னுடைய திருமணத்திற்காக ராகவ் விஜய், சென்னையில் இருந்து ரயில் பயணத்தின் மூலம் பெங்களூர் செல்கிறார்.
கணவர் காளி வெங்கட் இடம் சண்டை போட்டு கொண்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்ற தனது மனைவி ஜாங்கிரி’ மதுமிதா, அழைத்து வருவதற்காக காளி வெங்கட் பெங்களூர் செல்கிறார்.
பல ஆண்டுகளாக தன்னை விட்டு விலகி இருக்கும் நன்கு காதலி கயல் ஆனந்தி தேடி செல்லும் கலையரசனும் அதே ரயிலில் பெங்களூர் பயணிக்கிறார்.
இவர்கள் மூன்று பேரும் ரயில் பயணத்தின் போது நண்பர்களாகி, மூவரும் தங்களது காதல் கதைகளை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
காளி வெங்கட் பள்ளியில் படிக்கும் காலத்தில் நடந்த காதல், கலையரசனுக்கு கல்லூரி காலங்களில் நடந்த காதல், ராகவ் விஜய்க்கு அலுவலக காதல் என்று மூன்று பேரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் காதலித்தாலும் மூன்று பேரின் காதலும் கை கூடாமல் இவர்களுடைய காதலும் கவுந்து போகிறது.
இவர்களுடைய மூவரின் காதல் கதை என்ன? எதனால் இவர்கள் மூவரின் காதல் கை கூடவில்லை இவர்களுடைய மூவரின் வாழ்க்கையில் என்ன நடந்தது ? மூவரின் காதல் கைகூடியதா?, கைகூடவில்லையா?, என்பதுதான் இந்த ‘டைடானிக்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கலையரசன், காளி வெங்கட் ராகவ் விஜய் மூவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
பள்ளியில் பல வருடங்களாக பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காளி வெங்கட் தன்னுடன் படிக்கும் கயல் ஆனந்தியை ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார்
காளி வெங்கட் தன்னுடைய கயல் ஆனந்தி மீது உள்ள காதல், அது கயல் ஆனந்தி தன்னை விட்டு பிரிவு போது பிறகான ஏக்கம் போன்றவற்றை மிக சிறப்பாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
கல்லூரியில் கயல் ஆனந்தியை காதலிக்கும் கலையரசன், குடும்ப சூழ்நிலை காரணமாக அவரை பிரிந்தாலும், அவரது நினைவாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் தனது உண்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளில் பார்வையாளர்கள் மனதை தொட்டு விடுகிறார்.
அலுவலகத்தில் ஆஷ்னா சாவேரியை கண்டதும் காதல் கொள்ளும் ராகவ் விஜய், அவருடனான மோதலால் அவரை பிரிந்து பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணக்க தயாரானாலும், முன்னாள் காதலால் கல்யாண வாழ்க்கையில் எதாவது பிரச்சனை வந்துவிடுமோ, என்ற குழப்பமான மனநிலையை தன் நடிப்பின் மூலம் மிகவும் அருமையாக நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மூவரும் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.
கதையின் நாயகியாக கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி, இருவர் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, கதாபாத்திரத்தின் குழந்தைத்தனமான குறும்புகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பான நடிப்பை கண்முன் நிறுத்துகிறார்.
மற்றொரு கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா சாவேரி, சில காட்சியை முதிர்ச்சியான உணர்ச்சிகளையும், சோகத்தையும் முகபாவனைகளில் நேர்த்தியான, தனது துடிப்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
இந்த டைட்டானிக் திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜாங்கிரி’ மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, சு.செந்தில் குமார்,
மற்ற அனைவரும் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை வழங்கி இருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி வந்து செல்லும் காட்சிகளில் முகம் காட்டியிருந்தாலும், கதை மற்றும் திரைக்கதையில் ஓட்டத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பல்லுவின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை அனைத்தும் வண்ணமயமாக திரைப்படமாக்கி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் மனதை கொள்ளை கொள்கிறது.
பின்னணி இசை காதல் உணர்வுகளை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் கடத்தும் விதத்தில் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உறவுகளுக்குள் நிகழும் சுவாரசியமான திருப்பங்கள் என மனித உணர்வுகளை நகைச்சுவையுடன் அணுகுகிறது ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’. வெவ்வேறு மனநிலைகளையும் காதல் அனுபவங்களையும் கொண்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஒன்றிணைத்து, அவர்களின் சந்திப்புகள் மற்றும் சம்பவங்கள் வழியாகக் கதையை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் எம். ஜனகிராமன்.
மொத்தத்தில், இந்த டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ காதல், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பங்கள் என ஒரு கலகலப்பான ரயில் பயணம்! காதல் கவிழ்ந்தாலும் சிரிப்பு கரை சேர்க்கும் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’!












