‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பாலா சரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா,  அம்ஜத் கான், மதுசூதன ராவ், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா சங்கர், ஏ. வெங்கடேஷ், தங்கப்பாண்டியன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பிரவீன் எஸ். விஜய்.

ஒளிப்பதிவாளர் :- அருள் வின்சென்ட்.

படத்தொகுப்பாளர் :- ஜி.கே. பிரசன்னா.

இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர் – வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல்.

மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM ).

வெளியீட்டு தேதி :- 20, நவம்பர்  2026.

ரேட்டிங் :-  3.5./5.

வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் வாழ்க்கையில் எதிர்பாராத திருமணம் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ், கதாநாயகன் சாருகேஷை திருமணம் செய்து கொண்டு, சென்னையில் உள்ள பிரபல வழக்கறிஞர் மிஷ்கினிடம் உதவியாளராக சேருகிறார்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ்க்கு ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் நிகழும் அந்தத் திருமணத்திற்குப் பிறகு, கணவர் மீது அவளுக்குக் காதல் உருவாகிறது.

இந்த நிலையில்  கணவர் மீது கொலைப்பழி சுமத்தப்படும் சூழல் உருவாகும்போது, அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தோள்களில் விழுகிறது.

அதன் பின்னர், நீதிமன்றத்தில் அவள் எதிர்கொள்ள வேண்டியவர் தனது மூத்த வழக்கறிஞர் மிஷ்கின் எதிர்த்து கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தனது கணவர் காப்பாற்றப் போராடுகிறார்.

இந்த நிலையில் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தன் கணவரைக் கொலை பழியில் இருந்து காப்பாற்றினாரா?,  காப்பாற்றவில்லையா?,

மூத்த வழக்கறிஞர் மிஷ்கினிடம் நீதிமன்றத்தில் வாதாடி கதாநாயகி கீர்த்தி சுரேஷ் வெற்றி பெற்றாரா? மூத்த வழக்கறிஞர் மிஷ்கின் வெற்றி பெற்றாரா? என்பதுதான் இந்த ‘சத்தியவான் சாவித்திரி’  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், சாவித்திரி என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் தன்னுடைய கணவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என போராடும் ஒரு மனைவியின் தவிப்பையும், எதார்த்தமான உடல்மொழி மூலம் ஒரு வழக்கறிஞரின் உறுதியையும் தன் கண்கள் மூலமாகவே நடிப்பை  மிகவும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், தனது முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து  வித்தியாசமான மேனரிசம் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பதோடு, மட்டுமல்லாமல் நீதிமன்ற காட்சிகளில் வாதாடுவது தனது ஒவ்வொரு அசைவுகளையும் அந்த கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாருகேஷ், காதல் உணர்வுகளையும், செய்யாத குற்றத்திற்காக அனுபவிக்கும் தண்டனையால் மனதில் ஏற்பட்ட தவிப்பையும் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷின் சீனியர் வழக்கறிஞராகவும்  அதன், பிறகு அவருடைய  உதவியாளராகவும் பயணிக்கும் பாலசரவணன், இறுக்கமான சூழல்களை கடந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பல  காட்சிகளில் சிரிக்கும் வைத்திருக்கிறார்.

ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா,  அம்ஜத் கான், மதுசூதன ராவ், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா சங்கர், ஏ. வெங்கடேஷ், தங்கப்பாண்டியன், உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் பொருத்தமான தேர்வாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், ஒளிப்பதிவு மூலம் நீதிமன்றக் காட்சிகளில்  திரைப்படம் ஆகியிருக்கும் விதம் விறுவிறுப்பைக் கூட்டி உள்ளது.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் காட்டிய வேகத்தையும் ஆழத்தையும் சிறப்பாக பயணித்திருக்கிறார்.

நாம் அனைவரும் அறிந்த வழக்கமான கதையை வேறு ஒரு விதமாக திரைக்கதையை கொடுத்து நீதிமன்ற வாதங்கள் கொண்ட கதைக்களம் என்றாலும், அதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் கையாண்டதோடு, மிகச் சிறப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய்,

மொத்தத்தில், இந்த ‘சத்தியவான் சாவித்திரி’ கணவனின் உயிரைக் காக்கும் போராட்டத்தில், ஒரு பெண் தனது ஆளுமையையும் நீதியின் வலிமையையும் நிரூபிக்கும் புதிய காலத்து சாவித்திரி காவியம்!”

CLOSE
CLOSE
error: Content is protected !!