’ரிவால்வர் ரீட்டா’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன்பாலு, சென்ட்ராயன், அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன், அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜே.கே. சந்துரு.
ஒளிப்பதிவாளர் :- தினேஷ் கிருஷ்ணன். பி.
படத்தொகுப்பாளர் :- பிரவீன். கே.எல்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனங்கள் :- பேஷன் ஸ்டுடியோஸ் & தி ரூட்.
தயாரிப்பாளர்கள் :- சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி.
ரேட்டிங் :- 3.5./5.
பாண்டிச்சேரியின் மிகப் பெரிய தாதாவான சூப்பர் சுப்பராயன், விலைமாது வீட்டிற்கு செல்வதற்கு பதில் தவறுதலாக அதே தெருவில் உள்ள கதாநாயகி கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் நுழைந்து விட தாதாவான சூப்பர் சுப்பராயன், வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் கீழே விழுந்து உயிரிழந்து விடுகிறார்.
தாதாவான சூப்பர் சுப்பராயன், மகனான சுனில், காணாமல் போன தனது தந்தை சூப்பர் சுப்பராயன், உன்னிடம் இருக்கும் அடியாட்களுடன் வைத்து தேட, மறுபக்கம் உயிரிழந்த தாதாவான சூப்பர் சுப்பராயன், உடலை கைப்பற்றி அதன் மூலம் ரூபாய் ஜநது கோடி பெறுவதற்காக சிலர் முயற்சி செய்கிறார்கள்.
இதற்கிடையே, தனது வீட்டில் இறந்து போன தாதாவான சூப்பர் சுப்பராயன் உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் குடும்பத்துடன் இணைந்து கதாநாயகி கீர்த்தி சுரேஷ் ஈடுபடும் போது, அவரால் பாதிக்கப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஜான் விஜய், கதாநாயகி கீர்த்தி சுரேஷை பழிவாங்க துடிக்கிறார்.
தாதாவான சூப்பர் சுப்பராயன், இறந்து போன பிணத்தின் பின்னாடி ஒரு கூட்டமும், கதாநாயகி கீர்த்தி சுரேஷ் பின்னாடி காவல்துறையும், காணாமல் போன தாதாவான சூப்பர் சுப்பராயன் தேடி அவருடைய மகனும் மேற்கொள்ளும் இந்த பயணம் இறுதியில் ஒரே புள்ளியில் இணைய, கதாநாயகி கீர்த்தி சுரேஷின் குடும்பத்திற்கு சாதகமாக அமைந்ததா? அல்லது பாதகமாக அமைந்ததா? என்பதுதான் இந்த ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தேசிய விருது பெற்ற கதாநாயகி கீர்த்தி சுரேஷ், இந்த முறை காமெடியில் கலக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் கதாநாயகி கீர்த்தி சுரேஷின் முயற்சி பல இடங்களில் கை கொடுத்திருக்கிறது.
மிகவும் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ், அளவான நடிப்பு கொடுத்து ரீவால்வர் ரீட்டாவாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறார்.
கதாநாயகி கீர்த்தி சுரேஷின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடன் இனைத்து நடிக்கும் நடிகர்களை தனது நடிப்பு திறமையால் ஓரம் கட்டிவிடுகிறார.
தெலுங்கு நடிகர் சுனில் கதாபாத்திரத்தில் மட்டுமின்றி தோற்றத்திலும் நடிப்பிலும் கொடூரமான வில்லனை போல் தெரிகிறார்.
அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் மேனரிசத்தையும், வசன உச்சரிப்பையும் ஆரம்பத்தில் பொறுத்துக் கொண்டாலும், அதையே திரைப்படம் முழுவதும் தொடர்வது சற்று ரசிகர்களுக்கு சளிப்படையை செய்கிறது. ன
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் கோஸ் வில்லனாக மிரட்டாமல் நகைச்சுவை நடிகராக சிரிக்க வைத்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான்விஜய் தன்னுடைய நடிப்பில் வில்லத்தனமும் இல்லாமல், நகைச்சுவையும் இன்றி, எதை எதையோ செய்து காட்சிகளை கடத்தியிருக்கிறார்.
சண்டை இயக்குனர் சூப்பர் சூப்பர் என் முதல் காட்சியில் வந்து அதன் பின்பு பிணமாகவே நடித்திருக்கிறார்.
வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் கதிரவன் பாலு மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்தது மட்டுமல்லாமல் திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிரவன் பாலு திரைப்படத்தில் தளபதி விஜய் போலவே குட்டி ஸ்டோரி சொல்லி நடிப்பு மூலம் அசத்தி இருக்கிறார்.
கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, செண்ட்ராயன், அகஸ்டின், அக்ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா.பி, ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாகவும், திரைப்படத்தை பிரமாண்டமாகவும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு ரெக்கை ஊட்டத்திற்கு மிக சிறப்பாக பயணித்திருக்கிறார்.
நாம் அனைவரும் பழக்கப்பட்ட ஒரு கதையை, மிகச் சிறப்பான திரைக்கதை அமைப்பு அதை வேறு விதமான கோணத்தில் சொல்லி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர் ஜெ.கே.சந்துரு.
இன்னும் இந்த கதையில் காமெடி அதிகமாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், ‘ரிவால்வர் ரீட்டா’ காமெடி கலாட்டாவை திரையரங்கில் சென்று குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.











