சினிமா தியேட்டர்களை இழுத்து மூட சினிமா அமைப்புகளின் பிரதிநிதிகள் முடிவு.

சைனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி மெதுவாக கொரோனா வைரஸ் இந்தியாவை நெருங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, இந்திய மாநிலங்களில் மொத்தம் 45 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஹரியானா 14 பேர், உத்தரப்பிரதேசம் 9, கேரளா 6 பேரை கொரோனா தாக்கியுள்ளது.

கேரளாவில் மார்ச்சில் நடைபெறவிருந்த 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளா மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 ஆம் தேதி வரை இழுத்து மூட முடிவெடுத்து உள்ளனர்.

பல்வேறு சினிமா அமைப்புகளின் பிரதிநிதிகள், கொச்சியில் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.