‘ஆல்பாஸ்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- துஷ்யந்த் ஜெயபிரகாஷ்,  பிக்பாஸ் ஜனனி, ‘அருவி’ மதன், ஜெயப்பிரகாஷ், செந்திக்குமாரி, சுப்ரமணிய சிவா, வினோதினி, பிரசன்னா பாலச்சந்திரன், மோகனா ஆர்  சத்யா, சஞ்சய், கோகுல், நிகில், ஷரத் லோகிதஸ்வா, ரோசன் பஷீர்,  இயக்குநர் மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மைதீன்

ஒளிப்பதிவாளர் :- தில்ராஜு.

படத்தொகுப்பாளர் :- எஸ். பாஸ்கர்.

இசையமைப்பாளர் :- ஜேம்ஸ் வசந்தன்.

தயாரிப்பு நிறுவனம் :- ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட்.

தயாரிப்பாளர் – மோகனா ஆர்.

மக்கள் தொடர்பு :- புவன் செல்வராஜ்.

வெளியீட்டு தேதி :- 09  அக்டோபர் 2026.

ரேட்டிங் :-  2.5/5.

தமிழ் திரைப்பட உலகில் வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தம், பகை, பழிவாங்குதல் என்ற பிம்பம் பல திரைப்படங்களில் தொடர்ந்து காட்டப்பட்டு வந்திருக்கிறது.

அந்த வழக்கமான பாதையிலிருந்து விலகி, வடசென்னை மக்களின் இயல்பான குடும்ப வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் பதிவு செய்ய முயன்றிருக்கும் திரைப்படம் ‘ஆல் பாஸ்’.

வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, ஒற்றுமையாக வாழும் மூன்று குடும்பங்களைச் சுற்றி நகர்கிறது.

திருமண விழாக்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் சமையல்காரர் ஜெயப்பிரகாஷ், செந்திக்குமாரி, ஒரு குடும்பமாகவும் அந்த ஏரியாவில் எந்த நேரமும் குடித்துக் கொண்டு பெயிண்டிங் வேலை செய்து வரும் சுப்ரமணிய சிவா, வினோதினி, மற்றொரு குடும்பமாகவும்  அந்த ஏரியாவில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கும் பாலச்சந்திரன், மோகனா ஆர் இவர்கள் ஒரு குடும்பமாகவும் இந்த மூன்று குடும்பங்களும், தங்களது குழந்தைகள் யார் யாருடையவர்கள் என்பது கூட பெரிதாக தெரியாத அளவுக்கு அடுத்தவர்கள் கண் படம் அளவில் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மூன்று குடும்பங்களும் மிகவும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும்  இவர்களுக்கு மூவருக்கும் ஒவ்வொரு மகன்கள் இந்த மூன்று இளைஞர்களும் +2 முடித்துவிட்டு நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய கனவாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த மூன்று குடும்பங்களுக்கும்  பொருளாதார நிலை அதற்கு மிகவும் தடையாக இருக்கிறது.

மூன்று இளைஞர்கள் ஆசைப்படும் அந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கல்லூரியில் சேர்க்க முடியாது என்பதால், அரசுக் கல்லூரியில் படிக்கும்படி மூவருடைய தாய் தந்தையரும்  அறிவுறுத்துகின்றனர்.

இப்படி உள்ள சூழ்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த மூன்று இளைஞர்களுக்கும் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது பால் ஒரு குடோனுக்குள் விழுந்து விட அந்த பாலை எடுக்க சொல்லும் போது ஒரு பெட்டி நிறைய 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கோடிக்கணக்கில் கிடைக்கிறது.

அந்தப் பணத்தை மூன்று இளைஞர்களும் வீட்டுக்கு எடுத்து வர மூவரின் பெற்றோர்களும் அந்த பணத்தை  பிரித்துக்கொள்ள முடிவு செய்யும் நிலையில், ஒரு இளைஞரின் தந்தை மட்டும் நமக்கு உழைக்காத பணம் வேண்டவே வேண்டாம் எனக் கூறுகிறார்

மூவரின் தாயின் இரண்டு தந்தையும் கோடி கணக்கில் கிடைத்த அந்த பணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர்.

அதே நேரத்தில், அந்தக்  கொடிக்கணக்கான பணம் அந்தப் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.வுக்குச் சொந்தமானது என்பது தெரிய வருகிறது.

எப்படியாவது அந்த எம்எல்ஏ கோடிக்கணக்கான பணத்தை கண்டுபிடித்து மீட்டுத் தர வேண்டும் என அவர் தனது ஆட்களிடம் கூறுகிறார்.

அந்த எம்எல்ஏ வின் கோடிக்கணக்கான பணத்தை கண்டுபிடித்தார்களா?,  கண்டுபிடிக்கவில்லையா!,

மூன்று குடும்பங்களுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை மூன்று குடும்பங்களும் பிரித்துக் கொண்டார்களா?, பிரித்துக் கொள்ளவில்லையா?,   என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.

இந்தத் திரைப்படத்தில் இளம் கதாநாயகன் தேவை என்பதால் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

அதேபோல் கதாநாயகி தேவை என்பதால் பிக்பாஸ் ஜனனி, மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருவி’ மதன், சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த ஆல் பாஸ் திரைப்படத்தில் மைய கதாபாத்திரங்களில்  ஜெயப்பிரகாஷ், செந்திக்குமாரி, சுப்ரமணிய சிவா, வினோதினி, பிரசன்னா பாலச்சந்திரன், மோகனா ஆர் அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

கவுன்சிலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யா, மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சஞ்சய், கோகுல், நிகில், ஷரத் லோகிதஸ்வா, ரோசன் பஷீர்,  இயக்குநர் மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி, அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தில்ராஜு. ஒளிப்பதிவு மூலம் கதையின் களத்திற்கு என்ன தேவையோ மிக சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைப்படத்தின் உணர்வுகளுக்கு வலு சேர்த்திருக்கிறார்.

மூன்று குடும்பம் என்னதான் ஒட்டு உறவு மிகவும் நகமும் சதையாக இருந்தாலும் பணம் என்றால் அதிக அளவில் ஆசைப்படும் அனைவருக்கும் பிரச்சனை வரும் என்பதை இந்த கதை மூலம் மிகச் சிறப்பாக உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் மைதீன்.

மொத்தத்தில், இந்த ‘ஆல்பாஸ்’ திரைப்படம் அடிதடி இல்லாத வடசென்னை அன்பும் உறவுகளும் நிறைந்த வாழ்வியல்!

error: Content is protected !!