‘சப்தம்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அறிவழகன்.
ஒளிப்பதிவாளர் :- அருண் பாத்மனபன்.
படத்தொகுப்பாளர் :- சாபு ஜோசப் வி.ஜே..
இசையமைப்பாளர் :- தமன்.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- : 7 ஜி ஃபிலிம்ஸ், ரெவன்சா குளோபல் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், டி 3 ஸ்ட்ரீமிங் பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர் :- : 7 ஜி சிவா, எஸ் பானுப்பிரியா சிவா.
ரேட்டிங் 3.5./5.
ஊட்டி குன்னூரில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.
அந்த மருத்துவக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக ஊர் முழுவதும் தகவல் பரவுவதை தொடர்ந்து, அந்த கல்லூரியில் உண்மையிலேயே அமானுஷ்ய சக்தி இருக்கிறதா? என்பதை கண்டுபிடிப்பதற்காக கல்லூரி நிர்வாகம், அமானுஷ்யங்கள் பற்றிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளும் கதாநாயகன் ஆதியை மும்பையில் இருந்து கல்லூரி நிர்வாகம், கல்லூரிக்கு வரவழைக்கிறார்கள்.
அந்த மருத்துவக் கல்லூரியில் நடந்த மர்ம மரணங்களின் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் கதாநாயகன் ஆதி, சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை கண்டுபிடிப்பதோடு, அந்த மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும், மேற்படிப்பு மாணவியுமான கதாநாயகி லட்சுமி மேனனை ஒரு அமானுஷ்ய சக்தியை பின்தொடர்வதை கதாநாயகன் ஆதி கண்டுபிடிக்கிறார்.
யார் அந்த அமானுஷ்ய சக்தி என்பதை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் கதாநாயகன் ஆதிக்கு, அந்த இடத்தில் ஒரு அமானுஷ்ய சக்திகள் மட்டும் இல்லை, 42 அமானுஷ்ய சக்திகள் இருப்பத்தை கதாநாயகன் ஆதி கண்டு பிடிக்கிறார்.
அந்த 42 அமானுஷ்ய சக்திகள் யார் யார்?, என்பதை அதன் பின்னணிகள் என்ன அந்த மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் மர்ம மரணத்திற்கும் என்ன தொடர்பு? என்பதை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘சப்தம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சப்தம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடித்திருக்கிறார்.
ஆவிகளைப் பற்றிய ஆய்வு விசாரணை மேற்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதி, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ஆதி, தனக்கு கொடுத்த வேலையை மிகச்சிறப்பாக செய்து திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இந்த சப்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் லட்சுமி மேனன் வழக்கமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மிகச் சிறப்பாக செய்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
அருமையான காட்சிகளில் சிரிக்க வைக்கிறேன், என்ற பெயரில் ரெடின் கிங்ஸ்லி அந்தக் காட்சிகளை கேவலப்படுத்தி விடுகிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும், தங்களது வேலையை எந்த ஒரு குறையில்லாமல் மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் ஆகியோர் திரைக்கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அனைத்து கதாபாத்திரங்களும் இரண்டாம் பாதியில் ஒரே சமயத்தில் கதைக்குள் வருவதால் அவர்கள் கதாபாத்திரம் திரைப்படத்தில் பெரிய அளவில் இல்லை.
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், திகில் திரைப்படத்திற்கு மிககச்சிதமாக கலர்களை பயன்படுத்தி காட்சிகளை ஹாலிவுட் தரத்தில் மிகவும் மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.
ஈரம்’ திரைப்படத்தில் மூலம் தண்ணீரில் அமானுஷ்யங்களை பயணிக்க வைத்து திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை அலற வைத்த இயக்குநர் அறிவழகன், தற்போது சப்தம் திரைப்படத்தின் மூலம் சப்தங்கள் மூலம் ஆவிகளை பயணிக்க வைத்திருக்கிறார்.
அமானுஷ்யங்களின் உணர்வுகளை சப்தங்கள் மூலம் வெளிக்காட்டி, அதன் மூலம் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அலற வைத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
மொத்தத்தில், ‘சப்தம்’ திரைப்படம் சப்தத்தை வைத்தே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.