அனுக்கரகன் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய் கிருஷ்ணா, முரளி ராதா கிருஷ்ணன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், தீபா உமாபதி, ராகவன் முருகன், ஹேமன் முருகானந்தம் , நிஷால் சுந்தர், கிஷோர் ராஜ்குமார், பாரிவாசன்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுந்தர் கிருஷ்.
ஒளிப்பதிவாளர் :- வினோத் காந்தி.
படத்தொகுப்பாளர் :- எஸ் கே சதீஷ்குமார்.
இசையமைப்பாளர் :- ரேஹான்.
தயாரிப்பு நிறுவனம் :- சக்தி சினி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்கள் :- முருகானந்தம் வீரராகவன், திருமதி. சண்முகப்ரியா முருகானந்தம்.
ரேட்டிங் :- 2.75/5.
தன் தந்தை விஜயகிருஷ்ணன் மீது சிறுவன் ராகவன் முருகன் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான்.
தந்தை விஜயகிருஷ்ணன் தனது மகன் ராகவன் முருகன் மீது அளவு கடந்த அன்பும் வைத்திருக்கிறார்.
தனது தந்தை விஜயகிருஷ்ணன் வாழ்ந்த காலகட்டங்களில் அவருக்கு கிடைக்காத அனைத்தையும் தன்னுடைய தந்தைக்கு மகன் ராகவன் முருகன் செய்ய வேண்டும் என எண்ணுகிறார்
தனது தந்தை விஜயகிருஷ்ணன் அவருடைய சிறுவயது மாணவப் பருவத்தில் மற்றும் இளமைப் பருவத்தில் செய்த நிறைய தியாகங்களை ராகவன் முருகன் அறிந்து கொள்கிறான்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய அனைத்து விருப்பங்களை கடவுளிடம் வேண்டிக் கொள்ள இறைவன் அவனது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார்.
தந்தை விஜயகிருஷ்ணன் வாழ்ந்த சிறு வயது காலப் பயணம், செய்து மகன் ராகவன் முருகன் அங்கு பயணித்து விடுகிறார்
தந்தை விஜயகிருஷ்ணனும் மகன் ராகவன் முருகனும் தற்போது இருவரும் ஒரே வயதில் பயணிக்கிறார்கள்.
தந்தை விஜயகிருஷ்ணனும் மகன் ராகவன் முருகனும் இருவரும் மகன் தந்தை என்று பாராமல் நெருங்கிய நண்பர்களாக மாறுகிறார்கள்.
தன் தந்தை விஜயகிருஷ்ணன் சிறு வயது முதல் ஆசைப்பட்ட அனைத்தையும் மகன் ராகவன் முருகன் நிறைவேற்றி வருகிறார்
மகன் ராகவன் முருகன் தொடர்ந்து இப்படியே பல ஆண்டுகள் உருண்டோட இருவரும் நெருங்கிய நண்பர்களாக அவர்களுடைய வாழ்க்கையை தொடர்கின்றனர்.
இறுதியில் தந்தை விஜயகிருஷ்ணன் கனவுகள் அனைத்தையும் மகன் ராகவன் முருகன் நிறைவேற்றி விட்டாரா! நிறைவேற்றவில்லையா! என்பதுதான் இந்த அனுக்கிரகன்
திரைப்படத்தின் மீதிக்கதை.
சிறு வயது வாழ்க்கையை நினைத்து கலங்கும் கதாபாத்திரத்தில் சிறுவன் ராகுவன் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
பிள்ளைகளுக்காகவும் தங்களது கனவு வாழ்க்கையை இருந்து விலகியவர்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் கிருஷ்ணா, மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தந்தை விஜய் கிருஷ்ணனின் இளமை காலத்தில் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முரளி ராதாகிருஷ்ணன், நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
விஜய் கிருஷ்ணாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணன், பாரி வாசன், ஹேமன் முருகானந்தம், தீபா உமாபதி, கிஷோர் ராஜ்குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை மிக சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி, மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் காட்சிகளின் வேறுபாட்டை மிக சரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ரேஹன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக பயணித்து இருக்கிறார்.
டைம் டிராவல் கதையை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், அறிவியலை தவிர்த்து ஆன்மீகம் பூர்வ ஜன்ம புண்ணியம் ஆகியவற்றை இனைத்து டைம் டிராவலுக்கான காரணமாக மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சுந்தர் கிரிஷ்,
மொத்தத்தில் ‘அனுக்கிரகன்’ அறிவியல் தவிர்த்து ஆன்மீகம் புகுத்தி வித்தியாசமா டைம் ட்ராவல் திரைப்படம்.