‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி ஷர்மா, நாசர், கௌதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா, ஸ்வாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர் சின்னி ஜெயந்த், பிரவீன், காசி ரெட்டி, சைதன்யா, வாசு இன்டூரி மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பவன் சதினேனி .
ஒளிப்பதிவாளர் :- சுஜித் சாரங்.
படத்தொகுப்பாளர் :- பிரவீன் கே.எல்.
இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைட்பாக்ஸ் மீடியா.
தயாரிப்பாளர்கள் :- சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்.
மக்கள் தொடர்பு :- யுவராஜ்.
வெளியீட்டு தேதி :-20 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 3.75./5.
சில திரைப்படங்கள் பொழுதுபோக்கைத் தருகின்றன; சில திரைப்படங்கள் உணர்வுகளைத் தூண்டுகிற திரைப்படமாக அமையும், வெகு சில திரைப்படங்கள்தான் நம் மனதுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கனவுகளை மீண்டும் தொட்டி எழுப்பும் அளவிற்கு இருக்கிறது.
அந்த வகையில், ஒரு கிராமத்துப் பெண்ணின் விண்வெளி கனவையும், அவளுக்குத் துணையாக நிற்கும் கணவனின் தியாகத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT).
விண்வெளியைப் பார்த்து வியக்கும் பலருக்கு மத்தியில், ஒருநாள் அந்த விண்வெளிக்கே சென்று சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் கதாநாயகி சாத்விகா வீரவல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த கிராமத்தில் சாலை வசதிகள்கூட இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவளுடைய சிந்தனைகளும் கனவுகளும் எல்லையற்றவை. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற அவளது லட்சியத்திற்கு குடும்பச் சூழலும் சமூகக் கட்டுப்பாடுகளும் தடையாக அமைகின்றன.
பத்தாம் வகுப்பை முடித்தவுடன் கதாநாயகி சாத்விகா வீரவல்லி திருமண வாழ்க்கைக்குள் நுழைய வேண்டிய சூழல் உருவாகிறது.
இதனால் தனது உயர்ந்த கனவு இனி நிறைவேறாது என்று கதாநாயகி சாத்விகா வீரவல்லி நினைக்கும் தருணத்தில், அவளுடைய வாழ்க்கையில் கதாநாயகன் துல்கர் சல்மான் கணவனாக புதிய நம்பிக்கையாக வருகிறார்.
தனது மனைவி கதாநாயகி சாத்விகா வீரவல்லியின் ஆசையை வெறும் வார்த்தைகளால் பாராட்டாமல், தனது மனைவியின் கனவைத் தனது கனவாக கதாநாயகன் துல்கர் சல்மான் ஏற்றுக்கொள்கிறார்
கதாநாயகி சாத்விகா வீரவல்லியின் கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தனது வசதிகளையும் விருப்பங்களையும் தியாகம் செய்யத் தயாராகிறார்.
கல்விப் பயணம், அறிவியல் முயற்சிகள், ராக்கெட் உருவாக்கம், எதிர்பாராத தோல்விகள் எனப் பல தடைகளைச் சந்திக்கும் கதாநாயகி சாத்விகா வீரவல்லியின் பயணம் எங்கே கொண்டு செல்கிறது? அவளது கனவுக்கு உறுதுணையாக நிற்கும் கதாநாயகன் துல்கர் சல்மான் தியாகம் எந்த அளவுக்குச் செல்கிறது? கதாநாயகி சாத்விகா வீரவல்லியின் விண்வெளி லட்சியம் நனவாகிறதா? நினைவாகவில்லையா?, என்பதுதான் இந்த ஆகாயத்தில் ஒரு தாரகை’ மீதிக்கதை.
இந்த ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.
ஒரு கதாநாயகன் என்றால் திரையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற வழக்கமான சினிமா இலக்கணத்தைத் தாண்டி, தன்னுடைய மனைவியின் வெற்றிக்காகப் பின்னால் நின்று உழைக்கும் மனிதனாகத் கதாநாயகன் துல்கர் சல்மான் நடித்திருப்பது திரைந்படத்தின் முக்கியமான சிறப்பு.
தனது மனைவியின் கனவைப் புரிந்துகொள்வது, அவளது வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையே மாற்றிக் கொள்வது, அவளது தோல்விகளில் நம்பிக்கையூட்டுவது என கதாநாயகன் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தின் வழியாக அன்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படத்தில் கதாநாயகியாக சாத்விகா வீரவல்லி நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாத்விகா வீரவல்லி கல்பனா கதாபாத்திரம். கனவுகளோடு வாழும் இளம்பெண்ணாகவும், குடும்பப் பொறுப்புகளுக்குள் சிக்கித் தவிக்கும் மனைவியாகவும், அறிவியல் உலகில் தன்னை நிரூபிக்கப் போராடும் பெண்ணாகவும் வெவ்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, நிராகரிப்புகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும் தருணங்களில் அவரது முகபாவனைகள் கதாபாத்திரத்தின் வலியைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகின்றன.
ஸ்ருதி ஹாசன்: ரோஹிணி காரியப்பா என்ற கதாபாத்திரத்தில் அறிவியல் உலகத்திற்கான மற்றொரு பரிமாணத்தை வழங்குகிறார்.
நாசர் அனுபவமிக்க நடிப்பின் மூலம் கதையின் உணர்வுப்பூர்வமான அடித்தளத்திற்கு வலு சேர்க்கிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன், முரளி சர்மா, ஸ்வாசிகா, ருஹானி சர்மா உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு மூலம் கிராமத்தின் இயல்பான அழகையும், விண்வெளி ஆராய்ச்சியின் பிரம்மாண்டத்தையும் வெவ்வேறு காட்சி மொழியில் பதிவு செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான பயணத்திற்கு இசை மிகப்பெரிய துணையாக அமைந்திருக்கிறது.
விண்வெளி, ராக்கெட், அறிவியல் ஆராய்ச்சி போன்ற அம்சங்களை மட்டும் முன்னிறுத்தாமல், ஒரு பெண் தனது கனவை அடைவதற்குப் பின்னால் இருக்கும் குடும்பச் சூழல், பொருளாதார நெருக்கடி, சமூகப் பார்வை, கல்விக்கான போராட்டம் ஆகியவற்றையும் திரைக்கதைக்குள் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.
முதல் பாதியில் கதை சற்று நிதானமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் கல்பனாவின் கனவுப் பயணம் புதிய வேகத்தைப் பெறுகிறது. சில காட்சிகளில் இன்னும் ஆழமான உணர்ச்சிப் பதிவு இருந்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இயக்குநரின் அடிப்படை நோக்கம் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் இயக்குநர் பவன் சதினேனி.
மொத்தத்தில், மண்ணில் பிறந்த கனவு… விண்ணைத் தொடும் வைராக்கியம்! பெண் லட்சியத்தின் அழகிய திரைக்காவியம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’!












