அவள் பெயர் ரஜினி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25 /5.
நடிகர் & நடிகைகள் :- காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான், அஸ்வின் குமார், சைஜு குருப், கருணாகரன், ரமேஷ் கண்ணா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வினில் ஸ்கரியா வர்கீஸ்.
ஒளிப்பதிவாளர் :- RR விஷ்ணு.
படத்தொகுப்பாளர் :- தீபு ஜோசப்.
இசையமைப்பாளர் :- 4 மியூசிக்ஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- நவரச பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- ஸ்ரீஜித் கே.எஸ், பிளெஸ்ஸி ஸ்ரீஜித்.
ரேட்டிங் :- 3.25 /5.
கதாநாயகன் காளிதாஸின் அக்கா நமீதா பிரமோத்வும் அக்கா கணவர் சைஜு குருப், நண்பர் வீட்டிற்கு வந்து விட்டு காரில் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
ஊருக்கு செல்லும் வழியில் காரில் பெட்ரோல் இல்லாத காரணத்தால் நடுவழியில் கார் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்று விடுகிறது.
நமீதா பிரமோதை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு, சைஜு குருப், பெட்ரோல் வாங்க சென்று விடுகிறார்.
சற்று நேரத்தில் காரின் மேல் பகுதியில் யாரோ ஒரு பெண் சைஜு குருப்பை கத்தியால் குத்தி கொலை செய்கிறாள்.
இதை பார்க்கும் நமீதா பிரமோத், தனது கணவனை ஏதோ ஒரு பெண் கத்தியால் குத்திக் கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுகிறார்.
மயங்கி விழுந்த நமீதா பிரமோத்தை அந்த வழியாக செல்லும் மாணவர்கள் மருத்துவமனையில் நமீதா பிரமோத்தை முதல் உதவிக்காக அனுமதிக்கப்படுகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நமீதா பிரமோத்தை சந்திக்கும் கதாநாயகன் காளிதாஸ், தனது அக்காவின் நிலைமைக்கு கண்டு வருந்துகிறார்.
மேலும் கதாநாயகன் காளிதாஸை யாரை ஒரு பெண் தன்னை பின் தொடர்வது போல் உணர்கிறார்.
தன்னை பின் தொடரும் அந்த பெண் யார் என்பதை கண்டறிய கதாநாயகன் காளிதாஸ் முயற்சி செய்கிறார்.
அதே சமயம் காவல்துறை ஆய்வாளர் அஸ்வின் குமார், நடந்த கொலை பற்றி விசாரிக்க தொடங்கினார்.
இறுதியில் சைஜு குருப்பை கொலை செய்த அந்த பெண் யார்? அந்த பெண்ணை கதாநாயகன் காளிதாஸ் அந்த பெண்ணை கண்டுபிடித்தாரா கண்டு பிடிக்கவில்லையா? எதற்காக அந்த பெண் எதற்காக சைஜூ குருப்பை கொலை செய்தார்? ? என்பதுதான் இந்த “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அவள் பெயர் ரஜினி திரைப்படத்தில் கதாநாயகனாக காளி தாஸ் நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் காளிதாஸ், திரைப்படம் முழுக்க ஆர்ப்பாட்டம் இல்லாமல் அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்.
யார் அந்த பெண் என்பதை கண்டறிய முயற்சிக்கும் காட்சிகளில் கவர்ந்து இருக்கிறார்.
இந்த அவள் பெயர் ரஜினி திரைப்படத்தில் கதாநாயகியாக ரேபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்து இருக்கும் ரேபா மோனிகா ஜானுககு பெரியதாக இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை.
கதாநாயகன் காளிதாஸின் அக்கா கதாப்பத்திரத்தில் நடித்திருக்கும் நமீதா பிரமோத், கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகன் காளிதாஸின் அக்கா கணவராக கதாப்பத்திரத்தில் நடித்திருக்கும் சைஜு குருப், அருமையாக நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அஸ்வின் குமார் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
மிடுக்கான தோற்றத்தில் குற்றவாளியை தேடும் காட்சிகளில் சபாஷ் வாங்கி இருக்கிறார்
மிகவும் அருமையான கதாபாத்திரத்தில் வந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரியங்கா சாய் நடித்து அசத்தி இருக்கிறார்.
கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் பிரியங்கா சாய்.
கருணாகரன் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் வந்து மிகவும் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ரமேஷ் கண்ணா காவலராக வந்து அனுபவ நடிப்பை அருமையாக கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆர் ஆர் விஷ்ணுவின் மூலம் இரவில் நடக்கும் காட்சிகளை மிகவும் அழகாக படம் பிடித்து காண்பித்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் 4 மியூசிக்ஸ் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் தீபு ஜோசப் படத்தொகுப்பு கதையுடன் இனைத்து மிக அருமையாக பயணிக்க வைக்கிறது.
ஒரு சாதாரணமாக கொலை கதையை எடுத்துக்கொண்டு அதை சுற்றி நடக்கும் திரைக்கதையின் மூலம் மர்மம் என கிரைம் திரில்லர் பாணியில் மிக அருமையாக திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ்.
கதைக்கு ஏற்றவாறு திரைக்கதை
ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை ஒரே வேகத்தில் திரைப்படத்தை கொடுத்திருப்பது மிகச் சிறப்பு.
அடுத்தடுத்த காட்சிகள் என்னவென்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ்.
மொத்தத்தில் அவள் பெயர் ரஜினி திரைப்படத்திற்க்கு கண்டிப்பாக குடும்பத்துடன் விசிட் அடிக்கலாம்.











