‘பீப்’ Beep திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ராகவ் ரங்கநாதன், யாமினி லக்ஷ்மணன், பிரேர்னா கன்னா, இடி ஆச்சார்யா, அருண் மோகன், ஸ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா, பாலாஜி, ராஜவேல், அதுல், ஜி. சிவகுமார், வெங்கட் ரமேஷ், கர்னல் ஆர். கணேசன், எல். சண்முக சுந்தர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எல். சண்முக சுந்தர்.
ஒளிப்பதிவாளர் :- பிரதீப் பத்ம குமார்.
படத்தொகுப்பாளர் :- அபிஷேக், விக்னேஷ் ஆர்.எல்.
இசையமைப்பாளர் :- பிரசாந்த் விஹாரி.
தயாரிப்பு நிறுவனம் :- எம் குவெஸ்ட் மூவீஸ்.
தயாரிப்பாளர் :- எம் குவெஸ்ட் மூவீஸ்.
மக்கள் தொடர்பு :- ஏ. ஜான்.
ரேட்டிங் :- 2.5./5.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கதாநாயகன் ராகவ் சென்னை கல்லூரி ஒன்றில் படித்து வரும் நிலையில் அவனிடம் இருக்கும் ஒரு அபூர்வமான திறமை. ஒரு புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதன் மூலம், அந்தப் புகைப்படத்தில் இருப்பவர்களின் கடந்த காலம் மற்றும் அதில் மறைந்திருக்கும் பல நுணுக்கமான விஷயங்களை அவனால் கண்டறிய முடிகிறது.
இந்த நிலையில் கல்லூரி நண்பர்கள் குழுவைச் சுற்றி நடைபெறும் ஒரு எதிர்பாராத சம்பவமும், மர்மமான மரணமும் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன.
காவல்துறையினரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சில தடயங்களை தனது அறிவையும் தனித்துவமான திறமையையும் பயன்படுத்தி கதாநாயகன் ராகவ், ஆராயத் தொடங்குகிறான்.
உண்மையில் என்ன நடந்தது? குற்றத்தின் பின்னணி என்ன? குற்றவாளி யார்? என்பதுதான் இந்த‘பீப்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘பீப்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ராகவ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ராகவ் முக்கிய பலமாக இருப்பவர் ராகவ். தனித்துவமான குணத்தையும், மர்மத்தைத் தீர்க்க முயலும் மனநிலையையும் தனது நடிப்பில் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் யாமினி லக்ஷ்மணன், பிரேர்னா கன்னா, இடி ஆச்சார்யா, அருண் மோகன், ஸ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா, பாலாஜி, ராஜவேல், அதுல், ஜி. சிவகுமார், வெங்கட் ரமேஷ், கர்னல் ஆர். கணேசன், எல். சண்முக சுந்தர், மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிக அருமையாக பயணித்திருக்கிறார்.
வழக்கமான கத்தி, துப்பாக்கி, அதிரடி ஆகியவற்றை மட்டுமே நம்பாமல் “புத்தியும் ஒரு ஆயுதம்” என்ற கோணத்தில் கதையை உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் எல். சண்முக சுந்தர்.
மொத்தத்தில், ‘பீப்’ திரைப்படம் வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டு, பகுத்தறிவு + கற்பனை + மர்மம் ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய முயற்சியை முன்வைக்கிறது.











