கேங்கர்ஸ் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சுந்தர் .சி, வடிவேலு, விமல் காத்ரின் தெரசா, வானிபோஜன், முனிஷ்காந்த், பக்ஸ், காளை, ஹரிஷ் பேரடி, மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி, விச்சு, மாஸ்டர் பிரபாகர், மதுசூதன் ராவ், ரிஷி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சுந்தர்.சி.

ஒளிப்பதிவாளர் :- ஈ.கிருஷ்ணமூர்த்தி.

படத்தொகுப்பாளர் :- பிரவீன் ஆன்டனி.

இசையமைப்பாளர் :- C . சத்யா .

தயாரிப்பு நிறுவனம் :- அவ்னி சினிமாக்ஸ் பிரைவேட் லிமிடெட், பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- குஷ்பு சுந்தர், ஏ.சி.சண்முகம், ஏ.சி.எஸ் அருண்குமார்.

ரேட்டிங் :- 3.75./5.

ஊர் பெரிய மனிதர்களாக வலம் வரும் மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இருவரும் சகோதரர்கள் அந்த ஊரில் நடக்கும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஊர் பெரிய மனிதர்களாக வலம் வரும் மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இவர்கள் செயல்களால் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மட்டுமல்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் மாயமாகும் சம்பவங்களும் நடக்கிறது.

இதனால், அங்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து ஆசிரியை கதாநாயகி கேத்ரின் தெரசா கமிஷ்னர் அலுவலகத்திற்கு இமையில் மூலம் புகார் ஒன்றை அனுப்புகிறார்.

அந்த புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்த காவல்துறை அதிகாரி ஒருவரை காவல்துறை கமிஷனர் இந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்த பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் உடற்பயிற்சி ஆசிரியர் கதாநாயகன் சுந்தர்.சி, தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வில்லன் மைம் கோபி மற்றும் அருள்தாஸ் கோஷ்டியை அடித்து தும்சம் செய்ய, கதாநாயகன் சுந்தர்.சிதான் அந்த ரகசியமாக இந்த ஊருக்கு வந்த காவல்துறை அதிகாரி என கதாநாயகி கேத்ரின் தெரசா நினைத்துக் கொள்கிறார்.

ஆனால், கதாநாயகன் சுந்தர்.சி  காவல்துறை அதிகாரி இல்லை என உண்மை தெரிய வர அப்படி என்றால் கதாநாயகன் சுந்தர்.சி யார்?, அவர் எதற்காக வில்லன் மைம் கோபி மற்றும் அருள்தாஸ் கோஷ்டியை அடித்து தும்சம் செய்கிறார்?  என்பதுதான் இந்த ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கேங்கர்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் சுந்தர் சி நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக மீண்டும் களம் காணும் இயக்குனர் சுந்தர்.சி, தனக்கு பக்கபலமாக வைகைப்புயல் வடிவேலுவை கூட்டணி சேர்த்துக் கொண்டு எங்களது கூட்டணி திரைப்படம் இயக்கினாலும் நடித்தாலும் எப்பொழுதுமே வெற்றி கூட்டணி என்பதை இந்த கேங்கர்ஸ் திரைப்படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வைகை புயல் வடிவேலு, நகைச்சுவை புயலாக மீண்டும் தமிழ் திரைப்பட ரசிகர்களை மையம் கொண்டு ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிட்டார்.

மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்திருக்கும் வைகைப்புயல் வடிவேலு, தான் மீண்டும் ’மேன் ஆஃப் தி சிரிப்பு’ தமிழ் திரைப்பட ரசிகர்களிடம் பட்டத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

வைகைப்புயல் வடிவேலு என்ற காமெடி யானைக்கு இந்த கேங்கர்ஸ் திரைப்படம் சரியான தீனி போட்டு இருக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் நடிகர் விமல் நடித்திருக்கிறார்.

இந்த கேங்கர்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா, கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் காதல், ஒரு கவர்ச்சி பாடல் என திரைப்படம் முழுவதும் வருகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா, அடி வாங்கும் காட்சிகளிலும் அசராமல் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சுந்தர் சியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜன், சிறிது நேரம் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, காளை நடிப்பு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு, மாஸ்டர் பிரபாகர், மதுசூதன் ராவ், ரிஷி, அனைவரும் ஒன்று சேர்ந்து காமெடி கேங்கர்ஸாக பார்வையாளர்களை திரைப்படம் முழுவதும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தி ஒளிப்பதிவு மூலம் திரைப்படம் முழுவதும் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சி சத்யாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தையும் கொடுத்து அருமையாக இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனியின், படத்தொகுப்பு மூலம் தொய்வு ஏற்படாத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

இயக்குநர் வெங்கட் ராகவனின் அருமையான திரைக்கதை மற்றும் வசனம் காமெடி காட்சிகளுக்கான அனைத்து வசனங்களும் மிகச்சிறப்பாக அமைந்திருப்பதோடு, பல திருப்பங்கள் மூலம் திரைப்படத்தை காமெடியாகவும் அதிரடியாகவும் மிகப்பெரிய அளவில் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

காட்சிக்கு காட்சி வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பதோடு, மட்டுமல்லாமல் ரசிகர்களின் யூகங்களை உடைத்து புதிய ரூட்டில் இயக்குநர் வெங்கட் ராகவன் அமைந்துள்ள திரைக்கதையை பயணப்பட வைத்து திரைப்படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.

இயக்குநர் சுந்தர்.சி, எழுதி இயக்கி நடித்து தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை நகர்த்திச் சென்றாலும், காட்சிக்கு காட்சி சிரிக்க வைப்பதோடு, ரசிகர்களுக்கு இரண்டரை மணி நேரம் எப்படி போகிறது, என்பதே தெரியாத வகையில் திரைப்படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்வதோடு, திரைப்படம் முழுவதும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைத்து திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி,

மொத்தத்தில், ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் மனதளவில் இருக்கும் கஷ்டங்களை மறந்து சிரிக்காதவர்களையும் சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்.

error: Content is protected !!