‘பெத்லகேம் குடும்ப யூனிட்’  திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- நிவின் பாலி, மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கிரிஷ் AD.

ஒளிப்பதிவாளர் :- அஜ்மல் சாபு.

படத்தொகுப்பாளர் :- ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்.

இசையமைப்பாளர் :- விஷ்ணு விஜய்.

தயாரிப்பு நிறுவனம் :-  பவானா ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் :- திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில், ஷ்யாம் புஷ்கரன்.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

வெளியீட்டு தேதி :- 04 செப்டம்பர்  2026.

ரேட்டிங் :-  3.75/5.

தன் தாய் மற்றும் தந்தை தம்பியுடன் கதாநாயகி மமிதா பைஜு, ஆகியோருடன் தங்களுக்கு பூர்வீக வீட்டை விட்டு எர்ணாகுளத்தில் உள்ள புதிய வீட்டிற்குக் குடியேறுகிறார்கள்.

கதாநாயகி மமிதா பைஜு, புதியதாக குடியேறிய இந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் கதாநாயகன் நிவின் பாலி வீடு அமைந்துள்ள நிலையில் அந்தப் பகுதியின் மக்கள்  அனைவராலும் விரும்பக்கூடிய சமூக சேவகனாக உள்ளார்.

கதாநாயகன் நிவின் பாலி  கேட்டரிங் தொழிலை நடத்தி கொண்டு தாய் மற்றும் தம்பி  தந்தையுடன் வசித்து வருகிறார்.

கதாநாயகன் நிவின் பாலி  தம்பி குறும்படங்களை இயக்கி தயாரித்து வருகிறார்.

கதாநாயகி மமிதா பைஜு, புதிய வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும்போது, ஜன்னல் வழியே மின்னல் தரிசனம்.​​தன்னைவிட சுமார் பத்து வயது மூத்தவரான கதாநாயகன் நிவின் பாலி மீது கதாநாயகி மமிதா பைஜு, ஈர்ப்பு ஏற்பட்டு இந்த ஈர்ப்பு காதலாக மாறுகிறது.

கதாநாயகி மமிதா பைஜு, மற்றும் கதாநாயகன் நிவின் பாலி ஒருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் விஷயம் கதாநாயகி மமிதா பைஜு, பெற்றோருக்கு தெரிய வர தன்னுடைய மகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கல் ஏற்பாடு செய்கிறார்கள்.

கதாநாயகி மமிதா பைஜு, மற்றும் கதாநாயகன் நிவின் பாலி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா?

கதாநாயகன் நிவின் பாலி தனது. காதலியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிந்ததா? அமைத்துக் கொள்ள முடியவில்லையா? என்பதுதான் இந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’  திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’  திரைப்படத்தில் கதாநாயகனாக நிவின் பாலி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும். நிவின் பாலி  ஜஸ்டின்’ கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்.

இந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’  திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு, நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, ‘ஆஷ்லி’ கதாபாத்திரத்தில் இளமை மகிழ்ச்சி துள்ளல் இயல்பாக தனது காதலை வெளிப்படுத்தி இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும், அவர்களின் காதல் மிகவும் இயல்பாகவே நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ், அனைவருமே மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு மூலம் கேரள மண்ணின் பின்புலத்தையே ஒரு கதாபாத்திரமாக நமக்கு மாற்றிக் காட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகவும் வலுவாக அமைந்திருக்கிறது.

வயது மூத்த ஒரு கதாநாயகனுடன் சிறு வயது கதாநாயகியை இணைத்து அருமையான ஒரு கதையை அற்புதமாக திரைக்கதையில் அது மட்டுமல்ல இவர் வழக்கம் போன்ற நாயகனை மையம் கொள்ளும் பிரதான பாத்திரங்களை மட்டும் நம்பாமல் துணைக் கதாபாத்திரங்கள் அவர்கள் வாழும் சூழல் ஆகியவற்றையும் மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார் கிரீஷ் ஏ.டி.

மொத்தத்தில் இந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ கண்டிப்பாக  குடும்பத்துடன் திரையரங்குகளில்
சென்று கண்டு களிக்கலாம்.

error: Content is protected !!