‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :-  ஆண்டனி  வர்கீஸ், ஐ.எம். விஜயன், ஜுமானா அப்துல் ரஹ்மான், லுக்மான் அவாரன், பாலு வர்கீஸ், டேனிஷ் பி.கே, அமல், பசித், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நிகில் பிரேம்ராஜ்.

ஒளிப்பதிவாளர் :- ஃபைஸ் சித்திக்.

படத்தொகுப்பாளர் :- நௌஃபல் அப்துல்லா.

இசையமைப்பாளர் :- ஜேக்ஸ் பிஜாய்.

தயாரிப்பு நிறுவனம் :- ஃபீனிக்ஸ் ஸ்டுடியோ.

தயாரிப்பாளர் :- டி. அசோக்.

மக்கள் தொடர்பு :- வேலு.

வெளியீட்டு தேதி :- செப்டம்பர் 04 2026.

ரேட்டிங் :-  3.5/5.

இந்த கிராமத்தில் உள்ள சிறுவர் முதல் பெரியவர் வரை  அனைவரும்  உலக கால்பந்தாட்ட விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருமே உலக கால்பந்தாட்ட ஜாம்பவானான மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள் 7 பேர் கொண்ட செவன் ஸ்டார் பாய்ஸ் என்ற கால்பந்தாட்ட அணியை உருவாக்கி விளையாடி வரும் சிறுவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட கதாநாயகன் ஆண்டனி வர்கீஸ். அந்த சிறுவர்களை ஒன்று திரட்டி இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஐ.எம். விஜயனிடம் அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஐ.எம். விஜயன் இந்த இளம் வீரர்களின் ஆர்வத்தையும், திறமையையும் கண்டறிவதுடன் அவர்களுக்கு பயிற்சியாளராகவும்  பயிற்சி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டியில் அந்த கிராமத்தில் உள்ள இளம் வீரர்கள் அடங்கிய “7 ஸ்டார் பாய்ஸ்” குழுவும் கலந்து கொள்கிறது.

அரை இறுதிப் போட்டி வரை முன்னேறும் இந்த 7 ஸ்டார் பாய்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்களா?  வெள்ளவில்லையா?

அரை இறுதிப் போட்டி வரை சென்ற செவன் ஸ்டார் பாய்ஸ் அணியினர் போட்டியில் வெற்றி பெற்றவர்களா? வெற்றிப்படவில்லையா?  என்பதுதான் இந்த  ‘7 ஸ்டார் பாய்ஸ்’ மீதிக்கதை.

இந்த செவன் ஸ்டார் பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆன்டனி வர்கீஸ் நடித்திருக்கிறார்.

அந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள் கால்பந்தாட்ட விளையாட்டின் மீது உள்ள காதலை அறிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் காட்சிகள் மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஐ.எம். விஜயன் இந்த சிறுவர்களை ஊக்கப்படுத்தி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வைக்கும் காட்சிகளை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த 7 ஸ்டார் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜுமானா அப்துல் ரஹ்மான், லுக்மான் அவாரன், பாலு வர்கீஸ், டேனிஷ் பி.கே, அமல், பசித், அனைவருக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஃபைஸ் சித்திக். ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு  மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாடும் வகையில் உள்ளது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

விளையாட்டு தொடர்பான கதையாக இருந்தாலும் சற்றும் சலிப்பும் தொய்வுமில்லாமல் இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் நிகில் பிரேம் ராஜ்.

மொத்தத்தில் இந்த ‘7 ஸ்டார் பாய்ஸ்’  திரைப்படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் படியான கண்ணியமான திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

error: Content is protected !!