‘டீசல்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் நடிகைகள்:- ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், வினோத் சாகர், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகீர் உசேன்,  தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சண்முகம் முத்துசாமி.

ஒளிப்பதிவாளர் :- ரிச்சர்ட் எம்.நாதன் & எம்.எஸ்.பிரபு.

படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.

இசையமைப்பாளர் :- திபு நினன் தாமஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- Third Eye Entertainment, SP சினிமாஸ்,

தயாரிப்பாளர் :- தேவராஜுலு மார்க்கண்டேயன்.

ரேட்டிங் :- 2.5./5.

வடசென்னை உள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டமான குருடாயில் பைப்லைன் அமைக்கும் திட்டத்தை 1979-ஆம் ஆண்டு தமிழகஅரசு கொண்டு வருகிறது.

வடசென்னை கடலோரப்பகுதிகளில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அந்தத் திட்டத்தின் மூலமே குருடாயில் பைப்லைனில் குருடாயில் திருடி பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் பிரிந்து பெட்ரோல் டீசல் ஆக வரவழைத்து ஒவ்வொரு பெட்ரோல் பங்குக்கும் கொடுக்கும் தொழில் செய்து கொண்டு அதன் மூலம் வரும் வருமானத்தை அந்த மீனவர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சாய்குமார் உதவுகிறார்

சாய் குமாரின் வளர்ப்பு மகனான கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் தனது தந்தையை போலவே இந்த தொழிலில் மிகவும் தீவிரமாக இறங்குகிறார்.

காவல்துறை அதிகாரியான வினைராய் மற்றும் விவேக் பிரசன்னா மூலமாக தந்தை சாய்குமார் செய்யும் அந்த தொழிலுக்கு பெரிய பெரிய அளவில் சிக்கல் வரவே, முடிவில் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் என்ன செய்தார் அதை எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த டீசல் திரைப்படத்தின் மீதிக்கதை கதை.

இந்த டீசல் திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் வட சென்னை இளைஞன் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாக பொருந்தி இருக்கும் நிலையில் தந்தைக்காக கோவப்படும் காட்சிகளிலும் மற்றும் ஆக்சன் காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த டீசல் திரைப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

சாய்குமார் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வினை ராய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரச்சன்னா பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

இந்த டீசல் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும்  வினோத் சாகர், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளிவெங்கட், சச்சின் கெடேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங், அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரது ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் திபு வினன் தாமஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் அழகாக பயணித்திருக்கிறார்.

எண்ணெய் மாஃபியா என்ற புதிய உலகத்தையும், அதைச் சார்ந்த கதைகளத்தையும் மையமாக கொண்ட மிகச்சிறப்பான திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி  செல்லும் வகையில் மிகச் சிறப்பான திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி.

மொத்தத்தில், ‘டீசல்’ ஆக்‌ஷன் திரில்லர் கமர்ஷியல் திரைப்படம்.

error: Content is protected !!