’தாவுத்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- லிங்கா, சாரா ஆச்சர், திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :-  பிரசாந்த் ராமன்.

ஒளிப்பதிவாளர் :- சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த்.

படத்தொகுப்பாளர் :- R. K. ஸ்ரீநாத்.

இசையமைப்பாளர் :- ராக்கேஷ் அம்பிகாபதி.

தயாரிப்பு நிறுவனம் :- TURM  புரொடக்ஷன் ஹவுஸ்.

தயாரிப்பாளர் :- S. உமா மகேஸ்வரி.

ரேட்டிங் :- 2.5./5.

தமிழகத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய தாவுத், மும்பையில் இருந்து தமிழ்நாட்டை கட்டுப்படுத்தும் போதைப் பொருள் பேர்வழி. அவரது புகைப்படம் கூட வெளியில் இல்லாத மர்ம நபர்.. தாவுத் போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்துகிறார்.

வெளி உலகத்திற்கு தெரியாத தாவுத் யார் ? என்பதை தெரிந்து கொள்ள தீவிரம் காட்டுவதோடு, தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதை பொருளை கைப்பற்றும் காவல்துறை அதிகாரி அர்ஜெய் தலைமையிலான குழு சரக்கை கைப்பற்ற முயற்சி செய்கிறது.

காவல்துறை அதிகாரி அர்ஜெய் தலைமையிலான காவல்துறையினர் தாவுத் சரக்கை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். 

அதே நேரத்தில், 20 ஆண்டுகளாக தாவுத் வேலை பார்த்த தீனாவும், அவரது சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மூன்றாவது தரப்பும் அந்த சரக்கை பிடிக்க முடிவெடுக்கின்றன.

இந்த நிலையில், தாவுத்தின் சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் வைத்துக்கொண்டு இந்த வேலையை செய்தால் காவல்துறையினருக்கு  தெரிந்துவிடும் என்பதால் புதிய ஆட்களை தேடுகிறார்கள்.

அதன்படி, வாடகை கார்கள் ஒட்டும் டிரைவர் கதாநாயகன் லிங்காவை தேர்வு செய்கிறார்.

தன்னுடைய அனைத்து பண தேவைக்காக கடத்தல் பணியில் ஈடுபடுகிறார் கதாநாயகன் லிங்கா, திட்டமிட்டபடி தாவுதின்  சரக்கை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தாரா ?, சரக்கு சேர்க்கவில்லையா?, போதைப் பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவன் தாவுத் யார் என்று கண்டு பிடித்தார்களா?,  கண்டு பிடிக்கவில்லையா?,  என்பதுதான் இந்த ‘தாவுத்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த தாவுத் திரைப்படத்தின் கதாநாயகனாக லிங்கா நடித்திருக்கிறார்

கதாநாயகனாக நடித்திருக்கும் லிங்கா  திரைப்படம் முழுவதும் அந்த கதாபாத்திரமாக வரும் லிங்கா, இதுவரை என்று நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் அப்பாவியான முகம், அளவான நடிப்பு என்று தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

இந்த தாவூத் திரைப்படத்தில் கதாநாயகியாக சாரா ஆச்சர் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சாரா ஆச்சர், கதாநாயகன் லிங்காவிற்கு ஜோடியாக இல்லாமல் வில்லன் கூட்டத்தில் இருப்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜெய், தாவுத்தின் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், ஸாரா, வையாபுரி, ராதாரவி என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த் ஆகியோஇருவரின் ஒளிப்பதிவு காட்சிகளையும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பில்டப் கொடுக்கும் விதமாக காட்சிகளை நிரைப்படமாக்கியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ராக்கேஷ் அம்பிகாபதியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக பயணித்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

கடத்தல் பொருளை கைப்பற்றப் போவது யார் ? என்ற கேள்விக்கான பதிலை பரபரப்பான திரைக்கதை மூலம் மிகச் சிறப்பாக திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ராமன்,

மொத்தத்தில், ‘தாவுத்’ திரைப்படம் ஒருமுறை பார்க்கலாம்.

error: Content is protected !!