‘டிசி’ (DC) திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா ஏ.கே, கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய்,  கிரிஷ் தயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி,
பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் மனோஜ் சஷி, கலையரசன் ஆர், ஃபிராங்க்ளின் ஜேக்கப், திலீபன் கே, கர்ணராஜா, பாஸ்கர் ஆர், விஜயலட்சுமி வீரமணி, நந்தீஸ் எம், தீபம் பிலிப்போஸ், பிரேம் கே. சேஷாத்ரி, பிகில் சிவா, அஷ்ரப் மல்லிசேரி, சமுண்டீஸ்வரி ஜே, கபில் வேலவன், ராஜா ரகுபதி, இதயகுமார், காக்கா கோபால், ஆரா, அஜித், ஷோபன் பாபு, விராஜ், நாகேஸ்வரி டி, ஹரிஷ்,  மதேஷ், ஜெ. வைஷாலினி, டி. நரேஷ், ஏ. அஜித் குமார், ஜான்சன், தேவா, ஹன்னா, பி.எஸ். கௌதம், கலை வேம்பு,  தயாராம, விகாஷ் ஜே, கிழக்குவாசி சந்திரன், சசி குமார் பி.ஏ, சாரா பிளாக், சாலமன், நந்தினி உதயகுமார், வி.ஜி. ராஜேஷ் (வி.ஜி.ஆர்.), சுப்ரமணியன் மாதவன், தீபக், சங்கீதா, சி. பிரியா சண்முகம், நித்யா எஸ், சிவசங்கரி ஜி, தமிழரசி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அருண் மாதேஸ்வரன்.

ஒளிப்பதிவாளர் :- முகேஷ் ஜி.

படத்தொகுப்பாளர் :- ஜி. கே. பிரசன்னா.

இசையமைப்பாளர் :- அனிருத்.

தயாரிப்பு நிறுவனம் :- சன் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- கலாநிதி மாறன்.

மக்கள் தொடர்பு :- ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்.

ரேட்டிங் :-  3.5./5.


சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறையில் தண்டனை அனுபவித்து வரும்  கதாநாயகன் லோகேஷ் கனகராஜி சிறைச்சாலையில் இருந்து தப்பி வந்து மிகப்பெரிய கேங்ஸ்டர் தலைவாசல் விஜய்  குழுவுடன் இணைந்து காவல்துறையினருக்கு சொந்தமான துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கொள்ளையடிக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த கிராமத்தில் உள்ள ஏழை விவசாயி ஒருவரின் தனது மகனின் படிப்புக்காக செலவுகாக விவசாய நிலத்தை விற்று வைத்திருந்த பணத்தை அபகரிக்கும் காவல்துறை அதிகாரியை கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் கொடூரமான முறையில் கொலை செய்கிறார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஒரு நண்பர்களை தீர்த்துக்கட்ட காவல்துறையினர் முடிவு செய்கிறார்கள்.

காவல்துறையினரின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒரு விடுதியில் பதுங்கிக் கொள்கிறார்கள்.

கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் பதுங்கி இருக்கும் அதே விடுதியில் பாட்டுப் பாடும் சஞ்சனா ஏ.கே, சஞ்சனா மீது காதல் ஏற்பட காவல்துறையினரின் தாக்குதலில் சஞ்சனா ஏ.கே, மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விடுகிறார்.

காவல்துறையினரிடம் இருந்து தப்பிய கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் எதிர்பாராத விதமாக விபச்சார விடுதியில் வாமிகா கபியை  சந்திக்க தனக்கு பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் வாமிகா கபியை அவரது நரக வாழ்க்கையை புரிந்துக்கொண்டு அதில் இருந்து வாமிகா கபியை.  காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

விபச்சாரத் தொழிலில் இருந்து காப்பாற்றப்பட்ட வாமிகா கபி, எங்கு செல்வது என்று தெரியாமல் கதாநாயகன் லோகேஷ் கனகராஜுடன் சொல்கிறார்.

தன்னை தாய்மை அடைய முடியாமல் செய்து சீரழித்த மருத்துவர் ஒருவரை வாமிகா கபி, கொலை செய்கிறார்.

இதனால் காவல்துறையினர் கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி, இருவரையும் சேர்த்து துரத்துகிறது.

காவல்துறையினிடமிருந்து  தப்பிக்க முயற்சிக்கும்  கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்களா?, கைது செய்யவில்லையா?, என்பதுதான் டிசி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டிசி திரைப்படத்தில்  முதல்முறையாக இயக்குனர் லோகேஷ் நாகராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறார்.

தேவதாஸ் என்ற கதாபாத்திரத்திற்கு மிகவும் பொறுத்தமான தேர்வாகவும், அளவான நடிப்பின் மூலமாகவும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் இருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார்.

தமிழ் திரைப்படம் உலகிற்கு  இயக்குனராக வெற்றி பெற்ற  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியாகி இருக்கும் டிசி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.

தமிழ் திரைப்பட உலகறுக்கு ஒரு சிறப்பான அருமையான ஒரு ஆக்சன் கதாநாயகன் கிடைத்துவிட்டார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி, தனது நரக வாழ்க்கையை தன் உடல்மொழி மூலமாகவே ஒரு பெண்ணின் வேதனையை மிகச் சிறப்பாக நடிப்பின் மூலம் பிரதிபலித்திருக்கிறார்.

மற்றொரு கதையின் நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா.ஏ.கே, அதிகப்படியான ஒப்பனையோடு அறிமுகமாகி சில காட்சிகள் தலைகாட்டினாலும், அவரது முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை கனக்க வைக்கிறது.

இந்த டிசி திரைப்படத்தில் நடித்திருக்கும் கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய்,  கிரிஷ் தயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் மனோஜ் சஷி, கலையரசன் ஆர், ஃபிராங்க்ளின் ஜேக்கப், திலீபன்கே, கர்ணராஜா,  பாஸ்கர் ஆர், விஜயலட்சுமி வீரமணி, நந்தீஸ் எம், தீபம் பிலிப்போஸ், பிரேம் கே. சேஷாத்ரி, பிகில் சிவா, அஷ்ரப் மல்லிசேரி, சமுண்டீஸ்வரி ஜே, கபில் வேலவன், ராஜா ரகுபதி, இதயகுமார், காக்கா கோபால், ஆரா, அஜித், ஷோபன் பாபு, விராஜ், நாகேஸ்வரி டி, ஹரிஷ்,  மதேஷ், ஜெ. வைஷாலினி, டி. நரேஷ், ஏ. அஜித் குமார், ஜான்சன், தேவா, ஹன்னா, பி.எஸ். கௌதம், கலை வேம்பு,  தயாராம, விகாஷ் ஜே,
கிழக்குவாசி சந்திரன், சசி குமார் பி.ஏ, சாரா பிளாக், சாலமன், நந்தினி உதயகுமார், வி.ஜி. ராஜேஷ் (வி.ஜி.ஆர்.), சுப்ரமணியன் மாதவன், தீபக், சங்கீதா, சி. பிரியா சண்முகம், நித்யா எஸ், சிவசங்கரி ஜி, தமிழரசி, உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் பொருத்தமான தேர்வாகவும் மிக சிறப்பாகும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி, ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் முழுவதும் ஒரே வண்ணத்தை பயன்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விடுகிறார்.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசை தான் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை திரைப்படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு காட்சிக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

அடக்குமுறைக்கு ஆளாகும் யாராக இருந்தாலும்  எளியவர்கள் திருப்பியடிப்பது வன்முறை என்றாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற தனது மெசஜையும் இதிலும் ஆழமாகவும் அருமையாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

திரைப்படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தாலும், அதை கதையோடு பயணிக்க வைத்து வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின்

மொத்தத்தில், ‘டிசி’ காதலும், ரத்தமும் வன்முறையும் கலந்த ஆக்சன் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு திரைப்படம்.

error: Content is protected !!