‘போட்டோகிராபர் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- அஷ்ரஃப், ஜனனி சாமிநாதன், கருணாகரன், உரியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, வெற்றிவேல் ராஜா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அஷ்ரஃப்.
ஒளிப்பதிவாளர் :- ரயீஸ் அஹ்மத்.
படத்தொகுப்பாளர் :- RC பிரணவ்.
இசையமைப்பாளர் :- ராஜ்குமார் சந்திரசேகரன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஏபிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ்.
தயாரிப்பாளர் :- அப்துல் பாசித் சையத்.
மக்கள் தொடர்பு :- வெங்கடேஷ்.
ரேட்டிங் :- 3.5./5.
போட்டோகிராபரான கதாநாயகன் அஷ்ரஃப், உலகத்தில் இதுவரை யார் கண்ணிலும் படாத ஒரு அரிய வகை மரத்தை புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் செல்கிறார்.
மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிக்கு செல்லும் வழியை தவறி ஆபத்து அதிகம் நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார்.
ஆபத்து அதிகம் நிறைந்த வனப்பகுதிக்குள் சென்றவர்கள் யாரும் உயிரோடு திரும்பி வராத மிக ஆபத்தான அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறும் கதாநாயகன் அஷ்ரஃப், வனப்பகுதிக்குள் பல ஆபத்தான விஷயங்களை எதிர்கொண்டு உயிருக்கு போராடுகிறார்.
ஆபத்து அதிகம் நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொண்ட கதாநாயகன் அஷ்ரஃப், உயிருடன் அந்த வனப்பகுதியில் இருந்து தப்பித்தாரா உயிருடன் தப்பிக்கவில்லையா
உலகத்தில் இதுவரை யார் கண்ணிலும் படாத ஒரு அரிய வகை மரத்தை புகைப்படம் எடுத்தாரா?, எடுக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘போட்டோகிராபர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘போட்டோகிராபர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அஷ்ரஃப், நடித்திருக்கிறார்.
கதாநாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரஃப், மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அஷ்ரஃப், கதாநாயகன் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த ‘போட்டோகிராபர்’ திரைப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.
அஷ்ரஃப், முதல் திரைப்படத்திலேயே பல்வேறு உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஜனனி சுவாமிநாதன் நிறைவாக நடித்திருக்கிறார்.
கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், மற்றும் உரியடி சிவா தங்களுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கதாநாயகன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேனின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவி மகேஷ், அழகு மற்றும் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார் .
ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத், ஒளிப்பதிவு மூலம் காட்டின் அமைதியையும், ஆபத்தையும் தமிழ் திரைப்படம் ரசிகர்களை அச்சமடையும் வகையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை மற்றும் வித்தியாசமான ஒலிகள் ரசிகர்கள் கவனத்தை கட்டிப்போடும் விதத்தில் பயணித்திருக்கிறது.
ஒரு புகைப்பட கலைஞரின் காட்டுக்குள் செல்லும் பயணத்தை கருவாக கதையை வைத்துக்கொண்டு, எழுதியிருக்கும் திரைக்கதை உயிர் பிழைக்கும் தனிமனித போராட்டத்தையும், சாகசத்தையும் காட்சி மொழியில் அருமையாக ஏக்கி இருக்கிறார் இயக்குநர் அஷ்ரப்.
மொத்தத்தில், இந்த ‘போட்டோகிராபர்’ சரியாக போக்கஸ் செய்திருந்தால் சிறந்த போட்டோகிராபராக அமைந்திருக்கும்










