கள்வன் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஜிவி பிரகாஷ் குமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இவானா, விஜய் டிவி தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பி.வி. சங்கர்.
ஒளிப்பதிவாளர் :- பி.வி. சங்கர்.
படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்
இசையமைப்பாளர்கள் :- ஜிவி பிரகாஷ் குமார், ரேவா.
தயாரிப்பு நிறுவனம் :- ஆக்சிஸ் ஃபீலிம் ஃபேக்டரி.
தயாரிப்பாளர் :- ஜி. டில்லி பாபு.
வனப்பகுதியின் அருகிலுள்ள வயல் வரப்புகள் கரும்பு தோப்புகளுக்கு யானைகள் அடிக்கடி வந்து செல்லும் ஆபத்தான அந்த கிராமத்தில் தாய் தந்தை இல்லாத அனாதையாக இருக்கும் இவர்கள் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் நண்பன் தினாவுடன் சேர்ந்து அந்தக் கிராமத்தில் உள்ள வீடுகளில் திருடுவது, மது அருந்துவது என தங்களது வாழ்க்கையை மிகவும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் நண்பன் தினாவுடன் பக்கத்து ஊரில் உள்ள ஒரு வீட்டிற்கு திருடச் செல்ல அந்த வீட்டில் கதாநாயகி இவானாவை கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் சந்திக்க உடனே அவர் மீது காதல் வசப்படுகிறார்.
அதன் பிறகு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் காதலை கதாநாயகி இவானாவிடம் சொல்ல உன்னை எனக்கு பிடிக்கவில்லை என கூற, கதாநாயகி இவானாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்க, அவருக்காக ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் அனாதையாக இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார்.
தன் காதலிக்கும் காதலி கதாநாயகி இவானாவிற்க்கா முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பாரதிராஜாவை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுத்தார்
தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அதிர்ச்சியளிக்கும் ஒரு திட்டம் இருக்க என்னவென்று கதாநாயகி இவானாவிற்கு தெரிய வருகிறது.
கதாநாயகி இவனாவிற்கு இந்த திட்டம் தெரியவந்ததால் இருவருக்கும் உள்ள காதல் என்ன ஆனது இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? என்பதுதான் கள்வன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கள்வன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கெம்பன் என்ற கதாபாத்திரத்திற்காக கொங்கு தமிழ் பேசி நடித்ததில் ஜி.வி.பிரகாஷ்குமார் கெம்பன் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
திருடுவது, மது அருந்துவது என் வழக்கமான ஜி.வி.பிரகாஷ்குமார் திரைப்படத்தின் ஆரம்பத்தில் வலம் வந்தாலும், காதல் நிராகரிப்படும் போது கலங்கும் காட்சிகளில் நடிப்பின் மூலம் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்
ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் அனாதையாக இருக்கும் பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தில் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் வில்லத்தனமான நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டி இருக்கிறார்.
ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் அனாதையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா
முதிர்ச்சியான வயதிலும் மிக ஏக்கமான மனநிலையோடு பரிதாபமாகவும் மிக அருமையாகவும் கதாபாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்.
தனது கதாபாத்திரத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, தனிமையின் தவிப்பு பற்றி பேசி மனதளத்தில் வேதனைப்படும் காட்சியில், நடிப்பால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண் கலங்க வைத்துவிடுகிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா, இயல்பான நடிப்பு மூலம் கதையோட்டத்துடன் கதாபாத்திரத்துடனும் பயணிப்பவர், இவன் ஒரு திருடன் எனக்கு காதலை சொல்வதா திருடனின் காதலை ஏற்க மறுத்து, கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
தனது காதலனின் சுயரூபம் தெரிந்த பிறகு கோபமடையும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா, சிரித்த முகத்தோடு மிகவும் அழகாக வந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்கிறார்.
கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாரின் நண்பராக நடித்திருக்கும் தினா, திரைப்படம் முழுவதும் பயணிக்கும் இவர் அவ்வபோது சில வார்த்தைகள் மற்றும் தனது வழக்கமான பாணியின் மூலமாக சிரிக்க வைக்கிறார் தீனா.
இந்த திரைப்படத்தில் தீனா குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்க மிகவும் அருமையாக நடித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் ஒளிப்பதிவின் மூலம் பசுமை நிறைந்த காடுகள், அதில் உள்ள யானைகளின் ஆபத்து இரண்டும் திரைக்கதையின் முக்கிய அம்சங்கள் என்றாலும், ஒளிப்பதிவின் மூலம் பிரமாண்டமாக காட்டாமல் மிக எளிமையாகவும் சாதாரணமாகவும் காட்டியிருக்கிக்கிறார்.
கதாநாயகனை ஜிவி பிரகாஷ் குமாரை இறுதிக் காட்சியில் யானை துரத்துவதை காட்சிப்படுத்திய விதம் மிக மிக மிரட்டலாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ரேவாவின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணத்திருக்கிறார்.
காதல்,காமெடி, துரோகம்,செண்டி மெண்ட் என அனைத்தும் கலந்த அம்சங்களையும் கலவையாகவும் சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையில் யானையையும் காட்டி அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளார் இயக்குனர் பி.வி.ஷங்கர்
மொத்தத்தில், இந்த ‘கள்வன்’ திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை மனதை கொள்ளைக் கொள்வான் என்பது உறுதி.
ரேட்டிங் 3.75/5.











