‘டியர் ரதி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சரவண விக்ரம், ஹாஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ், யுவராஜ் சுப்ரமணியன், சரவணன் பழனிச்சாமி, பசுபதி, தமிழ் செல்வன் எம்.கே. மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பிரவீன் கே மணி

ஒளிப்பதிவாளர் :- லோகேஷ் இளங்கோவன்.

படத்தொகுப்பாளர் :- பிரேம் பி.

இசையமைப்பாளர் :- எம்.எஸ்.  ஜோன்ஸ் ரூபர்ட்.

தயாரிப்பு நிறுவனங்கள் :-  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி. மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- மோகனா மஞ்சுளா எஸ்.

ரேட்டிங் :- 2.5./5.

கதாநாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவது என்றால் ஒருவிதமான பயத்துடன் வாழ்ந்து வருகிறார்.

பெண்களிடம் பேசுவது என்றால் பயத்துடன் இருந்ததால் அதனால் கதாநாயகன் சரவண விக்ரமிற்கு கைகூடிய இரண்டு காதலும் கைவிட்டு போய் விடுகிறது.

கதாநாயகன் சரவண விக்ரமிற்கு பெண்களிடம் இருக்கும் வெட்கம் கூச்சம் பயத்தை போக்குவதற்காக கதாநாயகன் சரவண விக்ரமின் நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு  அழைத்து செல்கிறார்.

அங்கு பாலியல் தொழிலாளியான கதாநாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் கதாநாயகன் சரவண  விக்ரம் கதாநாயகி ஹஸ்லி அமான் மீது மனதளவில் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படுகிறது.

அதனால், கதாநாயகி ஹஸ்லி அமானுடன் நெருங்கி பழகுவதற்காக ஆசைப்பட்டு, அவருடன் ஒருநாள் முழுவதும் டேட்டிங் செல்ல கதாநாயகன் சர்வண விக்ரம் ஆசைப்படுகிறார்.

அதற்கு கதாநாயகி ஹஸ்லி அமானும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள். 

மறுபக்கம் கதாநாயகி ஹஸ்லி அமானை ரவுடி கூட்டம் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியும்  தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 கதாநாயகன் சரவண விக்ரம் உடனான ஒருநாள் பயணத்தையும், மாபெரும் பெரும்  தேடுதல் பயணத்தையும் இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகி ஹஸ்லி அமான் யார் ?, என்பதுதான் இந்த ‘டியர் ரதி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டியர் ரதி திரைப்படத்தில் கதாநாயகனாக சரவண விக்ரம் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சரவண விக்ரம், ஏற்கனவே பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் என்பதால், திரைப்படம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பதை சர்வ சாதாரணமாக  நடித்திருக்கிறார்.

இந்த டியர் ரதி திரைப்படத்தில் கதாநாயகியாக ஹஸ்லி அமான், நடித்துள்ளார்.

ரதி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் கதாநாயகி ஹஸ்லி அமான்,  எளிமையான அழகு மூலமாகவும், கண்கள் மூலமாகவும் நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.

காமெடித்தனம் கலந்த வில்லன் வரதன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் மிரட்ட முயற்சித்திருக்கிறார்.

காட்வின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தினேஷ் பத்ராம் மற்றும் ஷெரிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவராஜ் சுப்பிரமணியம் ஆகியோர் புதியவர்களாக இருந்தாலும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
 
ஒளிப்பதிவாளர் லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு மூலம்  திரைப்படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள்  மற்றும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

காதல் காமம் பற்றி பேசுபவர் அதன் பிறகு பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளிகள் குறித்து பேசி இருப்பதோடு, அந்த தொழில் இந்தியாவில் உருவானது எப்படி?, அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியில் போட்ட சட்டம், என்று பல விபரங்களை தெரிவித்து பாலியல் தொழில் மற்றும் அதில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக பேசுவதும் மிகச் சிறப்பாக இருக்கிறார் இயக்குநர் பிரவீன் கே.மணி

மொத்தத்தில், ‘டியர் ரதி’ திரைப்பட ரசிகர்கள் குழப்பாமல் இருந்தால் சரி.

error: Content is protected !!