கார்டியன் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன, ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், அபிஷேக் வினோத், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை, ஷோபனா பிரனேஷ், தியா, ‘பேபி’ க்ரிஷிதா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- குருசரவணன், சபரி.
ஒளிப்பதிவாளர் :- K.A சக்திவேல்.
படத்தொகுப்பாளர் :- M.தியாகராஜன்.
இசையமைப்பாளர் :- சாம் C.S.
தயாரிப்பு நிறுவனம் :- ஃபிலிம் ஒர்க்ஸ்.
தயாரிப்பாளர் :- இயக்குனர் விஜய் சந்தர்.
கதாநாயகி ஹன்சிகா மோத்வானியின் சிறு வயது முதல் எது கேட்டாலும் கிடைப்பதில்லை எதை செய்தாலும் அது தவறுதலாக முடிகிறது.
கதாநாயகி ஹன்சிகா மோத்வானிக்கு தான் ஒரு அன்-லக்கி என்று நினைத்து வருந்துகிறார்.
அதனால் தான் அதிஷ்ட்டம் இல்லாதவள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கதாநாயகி கதாநாயகி ஹன்சிகா மோத்வானியின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடக்கிறது.
கதாநாயகி ஹன்சிகா மோத்வானிக்கு என்னவெல்லாம் நினைக்கிறாரோ அதெல்லாம் நடக்க கிடைக்காது என்று நினைத்த வேலை கூட கிடைப்பதோடு, அவர் என்ன நினைத்தாலும் அனைத்துமே உடனடியாக நடக்கிறது.
கதாநாயகி ஹன்சிகா மோத்வானிக்கு நல்லதாக நடந்தாலும், மற்றவருக்கு அது தீமையின் தான் முடிகிறது.
கதாநாயகி கதாநாயகி ஹன்சிகா மோத்வானி பணிபுரியும் இடத்தில் இந்த சமயத்தில், தன் காலில் ஆணி குத்தி விட ஒரு கல் மீது, கதாநாயகி ஹன்சிகா மோத்வானியின் இரத்தம் விழுந்து, அந்த கல் சற்று உயிர்ப்பிக்கிறது.
அந்த கல்லை தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைக்க அதன் மூலமாக, கதாநாயகி ஹன்சிகா மோத்வானிவிற்கு தொடர்ந்து நல்லதே நடந்து வருகிறது.
கிடைக்காத வேலை கிடைக்கிறது வேலையில் தொல்லை கொடுக்கும் அந்த கம்பெனியின் முதலாளி இறந்து விடுவார் என கூற கம்பெனியின் முதலாளி இறந்து விடுகிறார்.
யாரோ ஒருவரை பார்த்து கதாநாயகி ஹன்சிகா மோத்வானி இறந்து விடுவான் என்று சொன்னால், அவர் அடுத்த சில மணி நேரங்களில் யாரை இறந்து விடுவான் என்று சொன்னாலோ அவர்கள் இறந்து விடுவார்.
இப்படி நமக்கு ஒரு மிகப்பெரிய சக்தி ஒன்று தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து நினைத்து வருந்துகிறார்.
கதாநாயகி ஹன்சிகா மோத்வானி அதன் பின்னணி என்னவென்று ஒரு மிகப்பெரிய சக்தி எப்படி நமக்கு வந்தது என தெரியாமல் குழப்பமடையும் நிலையில், அவரை ஒரு அமானுஷ்யம் பின் தொடர்வதை அவர் உணர்ந்து கொள்கிறார்.
அந்த அமானுஷ்யம் சக்திதான் தன் வாழ்க்கையில் ஏற்பட நல்ல காரியத்திற்கும் கெட்ட காரியத்திற்கும் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்பதை கதாநாயகி ஹன்சிகா மோத்வானி ஒரு சிலரை பழிவாங்க அந்த அமானுஷ்யம் தன்னை எதற்காக பயன்படுத்துவதை அவர் தெரிந்து கொள்கிறார்.
நான்கு பேரை கொலை செய்யவிருப்பதாகவும் அந்த அமானுஷ்யம் கதாநாயகி ஹன்சிகா மோத்வானிவிடம் கூற அதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்.
அந்த அமானுஷ்யம் யார்? அந்த அமானுஷ்ய சக்திக்கும் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி என்ன தொடர்பு? எதற்காக கதாநாயகி ஹன்சிகா மோத்வானியை பயன்படுத்துகிறது? தன்னை வைத்து யாரை பழிவாங்க முயற்சிக்கிறது அந்த அமானுஷ்யம்.? எதற்காக நால்வரை கொலை செய்ய நினைக்கிறது அந்த அமானுஷ்ய சக்தி யார்? என்பதுதான் இந்த கார்டியன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த இந்த கார்டியன் திரைப்படத்தில் கதாநாயகியாக அன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானி, முழு கதையை தனி ஆளாக சுமந்திருக்கிறார்.
திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளில் அதிஷ்ட்டம் இல்லாதவராக நடித்து இரக்கப்பட வைத்தவர் இரண்டாம் பாதியில் மிரட்டலான பேயாக மிரட்டவும் செய்கிறார்.
இந்த கார்டியன் திரைப்படத்தில் நடித்திருக்கும் அபிஷேக் வினோத், ஷோபனா பிரனேஷ், தியா, பேபி க்ரிஷிதா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வழக்கமான வில்லன்களாக வரும் இந்த நான்கு பேரும் பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி மிரட்டல்ளான வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.
மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை இருவரும் ரசிகர்களை சிரிக்க வைக்க போராடி இருக்கிறார்கள் ஆனால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவில்லை.
டைகர் தங்கதுரை மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரின் காமெடி காட்சிகள் எந்த இடத்திலும் பலனளிக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அதிர வைப்பதாக கூறி, ஒரே டியூனை திரைப்படம் முழுவதும் பயன்படுத்தி இருக்கிறார்.
அமானுஷ்ய திரைப்படங்களுக்கான ரெகுலர் வழக்கமான பார்மட்டில் பேய் கதை தான் என்பதால், குறிப்பாக பேய் வரும் காட்சிகளில் ரசிகர்களுக்கு எந்தவித பயமும் வராமல் இருப்பது தினைப்படத்திற்கு பெரும் பலவீனம் கதை பெரிதாக நமக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தொழில்நுட்பங்கள் மறறும் காட்சிகள் மூலம் திரைப்பட ரசிகர்களை மிரள வைப்பது தான் அமானுஷ்ய திரைப்படங்களின் முதல் வேலை ஆனால், அப்படியாப்பட்ட வேலையை இந்த கார்டியன் திரைப்படம் செய்ய தவறியிருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘கார்டியன்’ திரைப்படம் ரசிகர்களை மிரள வைக்கவில்லை.











