கோஸ்டி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 1.75. / 5.

நடிகர் நடிகைகள் :- காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெய், ஜெகன், ரெடின் கிங்ஸ்லி, மயில்சாமி, ஸ்ரீமன், ஊர்வசி, ராதிகா சரத்குமார், சுப்பு பஞ்சு, சுவாமிநாதன், மயில்சாமி, சுரேஷ் மேனன், சத்யன், மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, மதன் பாப், ஆடுகளம் நரேன், தங்கதுரை,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கல்யாண்.

ஒளிப்பதிவு :- ஜேக்கப் ரத்தினராஜ்.

படத்தொகுப்பு :- விஜய் வேலு குட்டி.

இசை :- ஷான் சி எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- சீட் பிக்சர்ஸ் பேஷன் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்:- ஜெயராம்.ஜி சுதன் சுந்தரம்.

ரேட்டிங் :- 1.75. / 5.

காவல்துறை உதவி ஆய்வாளராக கதாநாயகி காஜல் அகவர்வால் சிறை சாலையில் இருந்து தப்பித்த மிகப்பெரும் தாதாவான கே எஸ் ரவிக்குமாரை தேடி அலைகிறார்.

தன்னை சிறைசாலைக்கு செல்ல காரணமாக இருந்த ஐந்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய கே எஸ் ரவிக்குமார் திட்டமிடுகிறார்

அந்த திட்டத்தை முறியடித்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் காவல்துறை உதவி ஆய்வாளரான கதாநாயகி காஜல் அகர்வால் ஈடுபடுகிறார்.

இந்த சூழ்நிலையில் யோகிபாபு, ஜெகன் மற்றும் கிங்க்ஸ்லி கதாநாயகி காஜல் அகர்வால் வீட்டிற்கு திருட வரும் மூவரும் விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்த ஒரு வாயு காற்றை சுவாசிக்க மூவரும் மனநலம் பாதிக்கப்படுகிறார்.

இதற்கிடையே கதாநாயகி காஜல் அகர்வால் வீட்டில் அமானுஷ்ய சக்திகள் புகுந்து அவரை பயமுறுத்த அமானுஷ்ய சக்திகள் இருந்து தப்பிப்பதற்கு கதாநாயகி காஜல் அகர்வால் சாமியார்களின் உதவியை நாடுகிறார்.

சில அமானுஷ்ய சக்திகளிடம் சிக்கிக் கொண்டு கஷ்டப்படுகிறார்.

தொடர்ந்து அமானுஷ்யம் காஜல் அகர்வாலை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் அமானுஷ்ய சக்திகளின் தொல்லை மறுபக்கம் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் தொல்லை என்று இந்த இரண்டு கோஸ்டிகளிடமும் சிக்கி தவிக்கும் கதாநாயகி காஜல் அகர்வால்.

அதில் ரவுடி கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து எப்படி தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? அவரை பயமுறுத்தும் அமானுஷ்ய சக்திகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டாரா? பாதுகாத்துக் கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த கோஸ்டி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கோஷ்டி திரைப்படத்தில் கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் காஜல் அகர்வால் காக்கி உடைக்கான கம்பீரம் இன்றி இருக்கிறார்.

காமெடி திரைப்படம் என்பதால் கதையின் நாயகி காஜல் அகர்வால் சிரிப்பு போலீஸ் ஆக தெரிகிறார்.

இந்த கோஸ்டி திரைப்படத்தில் காமெடி வில்லனாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார்.

ஐந்து காவல்துறை அதிகாரிகளை கொலை செய்து ஆக வேண்டும் என லட்சியத்தோடு பயணிக்கும் கதாபாத்திரம் கே.எஸ்.ரவிக்குமார்.

அவர் ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிக்கும் போது, அங்கு நடக்கும் அலப்பறைகள் அனைத்தும் சிரிப்புதான்.

யோகி பாபு, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டியின் காமெடிகள் வழக்கமாகத்தான் இருக்கிறது.

வழக்கமாக இருந்தாலும், அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெய் கதையோடு ஒன்றவில்லை என்றாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது.

ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நடிகை ராதிகா நடித்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி, , ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன், ஊர்வசி, என அவர்களும சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் கதைக்கு ஏற்றபடி காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராக இருந்தாலும், இந்த திரைப்படத்திற்கு இது போதும் என்றே தோன்ற வைக்கிறது.

காமெடி திரைப்படங்களை மட்டும் இயக்கி வரும் கல்யாண், ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே இந்த கோஸ்டி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் தவிர நல்ல கதையோடு இயக்க வேண்டும் என்று இயக்கவில்லை என்பது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தெரிகிறது.

மொத்தத்தில் ‘கோஸ்டி’ திரைப்படம் சிரிக்க வைக்கும் திரைப்படம்.

error: Content is protected !!