சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.25/5.

நடிகர் & நடிகைகள் :- ஊர்வசி, கலையரசன், பாலு வர்கீஸ், குருசோமசுந்தரம், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சுபாஷ் லலிதா சுப்ரமணியன்.

ஒளிப்பதிவு :- ஸ்வரூப் பிலிப்.

படத்தொகுப்பு :- அச்சு விஜயன்.

இசை :- சுப்ரமணியன் கே.வி.

தயாரிப்பு நிறுவனம் :-  ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- டாக்டர் அஜித் ஜாய்.

ரேட்டிங் :- 2.25./ 5.

தாய் ஊர்வசி அவருடைய ஒரே மகன் பாலு வர்கீஸ் உடன் எல்கேஜி காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஊர்வதிக்கு அதிக தெய்வ பக்தியுடன் குடும்பத்தின் பாரம்பரிய விநாயகர் சிலை இருந்து வருகிறார்.

பாலு வர்கீஸ் ஒரு காபி ஷாப்பில் வேலை பார்த்து வரும் அவருக்கு மாலைக்கண் நோய் இருக்க மாலை 6 மணி மேல் இவருக்கு கண் சரியாக தெரியாது.

பாலு வர்கீஸ்க்கு இவருடைய கண் பார்வையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் அதோடு இவருக்கும் ஒரு தனியாக காபி ஷாப் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வரும் மறுபுறம் பணத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் குடும்பத்தின் பாரம்பரியமிக்க விநாயகர் சிலைக்கு பல லட்சங்கள் கொடுக்கிறேன் என ஒரு பெண் சிலையை கொடுக்கும் படி கேட்கிறார்கள்.

ஆனால் அந்த விநாயகர் சிலையோ அவர்கள் குடும்பத்தின் பாரம்பரிய சிலை அது மட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கான ஒரு பாரம்பரியமிக்க இந்த சிலை ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் கண்காணித்தோரும் ஒரு புராதான சிலை இருந்தும் தனது பணத்தேவையை நினைத்து பாலு வர்கீஸ் இந்த சிலையை விற்க்க முயற்சிக்கிறார்.

அந்த பாரம்பரியமிக்க விநாயகர் சிலையை விற்பனை செய்வதற்கு கலையரசன் உதவி செய்கிறார்

இந்த பாரம்பரியமிக்க விநாயகர் சிலையை விற்பனை செய்துவிட்டார்களா? சிலையை விற்பனை செய்யவில்லையா? என்பதுதான் இந்த சார்லஸ் எண்டர்பிரைசஸ் மீதிக்கதை.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் ஊர்வசி கடவுள் பக்தி அதிகம் இருந்த ஒரு பெண்ணாக நடித்திருக்கிறார்.

ஊர்வதிக்கு மகனாக நடித்திருக்கும் ரவி என்கின்ற கதாப்பாத்திரத்தில் ராஜு வர்கிஸ் மிகவும் அருமையாக நடித்திருந்தனர்

தமிழில் பாலு வர்கிஸ்க்கு இது முதல் திரைப்படம் ஆனால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைப்படத்தில் பாலு வர்கீஸ் மிக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இரவு நேரங்களில் கண் தெரியாத வரும் அதே போல பெண் பார்க்கும் போது அந்த பெண்ணிடம் வலியும் காட்சிகளிலும் சரி கலையரசனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளும் மிக அற்புதமாக செய்திருக்கிறார்.

குரு சோமசுந்தரம் ஊர்வசியின் கணவராக நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் இவருக்கு பெரிய காட்சி இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்ததை மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு நல்ல நடிகரை இன்னும் கொஞ்சம் அதிகமாக பயன் படுத்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது.

கலையரசன் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அவர் ஒரு தமிழராகவே அருமையாக நடித்திருக்கிறார்

இசையமைப்பாளர் சுப்ரமணியன் கே.வி இசை மற்றும் பின்னணி இசை அனைத்தும் அருமை.

ஒளிப்பதிவாளர் ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் அமைந்துள்ளது.

இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இவருக்கு முதல் திரைப்படம் முதல் முயற்சி பாராட்டக் கூடிய ஒரு முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.

பழைய கதைக்களம் என்றாலும் திரைக்கதையில் இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் பல புதுமைகள் செய்திருக்கிறார்

நல்ல நட்சத்திர பட்டாளம் இருந்தும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில் சார்லஸ் என்டர்பிரைசஸ் திரைப்படம் ஒருமுறை சென்று வரலாம்.

error: Content is protected !!