ஸ்ட்ரைக்கர் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.25./5.

நடிகர் & நடிகைகள் :- ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி சங்கர், அபிநயா, சதீஷ் குமார், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எஸ் ஏ பிரபு.

ஒளிப்பதிவு :- மணீஷ் மூர்த்தி.

படத்தொகுப்பு :- நாகூரன்.

இசையமைப்பாளர் :- விஜய் சித்தார்த்.

தயாரிப்பு நிறுவனம்: – ASW கிரியேஷன்ஸ், JSJ சினிமாஸ்.

தயாரிப்பாளர் :- ஹென்ட்ரி டேவிட் ஐஆர், ஜஸ்டின் விஜய் ஆர்.

ரேட்டிங் :- 1.25./5.

கதாநாயகன் ஜஸ்டின் விஜய், இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து செய்கிறார்

இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள் அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர்.

அரைகுறையாக பழுது பார்க்க அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் அனைவரும் இறந்துவிடுகின்றனர்.

அதை நினைத்து கதாநாயகன் ஜஸ்டின் விஜய், வருந்திக்கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் கதாநாயகன் ஜஸ்டின் விஜய் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர்.

ஒருநாள், வீடு ஒன்றில் இருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாகவும், அதில் அமானுஷ்யம் இருப்பதாகவும் கதாநாயகன் ஜஸ்டின் விஜய்க்கு தகவல் கிடைக்கிறது.

அமானுஷிய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட கதாநாயகன் ஜஸ்டின் விஜய், இதற்காகவே இருக்கும் இன்ஸ்டியூட் ஒன்றில் சேர்ந்து அமானுஷ்யங்களை பற்றி கதாநாயகன் ஜஸ்டின் விஜய், தெரிந்து கொள்கிறார்.

கதாநாயகன் ஜஸ்டின் விஜய், அமானுஷ்யங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்கிறார்.

அமானுஷ்ய சக்திகள் உடன் பேசும் ஒருவரைப் பேட்டி எடுப்பதற்காக யூடியூபரான கதாநாயகி வித்யாபிரதீப் வருகிறார்.

ஓஜா போர்டு மூலம் இறந்து போன அமானுஷ்ய சக்தியுடன் பேச ஆரம்பிக்கிறார்கள்.

அப்படி அமானுஷ்ய சக்திகளுடன் பேசும் முயற்சியை கதாநாயகன் ஜஸ்டின் விஜய் தொடரும்போது அந்த ஆவி கதாநாயகி வித்யா பிரதீப் உடம்பில் புகுந்து அவர் குரலில் பேசி எச்சரிக்கிறது.

பிறகு அந்த முயற்சியில் ஈடுபடும் கதாநாயகன் ஜஸ்டின் விஜய் கதாநாயகி வித்யா பிரதிப்பை அமானுஷ்ய சக்தி ஒன்று ஆட்டி வைக்கிறது.

அந்த பிரச்னையிலிருந்து இவர்கள் இருவரும் தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த ஸ்ட்ரைக்கர் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த ஸ்ட்ரைக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜஸ்டின் விஜய் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஜஸ்டின் விஜய் நடிப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

திரைப்படத் துறைக்கு நடிக்க வருகிறோம் என்றால் நடிப்பு பயிற்சி பெற்றுதான் வர வேண்டும் அதை கதாநாயகன் ஜஸ்டின் விஜய் தெரிந்து கொள்ளாமல் நடிப்பு துறைக்கு வந்து விட்டார்.

இந்த ஸ்ட்ரைக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக வித்தியா பிரதீப் நடித்திருக்கிறார்.

கதாநாயகி வித்யா பிரதீப் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி சங்கர், அபிநயா, சதீஷ் குமார், இவர்கள் அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் சுமாராக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

வழக்கமான, ஓஜோ போர்ட், வழக்கமான வீடு, வழக்கமான பேய், தேய்ந்து போன கதை என திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடையே எதுவும்
ஒட்டவில்லை என்பதால் பெரிதான ஈர்ப்பை ஸ்டிரைக்கர் கொடுக்கவில்லை.

அமானுஷ்ய சக்திகளை வரவழைத்து அமானுஷ்ய சக்திகளுடன் பேசும் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் அமானுஷ்ய சக்திகளுடன் பேசும் ஓர் அம்சத்தை மட்டுமே பிரதானப்படுத்தி இயக்குனர் எஸ் ஏ பிரபு கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ளது சற்று சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் ஸ்ட்ரைக்கர் திரைப்படம் மிக மிக சுமார்.

error: Content is protected !!