ஹார்டிலே பேட்டரி’ இணைய தொடர் விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- குரு லக்ஷ்மன், பாடினி குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியால், ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீனா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா சீனு. மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சதாசிவம் செந்தில் ராஜன்.
ஒளிப்பதிவாளர் :- கூலி சௌந்தர்ராஜன்.
படத்தொகுப்பாளர் :- நிஜாம்தீன் பி.
இசையமைப்பாளர் :- மைக்கேல் ஆகாஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- எலிசியம் மேக்சிமா இந்தியா, அல்லோ மீடியா.
தயாரிப்பாளர்கள் :- எட்வின் லூயிஸ் விஸ்வநாத், ஷரண்யா எல் ஷர்மா, ராஜா டிஎஸ்
ரேட்டிங் :- 3.5./5.
இனையத்தொடர் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் இணையத் தொடரை ஜீ5 (ZEE5) டிசம்பர் 16 தேதி முதல் வழங்குகிறது.
கதாநாயகி பாடினி குமார், பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து புத்திசாலித்தனமான விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள்.
கதாநாயகி பாடினி குமார், தாய் தந்தையரின் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற திருமண வாழ்க்கையை பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.
கதாநாயகி பாடினி குமார், தன்னுடைய 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவதற்காக அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கிறாள்.
காதலில் உண்மை தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த கதாநாயகி பாடினி குமார், அந்த கனவை தன்னுடைய 24-வயதில், கதாநாயகி பாடினி குமார், லவ் மீட்டர் என்ற பெயரில் கருவியை ஒன்றை உருவாக்குகிறாள்.
காதலிப்பதாக சொல்பவர்களின் கைரேகையை லவ் மீட்டர் என்ற கருவியின் மீது தங்களுடைய கைரரியை பதிவு செய்தால் அவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா? பொய்யாக பழகுகிறார்களா? என்பதை சொல்லிவிடும் அதை வைத்து ஒரு சில காதல் ஜோடிகளை சோதித்துப் பார்க்க அதனால் கிடைக்கிற அனுபவங்கள் ஏடாகூடமாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கதாநாயகன் குரு லக்ஷ்மன், என்ற காமிக் ரைட்டரை சந்திக்கிறார்.
கதாநாயகன் குரு லக்ஷ்மன் கதாநாயகி பாடினி குமாரை வந்தவுடன் காதல் கொள்கிறார்.
கதாநாயகன் குரு லக்ஷ்மன், மீது கதாநாயகி பாடினி குமார், காதலில் வசப்படுகிறாள்.
கதாநாயகன் குரு லக்ஷ்மனை பிடித்திருந்ததால் அவனை காதலிக்கலாமா? காதலிக்க வேண்டாமா? கதாநாயகி பாடினி குமார, குழப்பம் ஏற்பட லவ் மீட்டர் கருவியை வைத்து குழப்பத்தை தீர்த்துக்கொள்ள முடிவெடுக்கிறாள்.
கதாநாயகன் குரு லக்ஷ்மன், கதாநாயகி பாடினி குமார் இருவரும் காதலிக்க தொடங்கினார்களா? காதலிக்க தொடங்கவில்லையா? என்பதுதான் இந்த ‘ஹார்டிலே பேட்டரி’ இனையத் தொடரில் மீதிக்கதை.
இந்த ‘ஹார்டிலே பேட்டரி’ இணைய தொடரில் அறிமுக கதாநாயகனாக குரு லக்ஷ்மன், நடித்திருக்கிறார்.
அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் குரு லக்ஷ்மன், சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த ‘ஹார்டிலே பேட்டரி’ இணைய தொடரில் கதாநாயகியாக பாணினி குமார் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பாடினி குமார் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளார்.
கதாநாயகன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவாரவி மற்றும் சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியாள், ஷர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா, சீனு என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கூலி சௌந்தரராஜனின் ஓளிப்பதிவு மூலம் தொடருக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் மைக்கேள் ஆகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது.
நாம் அனைவரும் வாழும் உலகில் அனைத்தையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு மிஷின் உள்ளது போல் காதலன் காதலி உண்மையாக நேசிக்கின்றார்களா என்பதை அறிவதற்கு இப்படி ஒரு கருவி இருந்தால் நிறைய காதலர்கள் பிரிய மாட்டார்கள்.
இப்படி ஒரு கருவியை கண்டுபிடித்தால் அந்த விஞ்ஞானி மட்டும் தான் உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருப்பார்.
காதலை கண்டுபிடிக்கும் லவ் மிஷினை வைத்து அறிவியலும் காதலும் கலந்து நல்ல வெப் சீரிஸை சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சதாசிவம் செந்தில் ராஜன்.
மொத்தத்தில், இந்த ‘ஹார்டிலே பேட்டரி’ இணைய தொடர் சிறப்பாக உள்ளது.











