“மாண்புமிகு பறை” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- லியோ சிவக்குமார் , காயத்ரி ரெமா, கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், பொன்சுரேஷ், அரங்க குணசீலன் நந்தகுமார், சரவணன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ் விஜய்சுகுமார்.
ஒளிப்பதிவாளர் :- ரா. கொளஞ்சி குமார்.
படத்தொகுப்பாளர் :- சி. எஸ். பிரேம் குமார்.
இசையமைப்பாளர் :- தேனிசை தென்றல் தேவா.
தயாரிப்பு நிறுவனம் :- சிபா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- சுபா & சுரேஷ் ராம்.
ரேட்டிங் :- 2.5./5.
இசைக்கலைஞர்களான கதாநாயகன் லியோ சிவக்குமார் அவருடைய நண்பர் ஆர்யன் இருவரும் இணைந்து அந்த கிராமத்தில் ஆதி பறையிசை குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
பறை என்ற இசை அழிந்து வரும் நிலையில் இந்த பறை இசை நாளைய சமுதாயத்திற்கு தெரிய வேண்டும் என கிராமத்தில் உள்ள சிறுவன் சிறுமிகள் சொல்லிக் கொடுத்து அந்த கலையை வளர்க்கும் முயற்சியிலும், அந்த பறை இசை பெருமையை உலகறிய செய்யும் முயற்சியிலும் கதாநாயகன் லியோ சிவக்குமார் அவருடைய நண்பர் ஆர்யன் இருவரும் இணைந்து செய்து வருகிறார்கள்.
சாவு வீட்டிலும், திருவிழா நடக்கும் கோவில்களிலும் பறை இசையை அடிப்பதில்லை என்ற கொள்கையோடு இருப்பவர்கள் இருவரும். அவர்கள் இசைக்குழு செல்லும் பல இடங்களில் சாதி மதம் பிரச்சனை தீண்டாமை கொடுமை நடக்கிறது.
கதாநாயகன் லியோ சிவகுமார், கண்டவுடன் காதல் கொள்வதும் உடனை கதாநாயகி காயத்ரி ரெமோவை காதல் திருமணம் செய்கிறார்.
அதே நேரத்தில், பறை இசையை மட்டும் இன்றி அந்த இசைக் கலைஞர்களையும் இழிவாகப் பார்க்கும் சிலரால் இசை கலைஞர்கள் சாதிப்பிரச்சனை ஏற்படுகிறது.
பறை இசை நிகழ்ச்சிக்கு செல்லும் ஊரில் ஒரு ஆதிக்கச் சாதி ஆட்களிடம் கதாநாயகன் லியோ சிவக்குமார் அவருடைய நண்பர் ஆர்யனை கொலை செய்யப்படுகிறார்.
சாதி பிரச்சினையில் கதாநாயகன் லியோ சிவக்குமார் அவருடைய நண்பர் ஆரியனை செய்தவர் யார்?, என்பதுதான் இந்த ‘மாண்புமிகு பறை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “மாண்புமிகு பறை” திரைப்படத்தில் கதாநாயகனாக லியோ சிவகுமார் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்
பறை இசை கலைஞராக நடிக்க தெரியாமல் நடித்திருக்கிறார் லியோ சிவகுமார் பறை வாசிக்கும் காட்சிகளில் அவரின் முகத்தில் எந்த விதமான உணர்வுகளும் அசைவுகளும் இல்லாதது அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இல்லை.
கதாநாயகன் லியோ சிவகுமாரின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆரியன், கதாநாயகன் லியோ சிவகுமாருக்கு இணையாக வசனம் பேசி, நடனம் ஆடி நடித்திருந்தாலும் பறை இசைக்கலைஞர் என்ற கதாபாத்திரத்திற்கு அடையாளத்தை கொடுக்க முடியவில்லை.
இந்த “மாண்புமிகு பறை” திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி ரெமா, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, உணர்வுப்பூர்வமாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு மூலம் கிராமத்து அழகை ரசிக்கும்படி திரைப்படம் ஆக்கியிருக்கிறார்..
இசையமைப்பாளர் தேவா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அதிகளவில் மிகவும் சத்தமாக இருக்கிறது.
திரைப்படத்தின் அதிகளவு காட்சிகளில் சாதி பிரச்சனை பற்றி பேசுவதால், இந்தக் கதையில் எதை சொல்ல வந்தாரோ அதை சொல்ல மறந்து பறை இசையின் தாக்கத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை.
பறை இசையின் பெருமையையும், அந்த இசைக் கருவியை வாசிப்பவர்கள் எப்படி எல்லாம் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள், என்பதையும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.விஜய் சுகுமார்.
மொத்தத்தில், ‘மாண்புமிகு பறை’ பறை பெரிய அளவில் சொல்ல மறந்து விட்டார்கள்.











