‘நந்தன்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- எம் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, கட்ட எறும்பு ஸ்டாலின், வி ஞானவேல்,ஜி எம் குமார், சித்தன் மோகன், சரவண சக்தி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- இரா சரவணன்.

ஒளிப்பதிவாளர் :- ஆர்.வி. சரண்.

படத்தொகுப்பாளர் :- நெல்சன் ஆண்டனி.

இசையமைப்பாளர் :- ஜிப்ரான் வைபோதா.

தயாரிப்பு நிறுவனம் :- இரா என்டர்டைன்மெண்ட்.

தயாரிப்பாளர் :- இரா சரவணன்.

ரேட்டிங்:- 3 /5.

பரம்பரை பரம்பரையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியே இல்லாமல் பாலாஜி சக்திவேல் 40 ஆண்டு காலமாக தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும்போதே தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இந்த ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரவு போடுகிறார்கள்.

ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட முயற்சிக்கும் தலித் சமூகத்தை சார்ந்த நந்தன் கொல்லப்படுகிறார்.

வணங்கான்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் பாலாஜி சக்திவேல் தீவிர விசுவாசியாக கூல் பானை என்கிற அம்பேத்குமார் கதாநாயகன் சசிகுமார் இருந்து வருகிறார்.

இந்த ஆண்டும் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியே இல்லாமல் வெற்றிபெற இருக்கும் பாலாஜி சக்திவேல் மகிழ்ச்சியில் இருக்கும் போது அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்து சேர்கிறது.

வணங்கான்குடி கிராமத்தில். பொது பஞ்சாயத்து தொகுதியாக உள்ள இந்த கிராமத்தில் சில பல அரசியல் காரணங்களால் தலித்துகள் மட்டுமே போட்டியிடும் தனி ரிசர்வ் தொகுதியாக பஞ்சாயத்து தொகுதியாக மாற்றப்படும் நிலையில் வணங்கான்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தலுக்கான நாமினேஷன் தொடங்குகிறது.

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடக்க தொடங்குகிறது.

இனிமேல் இந்த வணங்கான்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போடியிட முடியாது என தெரிந்துகொண்ட பாலாஜி சக்திவேல் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தன் சார்பாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்கிறார்.

தன் சார்பாக கதாநாயகன் சசிகுமாரை இந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு நிற்க வைத்து வெற்றிபெற செய்கிறார்.

தனது பதவி அரசியல் தன் மக்களின் முன்னேற்றம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக தன் தலைவர் பாலாஜி சக்திவேல் சொல்வதை மட்டும் செய்கிறார்.

ஊராட்சி மன்ற தலைவரான வெற்றி பெற்றதற்குப் பின்னும் தன் மக்களின் சின்ன சின்ன  தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை கதாநாயகன் சசிகுமாருக்கு பல விதமான கேள்விகளை ஏற்படுத்துகின்றன.

ஆள்வதற்கு தான் அதிகாரம் தேவை என நினைக்கும் கதாநாயகன் சசிகுமார் வாழ்வதற்கே அதிகாரம் எவ்வளவு முக்கியம் என சொல்வதுதான் இந்த நந்தன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த நந்தன் திரைப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடித்திருக்கிறார்.

கூல் பனையாகவும் அம்பேத்குமாராகவும்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார் தொடக்கத்தில் நடிப்பில் சில புதுமையை காட்டினாலும் அவரது கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.

இந்த நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமி நடித்திருக்கிறார்

கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருதி பெரியசாமி சிறப்பாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரமும் முழுமை பெறாமலேயே இருக்கிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பாஸ் மார்க் வாங்குகிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி. சரண் ஒளிப்பதிவு முலம் அந்த ஊரின் இயல்பை திரையில் பிரதிபலிக்கிறது.

.அரசியல் அதிகாரம் கிழ் சாதி மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்கிற அரசியல் கருத்தாக்கம் பற்றி நாம் பரவலாக பேசினாலும் இன்னும் சில கிராமங்களில் தலித் மக்களுக்கு தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றிய விளிப்புணர்வே இல்லாத நிலையும் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படியே தங்கள் உரிமைகளை தலித் மக்கள் பெற நினைத்தாலும் ஆதிக்க சாதியினர் அவர்களிடம் அதிகாரம் செல்லாமல் இருக்க எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை நந்தன் திரைப்படம் பேசுகிறது.

மொத்தத்தில் – நந்தன் திரைப்படம் இன்னும் பல்வேறு கிராமங்களில் நிலவிவரும் சாதிய ஒடுக்குமுறையை வெகுஜன வெளிச்சத்திற்கு கொண்டு வரும் திரைப்படமாக அமையும்.