‘ஜனநாயகன்’ ( Jana nayagan ) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, நிழல்கள் ரவி, சுனில், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எச். வினோத்.
ஒளிப்பதிவாளர் :- சத்யன் சூரியன்.
படத்தொகுப்பாளர் :- பிரதீப் ஈ. ராகவ்.
இசையமைப்பாளர் :- அனிருத் ரவிச்சந்தர்.
தயாரிப்பு நிறுவனம் :- கேவிஎன் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- வெங்கட் கே. நாராயணா.
மக்கள் தொடர்பு :- ரியாஸ் கே அஹமத்.
ரேட்டிங் :- 2.5./5.
தமிழ் திரைப்பட உலகிலிருந்து அரசியலுக்கு அடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படம் மிக முக்கியமான அரசியல் திருப்புமுனைப் திரைப்படம் என்பதால், ‘ஜனநாயகன்’ தினைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் விண்ணைத் தொட்டிருந்தது.
தெலுங்கு திரைப்பட உலகில் வெளிவந்து வெற்றி பெற்ற நந்தமூரி பாலகிருஷ்ணா
நடித்த ‘ திபகவந்த் கேசரி’ திரைப்படத்தின் மறு உருவாக்கம் தான் இந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று 23/07/2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கதாநாயகன் விஜய் ஒரு வழக்கில் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் கைதியாக இருக்கிறார்.
கதாநாயகன் விஜய் அந்த சிறைச்சாலைக்குள் இருக்கும் ஒரு பெரும்புள்ளியைத் தப்பிக்க வைக்க மிகப்பெரிய ஙகலவரத்தை நடத்த திட்டம் தீட்டுகிறார்கள்.
கதாநாயகன் விஜய் அதை முறியடிப்பதால் காவல்துறை அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கதாநாயகன் விஜய் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை ஏற்படுகிறது.
கதாநாயகன் விஜய் தாயார் ரேவதி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தனது மகன் கதாநாயகன் விஜயை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார்
இதனால் கதாநாயகன் விஜய்க்கு தனது தாயை பார்க்கச் செல்வதற்கு உதவும் காவல்துறை அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் பணி இடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகிறார்.
மீண்டும் பணியில் சேர்வதற்காக காவல்துறை அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் உயர் அதிகாரியை சந்திக்க செல்லும் போது ஒரு விபத்தில் இறந்து விடுக்கிறார்.
காவல்துறை அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனனின் விபத்தில் இறந்த பின்னர் அவரது மகள் மமிதா பைஜூவை அவருடைய தந்தை கௌதம் வாசுதேவ் மேனனின் விருப்பப்படி அவரது மகளான மமிதா பைஜூவை எப்படியாவது ராணுவத்தில் சேர்த்து விட வேண்டும் என கதாநாயன் விஜய் துடிக்கிறார்.
கதாநாயன் விஜய் அவருடைய தந்தை கனவை நிறைவேற்ற மமிதா பைஜூவிற்க்கு தொடர்ந்து பயிற்சிகள் அளித்து ராணுவத்தில் சேர்த்து விட முயற்சிகளை மேற்கொள்கிறார்.
அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து மக்களையும் காலி செய்து விட்டு அந்த நாட்டையே சுடுகாடாக மாற்றிவிடும் வில்லன் பாபி தியோல் ஒரு பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சி செய்யும் நிலையில் இந்திய கடற்படையை தாக்கி இந்தியாவுக்குள் நுழைந்து விடுக்கிறார.
இந்த நிலையில் வில்லன் பாபி தியோலுக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் ஒரு விஷயத்தில் மாட்டிக்கொள்ளும் மமிதா பைஜூவை, கொலை செய்ய வில்லன் பாபி தியோல் முடிவு செய்கிறார்.
மமிதா பைஜூவை, வில்லன் பாபி தியோலிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் கதாநாயகன் விஜய்.
மமிதா பைஜூவுக்கு பாதுகாவலராக இருக்கும் கதாநாயகன் விஜய் பற்றி தெரிந்து வில்லன் பாபி தியோல் அதிர்கிறார்.
கதாநாயகன் விஜய்யை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என வில்லன் பாபி தியோல் துடிக்கிறார்.
கதாநாயகன் விஜய் வில்லன் பாபி தியோல் இருந்து. மமிதா பைஜூவை காப்பாற்றினாரா?, காப்பாற்றவில்லையா?,
வில்லன் பாபி தியோல் யார்? அவருடைய பின்னணி என்ன? கதாநாயகன் விஜய்க்கும், வில்லன் பாபி தியோல் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை என்ன ?,
இந்தியாவில் வில்லன் பாபி தியோல் நிறைவேற்ற துடிக்கும் சதி திட்டம் என்ன?
வில்லன் பாபி தியோல் நிறைவேற்ற துடிக்கும் சதி திட்டத்தை கதாநாயகன் விஜய் முறியடித்தாரா?, முறியடிக்க வில்லையா?, என்பதுதான் இந்த ஜனநாயகம் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஜனநாயகன் திரைப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடித்திருக்கிறார்
கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய்யின் எனர்ஜியும் ஸ்கிரீன் பிரசன்ஸும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.
குறிப்பாக, வழக்கமான மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல், ஒரு தந்தையாக பாசத்தையும், அதே சமயம் பெண் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் உரையாடல்களிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகன் விஜய்யின் பஞ்ச் வசனங்கள் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் விசில்களைப் பறக்க வைக்கின்றன.
ஒன் மேன் ஆர்மியாக கதையை தாங்கி பிடித்துள்ார் கதாநாயகன் விஜய். ஆக்ரோஷமாகட்டும் மகளிடம் பாசம் காட்டுவதாகட்டும் இரு வேறு பரிமாணங்களில் மிரட்டியுள்ளார்.
கடைசி திரைப்படம் என்பதால் நடிப்பிலும் ஆக்சன்களும் நடனத்திலும் தான் மாஸ் காட்டியுள்ளார்.
தளபதி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்த ஜனநாயகன் திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே ‘காயல்’ என்ற கதாபாத்திரத்தில் தைரியமான தொலைக்காட்சி செய்தியாளராக நடித்துள்ளார்.
கதைப்போக்கில் கதாநாயகன் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு ஆதரவாகவும், உண்மையைக் கொண்டு சேர்க்கும் ஊடகப் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.
குறைந்த நேரமே வந்தாலும், திரையில் தனது அழகாலும் எனர்ஜியாலும் கவனத்தை ஈர்க்கிறார்.
வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதா பைஜு கதாநாயகன் விஜய்க்கு நிகரான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
பயந்த சுபாவம் கொண்ட பெண்ணிலிருந்து, தந்தையின் வழிகாட்டுதலால் கம்பீரமான பெண்ணாக மாறும் அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பார்வையாளர்களைக் துறுதுறு நடிப்பால் கவர்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் காட்டும் கம்பீரம் கனகச்சிதம். ஆங்கிலம் அதிகம் பேசாமல் நார்மல் தமிழ் பேசுவது அருமையாக உள்ளது.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாபி தியோல் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
பிரியாமணி, சுனில், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி கஜராஜ் என மொத்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ஒளிப்பதிவு மூலம் ஒவ்வொரு சண்டை காட்சியையும் பிரம்மாண்டமாக பதிவு செய்திருக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கிளைமாக்ஸ் காட்சிகள் காட்சியமைப்பில் மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும்
ஆட்டம் போட வைக்கிறது.
குறிப்பாக, தளபதி கச்சேரி, ராவண மவண்டா பாடல்கள் சிலிர்ப்பூட்டுகிறது.
விறுவிறுப்பான பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் பல இடங்களில் பிரசார நெடி கொஞ்சம் தூக்கலாக இருப்பது போல் உணர வைக்கிறது.
வில்லன் கதாபாத்திரமான பாபி தியோலுக்கு இன்னும் கொஞ்சம் வலுவான பல காட்சிகள் அமைத்திருக்கலாம்.
இயக்குநர் எச்.வினோத், முழுக்க முழுக்க தமிழ்த் திரைப்பட ரசிகர்களை மனதில் வைத்து ஒரு கமர்ஷியல் திரைப்படமாக படைக்கவில்லை ஆனால் அதற்கு பதில் தளபதி ச. ஜோசப் விஜயின் தவெக கட்சி பிரச்சார திரைப்படமாக படைத்திருக்கிறார்.
சிறையில் உள்ள கைதி, ஒரு பெண்ணுக்கு பாசமான தந்தை , மலைவாழ் மக்களுக்கு வனக்காவலர், காவல்துறை ஆய்வாளர், என தளபதி விஜய்க்கு பல்வேறு கதாபாத்திரங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் எச்.வினோத், ஒன்றை கூட உணர்வுப்பூர்வமாகவும், மிகவும் அழுத்தமாகவும் கதையில் எழுதாமல். முழுக்க முழுக்க ச. ஜோசப் விஜயின் தவெக கட்சி தேர்தல் பிரச்சார படமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அதை கூட ஒரு நேர்கோட்டில் சொல்லாமல், பலவித குழப்பங்களோடு அரைகுறையாக சொல்லி திரைப்படத்தை சொதப்பியிருக்கிறார்.
மொத்தத்தில், – இந்த ஜனநாயகன் திரைப்படம் நோ லாஜிக்.. ஒன்லி மேஜிக் என சொல்வது போல எந்த காட்சியிலும் லாஜிக் இல்லை ஆனாலும் நீளமும் அதிகம் திரைப்படத்தில் வன்முறையும் அதிகம்.









