லவ் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.

நடிகர் & நடிகைகள் :- பரத், வாணி போஜன், ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், ஸ்வயம் சித்தா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆர்.பி.பாலா.

ஒளிப்பதிவு :- பி ஜி முத்தையா.

படத்தொகுப்பு :- அஜய் மனோஜ்.

இசை :- ரோனி ரபேல்

தயாரிப்பு நிறுவனம்:- ஆர்.பி. பிலிம்ஸ்

தயாரிப்பாளர் :- ஆர் பி பாலா – கௌசல்யா ஆர.பி.பாலா.

ரேட்டிங் :- 2.5./ 5

 

கதாநாயகன் பரத் கதாநாயகி வாணி போஜன் இருவருக்கும் சில நாட்கள் காதலித்து விட்டு ஒருவரை ஒருவர் பிடித்துப் போக திருமணம் நடைபெறுகிறது.

கதாநாயகி வாணி போஜனின் தந்தை ராதா ரவி தன் மகளுக்கு அன்பளிப்பாக கொடுத்த அபார்ட்மென்ட்டில் இருவரும் திருமணத்திற்கு பிறகு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர்களின் உறவில் எதிர்பாராத விதமாக பிரச்சினை ஏற்படுகிறது.

கதாநாயகன் பரத் செய்த வியாபாரத்தில் கோடிக்கணக்கில் எற்பட்ட நஷ்டத்தால் மன அழுத்தத்தில் அவதிப்படும் கதாநாயகன் பரத் மதுவில் நிம்மதி தேடுகிறார்.

ஆரம்பத்தில் கதாநாயகன் பரதிடம் சகித்துக் கொண்டு வாழும் கதாநாயகி வாணி போஜன், ஒருகட்டத்தில் அவர்களுக்கு பிரச்சனை அதிகரிக்க அவரை விட்டு பிரிய நினைக்கிறார்.

இருவருக்கும் ஏற்படும் வாக்கு வாதத்தின் இடையே மிகப்பெரிய அளவில் சண்டை அதிகரிக்கிறது.

ஒரு கட்டத்தில் கோபத்தில் தன் மனைவி கதாநாயகி வாணி போஜனை தாக்க அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இறந்து விடுகிறார்.

இறந்த தனது மனைவி வாணி போஜன் சடலத்தை யாருக்கும் தெரியாமல் பாத்ரூமில் மறைத்து வைக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகன் பரத் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.

இறந்த தனது மனைவி வாணி போஜனின் தந்தை ராதாரவி வீட்டிற்கு வர, சடலத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க கதாநாயகன் பரத் முயற்சிக்கிறார்.

இறுதியில் கதாநாயகி வாணி போஜன் சடலத்தை கதாநாயகன் பரத் எப்படி மறைத்தாரா ? இந்த பிரச்சினையில் இருந்து எப்படி கதாநாயகன் பரத் மீண்டாரா? மீளவில்லையா? என்பதுதான் இந்த லவ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த லவ் திரைப்படத்தில் பரத் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அவருடைய தொழில் நஷ்டத்தால் வீட்டில் முடங்கி மனைவி கதாநாயகி வாணிபோஜனிடம் அவமானப்படும் கணவனாக கதாநாயகன் பரத் வாழ்ந்துள்ளார் .

இந்த லவ் திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

கதாநாயகி வாணி போஜனிடம் கதாநாயகன் பரத் சண்டையிடும் காட்சியில் எதார்த்த நடிப்பையும் காட்டியுள்ளார்.

கதாநாயகி வாணி போஜன் பாதி படத்தில் இறந்து போன டெட் பாடி ஆக மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்

நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, டேனி ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு சுவாரஸ்யம் கூட்டியுள்ளனர்.

ஒரே ஒரே காட்சியில் ராதாரவி அதிரடியாக வந்து செல்கிறார்.

ஸ்வயம் சித்தா ஒரே காட்சியில் வந்து அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பி. ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ரோனி ராப்சல் பாடல் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.

திருமணத்துக்குப் பினபு கணவன், மனைவி ஒருவரை ஒருவர் காதலித்து விட்டுக் வாழ்க்கை ஆரம்பித்தால் வாழ்க்கை மிகவும் சுகமானதாக இருக்கும்.

ஆனால் இதில் கணவன்-மனைவி இருவருக்கிடையே ஈகோவால் வீட்டில் பூதாகரமாக வெடிக்கும் பிரச்சினையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.பி.பாலா.

ஒரே வீட்டில் கதை நகர்வதால் சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.

அதோடு கதை தாவி செல்வதை தவிர்த்து கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்..

மொத்தத்தில் லவ் திரைப்படம் திருமணத்திற்கு பின் நடக்கும் கதையைச் சொல்லி இருக்கிறார்.

error: Content is protected !!