போர் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அர்ஜுன்தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோ, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பிஜாய் நம்பியார்.

ஒளிப்பதிவாளர் :- ஜிம்ஷி காலிட் & பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா.

படத்தொகுப்பாளர் :- பிரியங்க் பிரேம் குமார்.

இசையமைப்பாளர்கள் :- சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி. நவீன டேப் ஸ்கோர்கள் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்).

தயாரிப்பு நிறுவனம் :- தொடர், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா.

தயாரிப்பாளர்கள் :- டி-சீரிஸ், பிஜாய் நம்பியார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர்.

புதுச்சேரியில் உள்ள செயின்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஹெச்.டி-யை முடித்து கதாநாயகன் அர்ஜுன் தாஸ் பட்டம் வாங்க முயன்று கொண்டிருக்கிறார்.

அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவராக மற்றொரு கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் நுழைகிறார்

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் மற்றொரு கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் இருவருக்கும் பள்ளிப் படிக்கும் போது தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை தந்த கதாநாயகன் அர்ஜூன்தாஸை, கல்லூரி படிக்கும் போது மற்றொரு கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் பழி வாங்கத் துடிக்கிறார்.

கல்லூரியில் இருவருக்குமான பகை நிகழ்காலத்திலும் மிகப்பெரிய போராக வெடிக்கிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் அடிதடி, வெட்டுக்குத்து என பெரிய பகை உண்டாகிறது.

இது ஒரு புறம் இருக்க புதுச்சேரியில் உள்ள செயின்ட் மார்ட்டின் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தலைவருக்கான தேர்தல் தொடர்பாக டி.ஜெ.பானு அரசியல் வாதி மற்றும் கல்லூரி டிரஸ்ட்டியின் மகளான அம்ருதாவுக்கும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மோதிக் கொள்கிறார்கள்.

இறுதியில் கதாநாயகன் அர்ஜுன் தாஸ் மற்றொரு கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் இருவருக்கும் இடையேயான மோதல் என்ன ஆனது? மோதல் முடிவுக்கு வந்ததா? முடிவுக்கு வரவில்லையா? என்பதுதான் இந்த போர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த போர் திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அர்ஜூன் தாஸ் தனக்கே உரிய வில்லன் ஸ்டைலில் நடித்து அருமையாக அசத்தி இருக்கிறார்.

பிரபு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் மூத்த மாணவராக, கோபக்கார இளைஞராக அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் அனல் பறக்கிறது.

இதற்கு முன் நடித்த திரைப்படங்களை போலவே இந்த திரைப்படத்திலும் அதே ஸ்டைலில் நடித்து இருப்பதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் கதாநாயகன் அர்ஜுன் தாஸ் அவர்களே.

இந்தப் போர் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகன் காளிதாஸ் ஜெயராம் பழிவாங்கும் உணர்வுடன் திரைப்படம் முழுவதும் தனது நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த போர் திரைப்படத்தில் கதாநாயகிகளாக பானு, சஞ்சனா, இருவரும் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் பானு, சஞ்சனா, ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.

இந்த போர் திரைப்படத்தில் காதலர்களுடன் சண்டை, சல்லாபம் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

வில்லியாக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீனிவாசன், காமெடி கதாபாத்திரத்தில் கதாநாயகனின் நண்பராக நடித்திருக்கும் மெர்வின் ரோசரியோ, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய் என மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் ஜிம்ஷி காலிட் & பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி. ஆகியோரது இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர்கள் நவீன டேப் ஸ்கோர்கள் ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன் பின்னணி இசை சில காட்சிகளுக்கு சுறுசுறுப்பளித்தாலும், பல இடங்களில் மந்தமாக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

திரைப்பட ரசிகர்களுக்கான திரைப்படமாக கொடுக்காமல் தனக்கான திரைப்படமாகவே இந்த போர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிஜாய் நம்பியார்.

கல்லூரியில் நடக்கும் மோதலின் முக்கியத்துவத்தை கதை மற்றும் திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை வடிவமைத்ததில் காட்டியிருந்தால், நல்ல நல்ல திரைப்படங்களின் வரிசையில் இந்த ‘போர்’ திரைப்படமும் வெற்றி இணைந்திருக்கும்.

இயக்குனர் மணிரத்னத்தின் சிஷ்யன் என்பதை நிரூபிக்க தவறிவிட்டார் இயக்குநர் பிஜாய் நம்பியார்.

மொத்தத்தில், இந்த ‘போர்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக ரசிகர்களை சாகடிக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.

error: Content is protected !!