’கலன்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் – அப்புக்குட்டி, தீபா, காயிரி, சம்பத் ராம், ராஜ் , சேரன்ராஜ், மணிமாறன், பீட்டர், குருமூர்த்தி, பீட்டர், சரவணன், வேலு, யாஷர், முகேஷ், ராஜேஷ், மோகன் ,பாலா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – வீரமுருகன்.

ஒளிப்பதிவாளர் – ஜேஜெயக்குமார், ஜேகே.

படத்தொகுப்பாளர் – விக்னேஷ் வர்ணம். விநாயகம்.

இசையமைப்பாளர் – ஜெர்சன்.

தயாரிப்பு நிறுவனம் – ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி

தயாரிப்பாளர்கள் – ராமலட்சுமி, அனுசுயா, குமாரி விஷ்வா

ரேட்டிங் – 2.5./5

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெட்டுடையார் காளி, என்கிற தீபா சங்கர் கணவனை இல்லாமல் கஷ்ட்டப்பட்டு தனது ஒரே மகன் யாசரை படிக்க வைத்து ஆளாக்கி விடுகிறார்.

வெட்டுடையார் காளி, தீபா சங்கர் அவருடைய தம்பி அப்புக்குட்டி பக்கபலமாக இருக்கிறார்.

யாசரின் நண்பன் கஞ்சா விற்கும் சம்பத் ராம் நண்பனின் தங்கைக்கு பிரச்சனை வருகிறது.

கஞ்சா விற்கும் சம்பத் ராம் இருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் யாசர், கஞ்சா விற்கும் சம்பத் ராம் போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை எப்படியாவது அழுத்தே தீருவேன் என சபதம் எடுக்கிறான்.

யாசரின் உயிருடன் இருந்தால் தங்களுடைய கஞ்சா போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்திற்க்கு சிக்கலாகிவிடும் என்பதால், நண்பன் மூலமாகவே யாசரை கொலை செய்துவிடுகிறது.

போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் யாசர் மரணத்திற்கு பழி தீர்ப்பதோடு, கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கூட்டத்தை வேறோடு அழிக்க யாசரின் தாய் வெட்டுடையார் காளி தீபா சங்கர், அவருடைய தம்பி அப்புக்குட்டியும் பழி வாங்குவதற்காக களம் இறங்குகிறார்கள்.

யாசரின் கொலைக்கு காரணமாக இருந்த போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் சம்பத்ராமை பழிவாங்கினார்களா?, பழி வாங்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘கலன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

அப்புக்குட்டி தனது எதார்த்தமான நடிப்பால் திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

வெட்டுடையார் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாசமிகு அப்பாவாக நடித்திருக்கும் தீபா, தனது மகனின் மரணத்திற்குப் பிறகு எடுக்கும் அவதாரத்தில் காளியாக மிரட்டியிருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராமின் மிகப்பெரிய அளவில் நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சம்பத் ராம் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

வில்லத்தனம் மூலம் திரைப்படம் பார்க்கும் திரைப்பட ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.

கஞ்சா வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காயத்ரியின் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார.

வேங்கை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், தென் மாவட்ட இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் நடிப்பின் மூலம் கர்ஜித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேரன் ராஜ், மணிமாறன் மற்றும் வேங்கையின் நண்பராக நடித்திருக்கும் நடிகர்கள் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தென் மாவட்ட மக்களை பிரதிபலிக்கவும் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் ஒளிப்பதிவு மூலம் தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை , காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜெர்சன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து உள்ளது.

முக்கிய பிரச்சனையை கருவாக கொண்டு மிகப்பெரிய அளவில் உள்ள போதைப் பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் மற்றும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் அலறல்களை அழுத்தமாக பதிவு செய்து எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வீரமுருகன்.

மொத்தத்தில் இந்த கலன் திரைப்படம் போதைப் பொருள் கலாச்சாரம் அழிக்கும் திரைப்படம்.