கட்டா குஸ்தி 2′ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷமி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மோக்ஷா, கல்கி, லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- செல்ல அய்யாவு.
ஒளிப்பதிவாளர் :- கே.எம். பாஸ்கரன்.
படத்தொகுப்பாளர் :- பரத் விக்ரமன்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன்.
தயாரிப்பு நிறுவனம் :- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- டாக்டர் ஐசரி கே கணேஷ் & விஷ்ணு விஷால்.
மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )
ரேட்டிங் :- 4.5./5.
கடந்த 2022, ஆண்டு டிசம்பர் 2 தேதி அன்று வெளியான ‘கட்டா குஸ்தி’ முதல் பாகம் திரைப்பட ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் முதல் பாகத்தில் மல்யுத்த வீராங்கனையாக இருப்பதை மறைத்து கதாநாயகன் விஷ்ணு விஷாலை திருமணம் செய்துகொண்டு அதை தன்னுடைய கணவருக்கு தெரியாமல் மறைத்து கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி செய்த விஷயங்களும், பின்னர் உண்மை தெரிந்த பிறகு என்ன ஆனது என்பதையும் இயக்குநர் செல்லா அய்யாவு, திரைப்படமாக எடுத்திருந்தார்.
தற்போது இரண்டாம் பாகத்தில் தன்னுடைய மனைவி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி எப்படியாவது சாம்பியன் ஆக்கிவிட வேண்டுமென்ற மன உறுதியுடன் கதாநாயகன் விஷ்ணு விஷால் மாற முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதை பயணிக்கிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கணவராக கதாநாயகன் விஷ்ணு விஷால் மனைவியாக கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த பிறகும் தன்னுடைய கனவு விளையாட்டான குஸ்தி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமிக்கு, அவருடைய கணவர் கதாநாயகன் விஷ்ணு விஷால் மாபெரும் அளவில் ஆதரவாக இருக்கிறார்.
தனது வீட்டையும், தன்னுடைய செல்ல மகளையும் கவனித்துக் கொண்டு தனது மனைவி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டா குஸ்தி விளையாட்டில் இந்திய அளவில் சாம்பியன் ஆகவேண்டும் என்ற கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும் கதாநாயகன் விஷ்ணு விஷால், மனைவி கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமியை எப்படியாவது தேசிய அளவிலான கட்டா குஸ்தி போட்டிக்கு தயார் படுத்துகிறார்.
இதனால் கதாநாயகன் விஷ்ணு விஷால், மெனக்கெட்டது வீண் போகாமல் அனைத்துப் போட்டிகளிலும் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி தொடர்ந்து வெற்றி பெற்று, தனது முழு கவனத்தையும் குஸ்தி விளையாட்டில் செலுத்தி தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகி வருகிறார்.
இதற்கிடையே, தங்களது மகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பாக கதாநாயகன் விஷ்ணு விஷால் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
தனது மகளையும் தன்னை மாதிரியே எதிர்காலத்தில் சிறந்த குஸ்தி வீராங்கனையாக வேண்டும் என்று கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி நினைக்க, தன்னுடைய மகள் என்ன பிடிக்குமோ தனது மகள் விருப்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கதாநாயகன் விஷ்ணு விஷால் நினைக்கிறார்.
இந்த சிறிய கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப வாழ்க்கையில் பெரிய பிளவை ஏற்படுத்தி, இருவருக்கும் கோர்ட்டுக்கு செல்லும் அளவிற்கு சூழ்நிலையை உருவாக்குகிறது.
இவர்கள் இருவரின் கோர்ட்டுக்கு சென்ற வழக்கு என்ன ஆனது?,
இந்த நிலையில் கதாநாயகன் விஷ்ணு விஷால், கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்தார்களா?, இணையவில்லையா?, என்பதுதான் இந்த ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தக் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், மாஸான கதாநாயகனாக இல்லாமல் சிறந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தன்னுடைய மனைவியின் திறனை நல்ல மதிப்பதோடு, அவருடைய ஒவ்வொரு வெற்றிக்கும் தான் பக்கபலமாக இருக்கும் சிறந்த கணவராக திரைப்படம் பார்க்கும் பெண்கள் மனதில் இப்படி ஒரு கணவர் நமக்கு கிடைக்க வேண்டும் என விருந்தும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், தனது மனைவியின் வெற்றிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கணவர் கதாபாத்திரத்தில் மிக இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.
அதே சமயத்தில், நான் மாஸான கதாநாயகன் என்ற இமேஜுக்கு ஏற்றபடி சில சண்டை காட்சிகளின் மூலம் நானும் ஒரு ஆக்ஷன் கதாநாயகன்தான் என்பதையும் நிரூபித்திருப்பவர்,
இந்தக் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் பலமான குஸ்தி களத்தில் முரட்டுத்தனமாக மோதும் வீராங்கனையாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்ச்சிவசப்படும் மனைவியாகவும் இரு பரிமாணங்களிலும் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தன் கணவருடன் நடக்கும் கிளைமாக்ஸ் குஸ்தி காட்சிகளில் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி, உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி கதையின் கரு மட்டும் அல்ல, திரைக்கதையின் மிகப்பெரிய அளவில் பலமாக கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிப்பில் மட்டுமல்லாமல் ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
கதாநாயகன் விஷ்ணு விஷால், கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா, தனது சுட்டித்தனமான நடிப்பால் பல காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.
கருணாஸ் வழக்கம்போல் தனது டைமிங் காமெடியால் சிரிக்க வைக்கிறார்.
மோக்ஷா, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபுவின் வருகையும் திரைப்படத்திற்கு மிகப் பெரிய அளவில் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், ஒளிப்பதிவு மூலம் குஸ்தி போட்டிகளையும் குடும்ப காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், பின்னணி இசையும் உணர்வுப்பூர்வமான மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கு சிறப்பான இசையை கொடுத்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
முதல் பாகத்தைப் போலவே இந்த முறையும் இயல்பான நகைச்சுவையுடன் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக திரைக்கதையை சுவாரஸ்யமாக குடும்ப உறவுகள், கணவன்-மனைவி புரிதல், குழந்தை வளர்ப்பு போன்ற சமகால பிரச்சனைகளை சொல்லி நகைச்சுவையாக இயக்கியிருக்கிறார்
இயக்குநர் செல்லா அய்யாவு.
மொத்தத்தில் இந்த கட்டா குஸ்தி 2 திரைப்பட ரசிகர்களை குடும்பத்துடன் ரசிக்க வைக்கும் சிறந்த ஒரு திரை காவியம்.
###########################
‘கட்டா குஸ்தி 2’ திரைப்பட விமர்சனம்











