’ஆரியன்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :-விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி, கருணாகரன், அவினாஷ் ஒய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பிரவீன் கே.

ஒளிப்பதிவாளர் :- ஹரிஷ் கண்ணன்.

படத்தொகுப்பாளர் :- சான் லோகேஷ்.

இசையமைப்பாளர் :- ஜிப்ரான்.

தயாரிப்பு நிறுவனம் :- விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் :- சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் விஷ்ணு விஷால்.

ரேட்டிங் :- 3.5/5.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒனறை, தொகுத்து வழங்கும் நிருபர் ஷரத்தா ஸ்ரீநாத் திரைப்பட நடிகரிடம் கேள்விகள் கேட்க திடீரென பார்வையாளர்கள்  அமர்ந்திருக்கும் கூட்டத்திலிருந்து வில்லன் செல்வராகவன், எழுந்து துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணைக் கைதிகளாக பிடித்துக் கொள்கிறார்.

வில்லன் செல்வராகவனிடம், உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டால், அடுத்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து நாட்களில் ஐந்து பேரை நான் கொலை செய்யப் போகிறேன், உங்களால் முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என்று கூறுகிறார். 

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிணைக் கைதிகளை காப்பாற்றி விட்டு, வில்லன் செல்வராகவன் மிரட்டல் குறித்து விசாரிக்கும் காவல்துறையினர், தொடர்ந்து நடந்து வரும் கொலைகளை தடுக்க காவல்துறை அதிகாரியான  கதாநாயகன் விஷ்ணு விஷால் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க தொடங்குகிறார்கள்.

வில்லன்  செல்வராகவனை பிடிக்கும் வேலையை  விட்டுவிட்டு, அவர்  அடுத்தடுத்து வில்லன்  செல்வராகவன் செய்ய இருக்கும் கொலைகளை தடுக்க காவல்துறை அதிகாரியான கதாநாயகன் விஷ்ணு விஷால் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்.

வில்லன் செல்வராகவன் ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து நாட்களில் ஐந்து பேரை  கொலை செய்ய செய்ய காரணம் என்ன? வில்லன் செல்வராகவனை  காவல்துறையினர் கைது செய்தார்களா?, கைது செய்யவில்லையா?,

அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை கதாநாயகன் விஷ்ணு விஷால் தடுத்து நிறுத்தினாரா?,  நிறுத்தவில்லையா?,  என்பதுதான் இந்த “ஆரியன்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “ஆரியன்”  திரைப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக நடித்துள்ளார்.

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கொலை வழக்கை உண்மையான காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கும் தோரணையில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

தனது மனைவி மானாசா உடனான காதல், திருமணம், விவாகரத்து என்று அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பாதிப்புகளை  தனது அழுத்தமான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன், சைக்கோ வில்லன் போல் மக்களை  பயமுறுத்தவில்லை என்றாலும், அடுத்து யாரை கொலை செய்யப் போகிறார் ? என்ற கேள்வியை திரைப்படம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பதற்றத்துடனே அமர  வைத்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன், ஆர்ப்பாட்டம் இல்லாத அவருடைய நடிப்பு, இயல்பான உடல் மொழி ஆகியவை, அவர் செய்யும் அனைத்து காரியங்களையும் நம்ப வைத்து விடுகிறார்.

தொலைக்காட்சி நிருபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதாநாயகன் விஷ்ணு விஷாலின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற  கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், ஒளிப்பதிவு மூலம், பார்வையாளர்களை திரைப்படத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சைக்கோ திரில்லர் கதையை கையில் எடுத்த இயக்குனர், மிகச் சிறப்பான திரை கதையை அமைத்து அதை ரசிகர்கள் நம்பும்படியாக லாஜிக்கோடு திரைக்கதை மற்றும் காட்சிகளை அமைத்து  திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரவீன்.கே.

மொத்தத்தில், ‘ஆரியன்’ சைக்கோ திரில்லர் திரைப்படம்  ஆச்சரியப்பட வைக்கிறான்.

error: Content is protected !!