இந்திய திரையுலகில்  மல்டிஸ்டார்களை வைத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டரை உருவாக்க மணிரத்னம் கமலஹாசன் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.!

சென்னை 19 ஜனவரி 2023 இந்திய திரையுலகில்  மல்டிஸ்டார்களை வைத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டரை உருவாக்க மணிரத்னம் கமலஹாசன் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த வருடம் நவம்பர் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ் திரைப்பட உலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் KH234வது திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைகிறார்கள்.

இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை முடித்த பிறகு நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்  ‘KH 234’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த KH 234 திரைப்படம் இருக்கும் என செய்திகள் வந்துள்ளன.

மலையாளம் திரைப்பட உலகில் இருந்து மெகா ஸ்டார் மம்முட்டி மற்றும் பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களை நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் மற்ற முன்னணி  கதாநாயகர்களுடன் பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என சுமார் பத்து முக்கிய கதாபாத்திரங்கள் உள்ள கதை திட்டமிட்டுள்ளனர்.

இருவரும் 2022 ஆம் ஆண்டில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய பிளாக் பாஸ்டர் ஹிட் திரைப்படங்கள் வழங்கியுள்ளனர்.

‘KH 234’ திரைப்படத்தின் மூலம், நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயங மணிரத்னம் இந்திய திரைப்பட உலகில் மிகப்பெரிய மல்டிஸ்டார் பிளாக்பஸ்டரை உருவாக்க, இருவரும் கூட்டாக வரலாற்றை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்.