‘’போகி’’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- நபி நந்தி, ஷரத், ஸ்வாசிகா, பூனம் கவுர், வேலா ராமமூர்த்தி, மொட்ட ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஷ்கர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம்:- விஜயசேகரன்.எஸ்.
ஒளிப்பதிவாளர் :- ராஜா சி சேகர்.
படத்தொகுப்பாளர் :- சுரேஷ் அர்ஸ் .
இசையமைப்பாளர் :- மரியா மனோகர்.
தயாரிப்பு நிறுவனங்கள் :- சினிமா குளோபல் நெட்வொர்க்குகள் & லைக் பிரசண்ட்ஸ்
தயாரிப்பாளர்கள் :- சினிமா குளோபல் நெட்வொர்க்குகள் & லைக் பிரசண்ட்ஸ்
ரேட்டிங் :- 2.5/5.
மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கும் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூம் பெட் ரூம் மற்றும் துணிக்கடையில் ரகசிய கேமாராகள் வைத்து பெண்களை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய மாபியா கும்பலை தகுந்த ஆதாரங்களுடன் பிடிப்பதற்கு முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் அந்த மாபியா கும்பலை சேர்ந்தவர்களை ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து கதாநாயகன் நபி நந்தியும், அவருடைய நண்பன் சரத்தும் இனைத்து கொலை செய்கிறார்கள்.
சிறுவயதில் பிரிந்து சென்ற காதலியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் கதாநாயகன் நபி நந்தி கதாநாயகி மீதான தனது காதலை வெளிப்படுத்த முடியாமல், மாபியா கும்பலை உள்ளவர்களை கொலை வெறிப் பயணத்தை தொடர்கிறார்.
பெண்களை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் மிகப்பெரிய இந்த மாபியா கும்பலுக்கும் கதாநாயகன் நபி நந்திக்கும் என்ன தொடர்பு ? என்பதுதான் இந்த ‘போகி’ திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த போகி திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக நபி நந்தி, நடித்திருக்கிறார்.
புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கும் நபி நந்தி, அறிமுக நடிகர் என்றாலும் முதல் திரைப்படம் நடிப்பது போல் தெரியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தன் தங்கை ஸ்வாசிகா மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அண்ணனாக, தனது தங்கைக்கு ஏற்பட்ட கொடூரத்திற்காக வெறிகொண்டு பழி தீர்க்கும் காட்சிகளில் புதுமுக கதாநாயகனாக நபி நந்தி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
புதுமுக கதாநாயகன் நபி நந்தியின் தங்கை கதாபாத்திரத்தில் கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா, முதல் முதலில் அறிமுகமான வைகை திரைப்படத்தில் உள்ளதை போலவே மிகவும் இளமையாக இருக்கிறார்.
பழங்குடி இன பெண்ணாக பல போராட்டங்களை கடந்து படித்து முன்னேற வேண்டும் நமது கிராமத்திற்கு ஒரு டாக்டராக வரவேண்டும் என சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் சுவாசிகா பெண்களுக்கு எதிராக செயல்படும் ஹாபியா கும்பலால் சுவாசிகா கொல்லப்படும் காட்சிகளின் தன்னுடைய நடிப்பு மூலம் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை கண் கலங்க வைத்துவிட்டார்.
கதாநாயகன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத் அருமையாக நடித்திருக்கிறார்.
ஒரு பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை மகிழ்விக்கும் பூனம் காவுர், சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வில்லன், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், மிகவும் கொடூரமாக நடித்திருக்கிறார்.
ஒரு சில காட்சியில் வந்தாலும் தனது நடிப்பால் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைசக்காரன்’ கார்த்தி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் ஒளிப்பதிவு மூலம் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவும் பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் கதை ஓட்டத்திற்கு மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.
சமூக பிரச்சனைகளையும் பழங்குடி இன மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், நமது நாட்டில் நடந்த சில உண்மை சம்பவங்களையும் மையமாக உள்ள கதையை மிக அருமையான திரைக்கதையை அமைத்திருந்தாலும், அதை வெறும் சோகமாக மட்டுமே கூறாமல், நகைச்சுவையாகவும், காதல், ஆக்ஷன், பாடல் என்று கமர்ஷியலாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.எஸ்
மொத்தத்தில், ‘போகி’ நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை கூறும் திரைப்படம்.











