‘யார்றா அந்த பையன் நான்தான் அந்த பையன்” திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- காயத்ரி ரேமா , சுவேதா ஸ்ரீ, ரவி மரியா, அம்பானி சங்கர், பசங்க சிவக்குமார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பால்ராஜ்.
ஒளிப்பதிவாளர் :- உதயன்.
படத்தொகுப்பாளர் :- கே சங்கர்.
இசையமைப்பாளர் :- விஜய் பிரபு.
தயாரிப்பு நிறுவனம் :- ஆர் . ஆர்.ப்ரெடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- பால்ராஜ்.
மக்கள் தொடர்பு :- விஜய் கார்த்திக்.
ரேட்டிங் :- 2.5./5.
கதாநாயகன் பால்ராஜ் கார் பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
கதாநாயகன் பால் ராஜ் மனைவி காயத்ரி ரேமா மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் பால் ராஜ் மனைவி காயத்ரி ரேமா திருமண உறவில் விரிசல் விழுகிறது.
இந்த நிலையில் இது ஒரு பக்கம் இருக்க சுவேதா ஸ்ரீ, குடிகார கணவனை திருமணம் செய்து கொண்டு தாம்பத்தியம் சிறக்காமல் குடிகார கணவனுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கணவன் விபத்தில் இறந்து விட சுவேதா ஸ்ரீ தனிமையில் வாடுகிறார்.
கதாநாயகன் பால் ராஜ் மற்றும் இருவரின் கள்ளக்காதல் வாழ்க்கையும் எதிர்பாராத விதத்தில் இணையும் போது, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு ரகசியக் காதலில் கதாநாயகன் பால்ராஜ் மற்றும் சுவேதா ஸ்ரீக்கும் இடையே கள்ளக்காதல் மலர்கிறது.
கதாநாயகன் பால்ராஜ் மற்றும் சுவேதா ஸ்ரீக்கும் இடையே கள்ளக்காதல் விஷயம் தெரியவர மனைவி கதாநாயகி காயத்ரி ரேமா , கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விடுகிறார்.
கதாநாயகன் பால்ராஜ் என் மனைவி காயத்ரி ரேமா தனது கணவனுடன் இணைந்தாரா?, இணையவில்லையா?,
கதாநாயகன் பால்ராஜ் சுவேதா ஸ்ரீக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்ந்தார்களா? தொடரவில்லையா? என்பதுதான் இந்த “யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்” திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக பால்ராஜ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் பால்ராஜ் அந்த கதாபாத்திரத்தில் கடமைக்காக நடித்திருக்கிறார்.
இந்த “யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்” திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி ரேமா நடித்திருக்கிறார்.
கதாநாயகன் நடித்திருக்கும் காயத்ரி ரேஷ்மா அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மற்றொரு புதுமுக கதாநாயகியாக சுவேதா ஸ்ரீ நடித்துள்ளார்.
புதுமுக கதாநாயகியாக சுவேதா ஸ்ரீ அழகாக வந்து அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவரும் காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மரியா, கதாநாயகன் பால்ராஜ் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அம்பானி சங்கர், கதாநாயகன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பசங்க சிவக்குமார், அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் உதயன் ஒளிப்பதி மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் விஜய் பிரபு இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமாராக இருக்கிறது.
கதாநாயகன் நிம்மதியற்ற குடும்ப வாழ்வு, வெளிவர முடியாத காதல் ஒருபுறம் அதிகார வெறிபிடித்த காவல்துறை அதிகாரியின் கொடூர வேட்டை மறுபுறம். இவ்விரு நெருக்கடிகளுக்கு நடுவே தீபிகா படும் போராட்டமே படத்தின் மையக்கருவை வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பால்ராஜ்.
மொத்தத்தில் இந்த யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன் மனித உணர்வுகளின் இருண்ட பக்கங்களையும் அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் தோலுரித்துக் காட்டும் திரைப்படம்.











