மாமன்னன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 4.25/5.

நடிகர் & நடிகைகள் :- உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் சுனில், அழகர் பெருமாள், விஜயகுமார், ரவீனாரவி கீதா கைலாசம் கதிரவன் பாலு, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மாரி செல்வராஜ்.

ஒளிப்பதிவு :- தேனி ஈஸ்வர்.

படத்தொகுப்பு :- செல்வா ஆர்கே.

இசை :- ஏ.ஆர்.ரகுமான்.

தயாரிப்பு நிறுவனம் :-  ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

தயாரிப்பாளர் :- ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

ரேட்டிங் :- 4.25/5.

சேலம் மாவட்டம் அருகில் உள்ள காசிபுரம் தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வடிவேலு 10 வருடங்களாக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

எம் எல் ஏ வடிவேலுவின் ஒரே மகனான கதாநாயகன் உதயநிதி அடிமுறை கலை கற்று தரும் பள்ளியை நடத்தி கொண்டு தனது செல்ல பிராணியான பன்றிகளை வளர்த்து வருகிறார்.

சுமார் 15 வருடங்களாக தனது தந்தை வடிவேலுடன் பேசாமல் இருக்கிறார் கதாநாயகன் உதயநிதி.

அதற்கான காரணம் சிறுவயதில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய சம்பவம், கதாநாயகன் உதயநிதியின் மனதில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரே கல்லூரியில் ஒன்றாக படிக்கும் கதாநாயகன் உதயநிதி கதாநாயகி கீர்த்தி சுரேஷும் ஒருவருக்கொருவர் பேசாமல் பழகாமல் இருந்து வருகிறார்கள்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் படிக்க வசதி இல்லாத ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக படிப்பு சொல்லித்தரும் கோச்சிங் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.

ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கோச்சிங் சென்டர் நடத்தி வரும் கதாநாயகி கீர்த்தி சுரேஷுக்கு வில்லன் பகத் பாசிலின் அண்ணன் வழியாக பலவிதமான மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கிறது

கோச்சிங் சென்டரை காலி செய்து விட்டு கதாநாயகன் உதயநிதி நடத்தி வரும் அடிமுறை பள்ளி நடக்கும் இடத்தில் கதாநாயகி கீர்த்தி சுரேஷின் இலவச கோச்சிங் சென்டரை  நடத்தி வருகிறார்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் நடத்திவரும் இலவச கோச்சிங் சென்டரை  வில்லன் பகத் பாசிலின் அண்ணனின் ஆட்களை அடிமுறை கலை பள்ளி நடத்தி வரும் இடத்தை அடித்து துவம்சம் செய்து விடுகிறார்கள்.

இதனால் கோபமான கதாநாயகன் உதயநிதி வில்லன் பகத் பாசில் அண்ணன் அலுவலகத்திற்கு சென்று பதிலுக்கு அடித்து துவம்சம் செய்கிறார்.

இந்த பிரச்சனை வில்லன் பகத் பாசில் மற்றும் வடிவேலு கவனத்திற்கு செல்கிறது.

வில்லன் பகத் பாசில் பேசி பிரச்சினையை முடித்து வைப்பதற்காக வடிவேலு மற்றும் கதாநாயகன் உதயநிதியை தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார்.

அங்கு தன் தந்தை வடிவேலுவை வில்லன் பகத் பாசில் தரக்குறைவாக நடத்த, கதாநாயகன் உதயநிதிக்கு கோபம் தலைக்கு ஏற அடித்து விடுகிறார்.

இந்த பிரச்சினை அரசியல் பிரச்சினையாக மற்றி வில்லன் பகத் பாசில், வடிவேலு மற்றும் கதாநாயகன் உதயநிதியை கொலை செய்வதற்கு திட்டம் திட்டுகிறார்.

இறுதியில் வில்லன் பகத் பாசில், வடிவேலு மற்றும் உதயநிதியை கொன்றார்களா?  கொல்லவில்லையா? எம‌எல்.ஏ வடிவேலு மற்றும் கதாநாயகன் உதயநிதி இவ்வளவு பெரிய பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்கள்? என்பதுதான் இந்த மாமன்னன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மாமன்னன் திரைப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் உதயநிதி, யதார்த்தமாக நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

தன் தந்தை வடிவேலுக்கு அவமானம் ஏற்படும் போதும், வில்லன்களிடம் மோதும் போதும் மிகவும் ஆக்ரோஷமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

இந்த மாமன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஒரு சில இடங்களில் அவருடைய நடிப்பை கவனிக்க வைத்து இருக்கிறார்.

கதாநாயகனுக்கு பக்கபலமாக திரைப்படம் முழுக்க பயணித்து இருக்கிறார்.

வில்லனாக வரும் பகத் பாசில். நடிப்பின் மூலம் மிரட்டி இருக்கிறார்

வில்லன் பகத் பாசில் அவருக்கு உரிய பாணியில் நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

கதாநாயகன் உதயநிதிக்கு தந்தையாக வரும் வடிவேலு பாசமான தந்தையாகவும் மக்களுக்கு எம்எல்ஏவாகவும் மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் முழு கதையையும் வடிவேலு தன் தோளில் தாங்கி சுமந்து இருக்கிறார்.

இந்த மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பில் கொஞ்சம் கூட நகைச்சுவை நடிகர் என்ற எண்ணம் வரவே இல்லை.

மலை மீது நின்று அழும்போது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைத்து விடுகிறார்.

வில்லன் பகத் பாசிலின் தந்தை காலத்திலிருந்து உறுதுணையாக இருக்கும் கதிரவன் பாலு கதாநாயகன் உதயநிதி வடிவேலு பிரச்சனையை சமாளிப்பதற்காக ஒரு நல்ல ஐடியா தருகிறார்.

அந்த நல்ல ஐடியா கதிரவன் பாலுவிற்க்கு மரணமாக நிகழ்ந்து விடுகிறது.

கதிரவன் பாலுவின் கொடூரமாக மரணத்தை வைத்து அரசியலில் சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் வில்லன் பகத் பாசில்

கதிரவன் பாலுவின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக அமைந்துள்ளது.

ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர்  ஏ. ஆர். ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் பல இடங்களில் பின்னணி இசை திரைப்படத்திற்கும் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாகவும் அருமையாகவும் திரைப்படத்தில் அமைந்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க சாதியினர் தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மிக தெளிவாகவும் அருமையாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தனக்கே உரிய பாணியில் அரசியல் கலந்து இந்த திரைப்படத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எழுந்து நின்று மிகத் தரமான திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

திரைப்படத்தில் நடித்திருக்கும்  கதாபாத்திரங்களிடையே மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மொத்தத்தில் மாமன்னன் திரைப்படம் மக்களின் மன்னாதி மன்னன்.

error: Content is protected !!