‘யெல்லோ’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- டெல்லி கணேஷ், பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், லீலா சாம்சன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, வினோதினி வைத்தியநாதன், சாய் பிரசன்னா, பிரபு சாலமன், லோகேஷ், ஜோபின் மணிமாலா, ஷிஜு ராகவன், அஸ்வின் ஜெயபிரகாஷ், விக்னேஷ்வர், அஜய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஹரி மகாதேவன்.

ஒளிப்பதிவாளர் :- அபி ஆத்விக்.

படத்தொகுப்பாளர் :- ஸ்ரீ வாட்சன்.

இசையமைப்பாளர் :- ஆனந்த் காசிநாத், கிளிஃபி கிறிஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- கோவை ஃபிலிம் ஃபேக்டரி.

தயாரிப்பாளர் :- பிரசாந்த் ரங்கசாமி.

ரேட்டிங் :- 3.5./5.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதாநாயகி பூர்ணிமா ரவி தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி கட்டாத நபர்களிடம் கடன் வசூல் செய்யும் பிரிவில் வேலை பார்க்கிறார்.

கதாநாயகி பூர்ணிமா ரவி காதலன் சாய் பிரசன்னா இருவரும் காதலித்து வரும் நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

கதாநாயகி பூர்ணிமா ரவியின் காதல் தோல்வி மற்றும் தன் குடும்ப சூழல் ஆகியவற்றால் அழுத்தமான மனநிலையில் இருக்கும் கதாநாயகி பூர்ணிமா ரவி, தன் தந்தை டெல்லி கணேஷ் உடல்நிலை சரியில்லாமல் போக அனைத்து குடும்ப பாரமும் கதாநாயகி பூர்ணிமா ரவியின் தலையில் விழுகிறது.

கதாநாயகி பூர்ணிமா ரவி தன் மனதுக்கு பிடித்ததை செய்ய முடிவு செய்கிறார்.

இந்த நிலையில், தன் சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடி கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

அந்த பயணத்தில் கதாநாயகி பூர்ணிமா ரவிக்கு கதாநாயகன் வைபவ் முருகேசனின் அறிமுகம் கிடைக்கிறது.

கதாநாயகி பூர்ணிமா ரவி மற்றும் கதாநாயகன் வைபவ் முருகேசன் இருவரும் இணைந்து செல்லும்  இந்த பயணம், இருவருடைய வாழ்விலும் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியது, சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடிச் சென்ற பயணத்தில்  நண்பர்கள் கிடைத்தார்களா?, கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘யெல்லோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த யெல்லோ முதன்மை கதாபாத்திரத்தில் வைபவ் முருகேசன் இருவரும் நடித்திருக்கிறார்.

கதாநாயகி பூர்ணிமா ரவி, திடீர் தோழனாகவும், துணையாகவும் நடித்திருக்கும் வைபவ் முருகேசன், எற்ற பொறுத்தமான தேர்வாக மட்டும் இன்றி, தனது நடிப்பு மூலம் சாய் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் மிகச் சிறப்பாக கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார். 

இந்த யெல்லோ திரைப்படத்தில் கதாநாயகியாக பூர்ணிமா ரவி, நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி, ஆதிரை கதாபாத்திரமாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடும் அளவிற்கு ரொமான்ஸ், நடனம், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

டெல்லி கணேஷ், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி லோகேஷ், ஜோபின் மணிமாலா, ஷிஜு ராகவன், அஸ்வின் ஜெயபிரகாஷ், விக்னேஷ்வர், அஜய், ஆகியோர் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் திரைக்கதையில் ஓட்டத்திற்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக். ஒளிப்பதிவில் பயணத்தை காட்சிப்படுத்திய விதமும், பயணப்படும் இடங்கள் கேரளா, கோவா என்று முக்கியமான சுற்றுலாத் தளங்களில் திரைப்படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகள், ரயில் நிலையங்கள் தண்டவாளம், ரயில் பயணம் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு அனுபவத்தை கொடுக்கிறது. 

ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் ஒளிப்பதிவு மூலம் திரைப்பட ரசிகர்களுக்கு மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்தளிகும் விதமாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸ் இசையில் பாடல்கள் இனிமையாக இருப்பதோடு, பயணத்தினால் கதாபாத்திரங்களின் மனநிலை மாற்றங்களை தனது இசை மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சொத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை இயற்கை பயணத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பான ஓட்டத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

எளிமையான ஒரு கதையை கையில் எடுத்து மிக அருமையான திரைக்கதையை அமைத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் ஏங்கும் விதத்தில் ஒரு பயணத்தை மிகவும் நேர்த்தியான படைப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி மகாதேவன்.

மொத்தத்தில், ‘யெல்லோ’ திரைப்படம் திரைப்பட ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

error: Content is protected !!