தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டை மதிக்காத தி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியின் நிர்வாகம்.
சென்னை 23 டிசம்பர் 2021
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டை மதிக்காத தி நகரில் உள்ள ஜெயின் கல்லூரியின் நிர்வாகம்.
ஸ்கைமன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தலைமகன் முபாரக் தயாரிக்கும் கவின் இயக்கத்தில் நடிகர் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்கும் இளைய திலகம் பிரபு, காமெடி நடிகர் சூரி, மற்றும் புதுமுக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வேலன்’.
சிறுத்தை சிவாவின் உதவி இயக்குனர் கவின் தான் இந்த வேலன் திரைப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று தியாகராயாநகரில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரைப்பட துறையினர் மட்டுமின்றி அதே கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அதிலும் அதே கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் மாஸ்க் அணியாமலும் சோசியல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்காமல் தமிழக அரசு கூறிய கொரோனா அறிவுரைகளை மதிக்காமலும் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் வழிபாட்டுத்தலங்கள் அரசு அலுவலகங்கள் பள்ளிகள் கல்லூரிகளில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதித்து செயல்படுத்தி வரும் இந்த நேரத்தில் தமிழக அரசு இப்படி ஒரு விழாவை இந்தக் கல்லூரியில் நடத்த எப்படி அனுமதி தந்தது என்று தெரியவில்லை.
இதனால் தொற்றுகள் பரவும் அபாயம் இருந்தும் ஜெயின் கல்லூரி நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை.
அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மேலே அக்கறை இல்லாமல் இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த ஜெயின் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்.
இந்த வேலன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தலைமகன் முபாரக் இந்த தமிழ் திரைப்பட துறைக்கு முதல் திரைப்படம் என்பதால் அவருக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி வாரிசான மூத்த நடிகர் பிரபுவுக்கு தமிழக அரசின் கட்டுப்பாடுகள் எப்படித் தெரியாமல் இருந்தது.
காமெடி நடிகர் சூரி கொரோனா காலகட்டத்தில் விழிப்புணர்வு வீடியோவில் கை கண்டிப்பாக கழுவுங்கள் மாஸ்க் அணியுங்கள், என பல பதிவுகளை அவரது சொந்த சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துவிட்டு இப்படி ஒரு தவறை செய்யலாமா சூர்யா அவர்களே.
பொதுவாக இது போன்ற தமிழ் திரைப்பட துறையை சார்ந்த விழாக்கள் ஒரு குறிப்பிட்ட அரங்கங்களில் மட்டுமே நடத்துவார்கள்.
அதில் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் ஆனால் இன்று ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்வால் கல்லூரி மாணவிகளுக்கு ஏதேனும் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்.
இநத விழாவில் கலந்து கொண்டா கல்லூரி மாணவிகளுக்கு ஏதேனும் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டால் இந்த விழாவிற்கு அனுமதி தந்த கல்லூரி நிர்வாக பொறுப்பு ஏற்குமா?
அப்படி இல்லை என்றால் இந்த வேலன் திரைப்படத்தின் படக்குழுவினர்கள் பொறுப்பு ஏற்பார்களா?
இந்த ஜெயின் கல்லூரியில் சுயவிளம்பரத்திற்காக கல்லூரி மாணவிகளை பழிகேடாக்கவேண்டாம்.











