தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு 10 மார்ச் 2022 இன்று முதல் அமலுக்கு வந்தது.

சென்னை 10 மார்ச் 2022  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு 10 மார்ச் 2022 இன்று முதல் அமலுக்கு வந்தது.

பல மாதங்களாக பேசப்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் சேர்ந்த 23 சங்கங்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகள் நேற்று 09 மார்ச் 2022 அன்று சுமுகமான முறையில் பேசப்பட்டு 23 சங்கத்தின் நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக கையொப்பமிட்டார்கள்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் , தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு  பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த பொது விதிமுறைகள் குறித்து 3 -ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெறும் .

இந்நிலையில் , 7 – ஆண்டுகள் கழித்து ( 2017 பிறகு ) 2022-2025ம் ஆண்டுகளுக்கான பேச்சு வார்த்தை கடந்த சில மாதங்களாக சுமுகமான முறையில் நடைபெற்று முடிவடைந்துள்ளது .

மேலும் , தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23  சங்கங்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பளர்கள் சங்கத்திற்கும் இடையேயான திரைப்பட தயாரிப்பு வழிகாட்டுதல் புரிந்துணர்வு பொதுவிதிமுறைகள்  ஒப்பந்தத்தில், 09.03.2022- புதன்கிழமை அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் , தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள், மற்றும் 23 – சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டார்கள்.

இந்த ஊதிய உயர்வு மற்றும் பொதுவிதிமுறைகள் அனைத்தும் 10.03.2022 முதல் 09.03.2025 வரை 3 – ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் மேற்படி புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சம்பளத் தொகையினை மட்டுமே படப்பிடிப்பின் போது அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஊதிய உயர்வு குறித்த விவரத்தை சங்கத்தில் பெற்றுக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், படப்பிடிப்பு நடைபெறும் போது மேற்படி ஊதிய உயர்வு அல்லது பொதுவிதிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை தொடர்பு கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

மேலும், கூடிய விரைவில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் விதிமுறைகள் புத்தகமாய் அச்சிட்டு அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

error: Content is protected !!