தமிழ் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

சென்னை 18 ஆகஸ்ட் 2021 தமிழ் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

தலைவர் பதவிக்கு ஜான் மற்றும் டைமன்ட் பாபு மோதுகின்றனர்.

டைமன்ட் பாபு மூத்த பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகனாவார்.

தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட ரசிகர்களுக்கும் பக்கபலமாக இருப்பவர்கள் PROக்கள்தான்.

தமிழ் திரைப்பட உலகில் பி.ஆர்.ஓ.க்களுக்கு சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்திற்கு நாளை 19 ஆகஸ்ட் 2021 தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள்
சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகின்றது.

தற்போதைய தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிந்து விட்ட காரணத்தால் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்திற்கு P.R.O
சங்கத்தின் முன்னாள் தலைவரான டைமண்ட் பாபு அவர்கள் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் பொதுச்செயலாளர் ஏ. ஜான் அவர்கள் தலைமையில் ஒரு அணியும் தற்போது களத்தில் இறங்கி உள்ளனர்.

அனைத்து பதவிக்கு போட்டியிடுபவர்கள் விபரம்.

டைமண்ட் பாபு தலைமையிலான
அணியில் தலைவர் பதவிக்கு.

டைமண்ட் பாபு அவர்களே போட்டியிடுகிறார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு.

யுவராஜ்
போட்டியிடுகிறார்.

பொருளாளர் பதவிக்கு.
M.P ஆனந்த் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு.

வி.கே.சுந்தர்
ராஜ்குமார் இருவர்
போட்டியிடுகின்றனர்

இணைச் செயலாளர்கள் பதவிக்கு.

முத்துராமலிங்கம்
கணேஷ் குமார் இருவர் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு.

‘திரைநீதி’ செல்வம், ‘மதிஒளி’ குமார்,
இனியன் ராஜன்,
சரவணன்
புவன்
செய்யது இப்ராஹிம், தர்மதுரை
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜான் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு.

ஜான் அவர்களே
போட்டியிடுகிறார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு.

விஜயமுரளி போட்டியிடுகிறார்.

பொருளாளர் பதவிக்கு குமரேசன் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு.

மதுரை செல்வம், கோவிந்தராஜ்
இருவர் போட்டியிடுகின்றனர்.

இணைச் செயலாளர்கள் பதவிக்கு ராமானுஜம், செல்வரகு இருவர் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு,

கடையம் ராஜூ
‘கிளாமர்’ சத்யா
வெங்கட் கே
சாவித்திரி
வி.எம்.ஆறுமுகம்
நித்திஷ்ஸ்ரீராம்
ஏஸ்.பிரியா
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்திற்கான
இந்தத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெறவுள்ளது.

வாக்குப் பதிவு நடந்து முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!