‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா, வில்சன்,காளி வெங்கட், ஜெயப்ரகாஷ், சஞ்சனா சிங், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மனு ஆனந்த்.
ஒளிப்பதிவாளர் :- அருள் வின்சென்ட்.
படத்தொகுப்பாளர் :- பிரசன்னா ஜி.கே.
இசையமைப்பாளர் :- திபு நிபுணன் தாமஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- பிரின்ஸ் பிக்சர்ஸ், மேவரிக் மூவிஸ்
தயாரிப்பாளர்கள் :- S.லஷ்மன்குமார், வினீத் ஜெயின், ஏ வெங்கடேஷ்.
மக்கள் தொடர்பு :- ஜான்.ஏ.
ரேட்டிங் :- 2.75./5.
தமிழ்த் திரைப்பட உலகில் ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் தற்போது கவனம் ஈர்த்து வரும் புதிய திரைப்படம் தான் ‘Mr. X’.
கதாநாயகன் ஆரியாவின் தந்தை இந்திய முதன்மை வெளிநாட்டு உளவு அமைப்பான ராவில் பணியாற்றும் உளவாளியான சரத்குமார், அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மிகவும் மோசமான மூலப்பொருள் ஒன்றை பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மிகவும் மோசமான மூலப்பொருள் ஒன்றை பல ஆண்டுகளாக பாதுகாப்பதற்காக தன்னுடைய மகன் மற்றும் மகள் என வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் சரத்குமாரை ரஷ்ய ராணுவம், கைது செய்து அவர் பாதுகாத்து வந்த மூலப்பொருளையும் கைப்பற்றுவதோடு, அதை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள்.
ரஷ்ய ராணுவத்தின் திட்டத்தை மூன்றிலும் முறியடித்து, கதாநாயகன் ஆரியாவின் தந்தை சரத்குமார் மற்றும் அணு ஆயுத மூலப்பொருளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக பணியை ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையிலான குழு களம் இறங்கிறது.
ஆனால், ஆயுத மூலப்பொருளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக பணி தோல்வியில் முடிந்ததால், ரா அதிகாரியான மஞ்சு வாரியர் கைது செய்து, விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புத் துறை ஈடுபடுகிறது.
பாதுகாப்புத் துறையிடம் இருந்து தப்பிக்கும் மஞ்சு வாரியர், மற்றொரு உளவாளியான கதாநாயகன் ஆர்யா மூலம் மீண்டும் அந்த பணியில் ஈடுபட்டு சரத்குமாரை காப்பாற்றி, ஆணு ஆயுத மூலப்பொருளை இந்தியாவுக்கு எடுத்து வரும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இந்த முறை கதாநாயகன் ஆர்யா மற்றும் மஞ்சு வாரியர், எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றார்களா?, வெற்றி பெறவில்லையா?,
அந்த மூலப்பொருளை வைத்து இந்தியாவில் நடக்க இருந்த மிகப்பெரிய சதிவேலை முறியடிக்கப்பட்டதா? முறியடிக்கப்படவில்லையா?,
என்பதைதான் இந்த‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) திரைப்படத்தில் கதாநாயகனாக ஆரியா நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, தனது வலிமையான உடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் தன்னை திறமையான உளவாளியாக நடித்திருக்கிறாரே தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு நடிப்பு பெரிதாகவே இல்லை.
மிஸ்டர் எக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமாரை, ‘தி ராக்’ ஆங்கிலப் படத்தில் வரும் ஷான் கானரி போல் வடிவமைத்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கிளைமாக்ஸில் எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்தும் அந்த சரத்குமார் கதாபாத்திரம் அதிரடியாக இரண்டாம் பாகத்தில் இந்த கதாபாத்திரம் பெரிதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார்.
சாதாரண உளவாளியாக அறிமுகமாகி வில்லனாக மிரட்டும் கெளதம் ராம் கார்த்திக், தனது உருவத்திற்கு பொருந்தாத ஒரு கதாபாத்திரத்திற்கு தன்னால் முடிந்தவரை நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
ரா அமைப்பு அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், ரா அமைப்பு உளவாளிகள் ரய்சா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ் என திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், யாருடைய கதாபாத்திரமும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு மூலம் பிரமாண்டமான லொக்கேஷன்கள் மூலம் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக காட்சிப்படுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் திபு நிபுணன் தாமஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயீரூட்டுவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார்.
இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், அதை அதீத கமர்ஷியல் ஆக்ஷன் பாணியில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்.
மொத்தத்தில், ‘மிஸ்டர் எக்ஸ்’ (MrX) தொழில்நுட்ப கலைஞர்களின் கடும் உழைப்பு திரையில் தெரிகிறது.











