மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3./5.
நடிகர் & நடிகைகள் :- அனுஷ்கா ஷெட்டி, அன்விதா ரவாலி ஷெட்டி நவீன் பாலிஷெட்டி, சித்து பாலிஷெட்டி, ஜெயசுதா மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மகேஷ் பாபு P.
ஒளிப்பதிவு :- நிரவ் ஷா.
படத்தொகுப்பு :- கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்.
இசையமைப்பாளர் :- ரதன்.
தயாரிப்பு நிறுவனம்:- UV கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- வம்சி & பிரமோத்.
ரேட்டிங் :- 3./ 5.
தமது இந்திய திருநாட்டில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக ஒரு அங்கமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த மையங்களில் வருகையால் உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் திரைப்படமாக வந்திருக்கிறது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி.
கதாநாயகி அனுஷ்கா ஷெட்டி வெளிநாட்டில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது தாய் கதாநாயகி அனுஷ்கா ஷெட்டிக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆனால், கதாநாயகி அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கதாநாயகி அனுஷ்கா ஷெட்டி தன்து தாயுடன் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்.
வந்த இடத்தில் கதாநாயகி அனுஷ்கா ஷெட்டியின் தாய் இறந்து விடுகிறார்.
தன் தாயை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் கதாநாயகி அனுஷ்கா ஷெட்டி, திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என் ஆசைப்படுகிறார்.
அதன்படி, திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் கதாநாயகி அனுஷ்கா ஷெட்டி செயற்கை கருத்தரிப்பு மையத்தை அனுகுகிறார்.
ஆனால், அங்கிருக்கும் யாரோ ஒருவரின் விந்து கொடையாளிகள் மூலம் குழந்தை உருவாவதை விரும்பாதவர், தன் குழந்தைக்கு ஏற்ற ஒரு விந்து கொடையாளியை தானே தேடி பிடித்து அழைத்து வருவதாக சொல்கிறார்.
விந்து கொடையாளி ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார்..
இந்நிலையில், கதாநாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்கும் கதாநாயகி அனுஷ்கா ஷெட்டி, எப்படியாவது ஏமாற்றி கதாநாயகன் நவீன் பொலி ஷெட்டியிடம் விந்து வாங்க முயற்சி செய்கிறார்.
இறுதியில் அனுஷ்கா ஷெட்டியின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? கதாநாயகன் நவீன் பொலிஷெட்டியிடம் இருந்து விந்து கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக நவீன் பொலிஷெட்டி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துறுதுறு நடிப்பின் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார்.
கதாநாயகி அனுஷ்கா ஷெட்டியை காதலிப்பது, உண்மை தெரிந்தவுடன் கோபப்படுவது, வருந்துவது என கலகலப்பான நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பல இடங்களில் காமெடியால் கலக்கி இருக்கிறார்.
இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அனுஷ்கா ஷெட்டி, அழகாக நடித்து இருக்கிறார்.
தன் தாய் இறந்த பின் சோகம், கதாநாயகன் நவீன் பொலிஷெட்டியை பற்றி தெரிந்து கொள்ளும் முயற்சியில் யதார்த்தமாகவும் அருமையாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார்.
ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
லண்டன் காட்சிகள் மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள காட்சிகளும் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது..
இசையமைப்பாளர் ரதனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவாக இருந்தாலும், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
காமெடி கலந்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு.
முன் பாதி மெதுவாகவும், பின் பாதி இளைஞர்கள் ரசிக்கும் படி கலகலப்பாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு.
மொத்தத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படம் வழக்கமான காதல் கதையாக வந்திருக்கிறது.