“ஒண்டிமுனியும் நல்லபாடனும்” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- “பரோட்டா” முருகேசன், கார்த்திகேசன், சித்ரா நடராஜன், முருகன், சேனாபதி, விஜயன், விகடன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுகவனம்.
ஒளிப்பதிவாளர் :- ஜெ.டி. விமல்.
படத்தொகுப்பாளர் :- சதீஷ் குரோசாவா.
இசையமைப்பாளர் :- என்டிஆர் நடராஜன் சங்கரன்.
தயாரிப்பு நிறுவனம் :- திருமலை புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கே.கருப்பசாமி, அமராவதி.
ரேட்டிங் :- 3.5./5.
சிறுவயதில் சிறுவர்களுடன் விளையாடு கொண்டிருக்கும் கதையின் நாயகன் “பரோட்டா” முருகேசனின், மகன் விஜயன் தவறுதலாக கிணற்றில் விழுந்த தன்னுடைய மகன் விஜயன் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக தன் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை கதையின் நாயகன் “பரோட்டா” முருகேசன், அந்த கிராமத்தில் உள்ள ஊர் தெய்வமான ஒண்டிமுனிக்கு நேர்ந்து விடுகிறார்.
அந்த கிராமத்தில் உள்ள ஊர் தெய்வமான ஒண்டிமுனி கோயில் கிராமத்தில் உள்ள அதிகார வர்க்கத்தின் இருக்கும் இரண்டு பண்ணையார்கள் மோதலால் பல ஆண்டுகாலமாக அந்த ஒண்டிமுனி கோவில் திருவிழா நடைபெறாமலும் கோவில் பூட்டியை இருக்கிறது.
கதையின் நாயகன் “பரோட்டா” முருகேசனின் மகன் விஜயன் வளர்ந்து இளைஞனாகிப் படித்து முடித்து வேலை வெட்டிக்கு செல்லாமல் கிராமத்தில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி கொண்டு வருகிறான்.
கிராமத்தில் உள்ள அதிகார வர்க்கத்தின் இருக்கும் இரண்டு பண்ணையார்கள் மோதலால் இருக்கும் இருவரையும் ஒன்றிணைத்து பல ஆண்டு காலமாக முடிக்கிடந்த ஒண்டிமுனி கோவிலை திறந்து திருவிழா நடத்தப்பட்டதா?
பல ஆண்டுகள் கழித்தும் ஒண்டிமுனிக்கு நேர்ந்து விட்ட அந்த ஆட்டை கதையின் நாயகன் “பரோட்டா” முருகேசன் ஒண்டிமுனிக்குப் படையல் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.
கதையின் நாயகன் “பரோட்டா” முருகேசன் ஒண்டிமுனிக்கு நேர்ந்து விட்ட அந்த ஆட்டை ஒண்டிமுனிக்கு படைத்தாரா?, படைக்கவில்லையா?, அந்த பண்ணையார்கள் மோதல் அந்த கிராமத்து மக்களை எப்படி எல்லாம் பாதித்தது அந்த கிராமத்தில் உள்ள ஒண்டிமுனி கோவில் திறந்து திருவிழா நடந்ததா? நடக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘ஒண்டிமுனியும் நல்லபடனும்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஒண்டிமுனியும் நல்லபடனும்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகன் “பரோட்டா” முருகேசன் நடித்திருக்கிறார்.
பல திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் ஓரிரு காட்சிகளில் வந்து போகும் நடிகர் ‘பரோட்டா’ முருகேசன் இந்தப் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நல்லபாடனாக நடித்திருக்கிறார்.
நல்லபாடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பரோட்டா’ முருகேசன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
திரைப்படம் முழுக்க தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வெறும் காலிலே காடு மேடுகளில் நடந்து, அந்தக் கிராமத்தில் வாழும் கிராமத்தானாகவே திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிகிறார்.
கதையின் நாயகன் ‘பரோட்டா’ முருகேசன் மகன் கதாபாத்திரத்தில் விஜயன். எளிய கிராமத்து வீட்டுப் பையனாக அப்படியே பொருந்தி உள்ளார்.
கதையின் நாயகன் ‘பரோட்டா’ முருகேசன் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்ரா கிராமத்துப் பெண்ணாகவே பிரதிபலிக்கிறார்.
கார்த்திகேசன், முருகன், விஜய் சேனாபதி, கெளசிகா, தமிழினியன் விகடன் என திரைப்படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களில் நடிகர்கள் அனைவரும் அச்சு அசல் கிராமத்து மனிதர்களைப் போலவே பிரதிபலிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ.டி. விமல் ஒளிப்பதிவு மூலம் அந்த வறண்ட நிலப்பகுதியையும், நிலப்பரப்பை கிராமத்தில் உள்ள மனிதர்களையும் மிக யதார்த்தமாக நம் கண் முன் நிறுத்தி திரைப்படத்தை சிறப்பாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் என்டிஆர் நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக எளிமையான கிராமத்து இசையை எந்த இரைச்சலும் இன்றி அழகாகத் தந்திருக்கிறார்.
கொங்கு வட்டார மக்களின் வாழ்வியில் இருக்கும், சிறு தெய்வ வழிபாடு, கடவுள் நம்பிக்கை, நேர்த்திக் கடன் செலுத்துதல், கிடா விருந்தும் அதன் மீதான மக்களின் ஆர்வமும் என பல விஷயங்களையும் மிக நெருக்கமாகப் பேசி மிகச் சிறப்பான திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுகவனம்.
கொங்குப் பகுதி பின்னணியில் இதுவரை சொல்லப்படாத ஒரு கதையை மிக இயல்பாகச் சொல்லிப் பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர் சுகவனம்.
மொத்தத்தில், – “ஒண்டிமுனியும் நல்லபாடனும்” கொங்கு வட்டார மக்களின் வாழ்வியல் கூறும் இயல்பாக சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.











