‘நாளை நமதே’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வெண்பா கதிரேசன்.

ஒளிப்பதிவாளர் :- பிரவீன்.

படத்தொகுப்பாளர் :- ஆனந்த் லிங்ககுமார்.

இசையமைப்பாளர் :-  ஹரி கிருஷ்ணன்.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ், அம்மா கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- T சிவா, V.ரவிச்சந்திரன

ரேட்டிங் 3.5/5.

சிவகங்கை மாவட்டத்தில் அருகில் உள்ள சிவதாணுபுரம் என்ற கிராமத்தில் பட்டியல் சாதியினருக்கானதாக அரசு. அக்கிராமத்தை பஞ்சாயத்து தனித்தொகுதியாக அரசு அறிவிக்கப்படுகிறது.

சிவதாணுபுரம் எனும் கிராமத்தைத் சேர்ந்த மேல் சாதியினர், ஒடுக்கப்பட்ட கீழ் சாதியினர் குடும்பத்தை சார்ந்த யாரும் இந்த பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாதென ஊர் மக்களை மிரட்டி விட்டுச் செல்கிறார்கள்.

அதே கிராமத்தில் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகியான, கதாநாயகி மதுமிதாவின் தாத்தாவை பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் நிற்கும்படி கம்யூனிஸ்ட் கட்சியினரும், மற்றும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் அனைவரும் அவரை கட்டாயப்படுத்தி இந்த தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் செல்லும் வழியில், சுதந்திரப் போராட்ட தியாகியான, கதாநாயகி மதுமிதாவின் தாத்தா, மற்றும் அவருடன் பயணித்த அனைவரையும் வெட்டி கொளல்வதோடு மட்டுமல்லாமல், சாதி பிரச்சினையாகவும் ஊர்க்கலவரமாக மேல் சாதியை சேர்ந்தவர்கள் ஊர் கலவரமாக உருவாக்குகிறார்கள்.

சிவதாணுபுரம் மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியல் சாதியினருக்கான பஞ்சாயதது தனித் தொகுதியாக அரசு அறிவிக்கப்படுகிறது.

அந்த சிவதாணுபுரம் கிராமத்தில் மேல் சாதியை சேர்ந்த ஒருவரே 15 வருட காலமாக தலைவராக இருக்கும் காரணத்தால் அந்த கிராமம் இன்று வரை எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும் நிலையில் அந்த கிராம பஞ்சாயத்து தொகுதி மீண்டும் பட்டியல் சாதியினருக்கானதாக பஞ்சாயத்து தனித் தொகுதியாக அரசு அறிவிக்கப்பட்ட நிலையில்
15 வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான நடந்த கசப்பான சம்பவத்தால், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட கீழ் சாதியினர் விருப்பமில்லாத நிலையில், கீழ் சாதியை சேர்ந்த கதாநாயகி மதுமிதா பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார்.

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட நினைத்த
கதாநாயகி மதுமிதாவிற்கு வழக்கும் போல் பலவிதமான மிரட்டல்கள் சோதனைகள் வேதனைகள் பெண்களால் கொலைவெறி தாக்குதல் இவை அனைத்தையும் தவிர்த்து தவிடு பொடியாக்கி கதாநாயகி மதுமிதா பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?, என்பதுதான் இந்த “நாளை நமதே” திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த “நாளை நமதே” திரைப்படத்தில் கதையின் நாயகியாக மதுமிதா நடித்துள்ளார்

கதையின் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா, நமது எதிர் வீட்டு பெண் முகமாகவும், தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் திரைப்படத்தை தனது
தோளில் ஒற்றை ஆளாக சுமந்திருக்கிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா, எப்படிப்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் மிரட்டினாலும் அவைகள் அனைத்தையும் எதிர்கொள்ளும் அவரது அவருடைய மனமும் ஊர் மக்களிடம் காட்டும் பாசமும், பலவிதமான எதிர்ப்புகளை கடந்து போகும் போரட்ட குணமும் மற்றவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார்.

மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அருமையாக சர்வ சாதாரணமாக கையாண்டிருக்கும் கதாநாயகி மதுமிதாவின் இந்த நாளை நமதே திரைப்படத்தில் நடிப்பிற்காக கண்டிப்பாக விருதுகள் குவிப்பார் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்களாக நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும், நடித்திருக்கும் அனைவரும் மண்ணின் மனம் மாறாமல் கதாபாத்திரம் ஆகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவாளர் பிரவீனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிகவும் அருமையாகவும் இயல்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர்  வி.ஜி. ஹரிகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்களத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக பயணித்திருக்கிறது.

சமூகத்தில் கீழ் சாதியினர் மற்றும் மேல் சாதியினர் மக்களின் அரசியலில் , தங்கள் உரிமைகளை நிலை நிறுத்தவும் வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்பை தட்டிப் பறித்து, தங்களது மேல் சாதியினரில் அதிகார திமிரை அவர்கள் மீது திணிக்க முயற்சிப்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்து மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெண்பா கதிரேசன்

மொத்தத்தில், ‘நாளை நமதே’ திரைப்படம் அரசியல் பேசும் சிறந்த படைப்பு.

error: Content is protected !!